உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / கெஜ்ரிவால் வெளிநாடு செல்ல சுல்தான்பூர் கோர்ட் அனுமதி

கெஜ்ரிவால் வெளிநாடு செல்ல சுல்தான்பூர் கோர்ட் அனுமதி

சுல்தான்பூர்:டில்லி முன்னாள் முதல்வரும், ஆம் ஆத்மி கட்சி தேசிய ஒருங்கிணைப்பாளருமான அரவிந்த் கெஜ்ரிவால், வெளிநாடுகளுக்கு செல்ல விதிக்கப்பட்டு இருந்த தடையை நீக்கி உத்தரப் பிரதேசத்தின் சுல்தான்பூர் நீதிமன்றம் உத்தரவிட்டது. கடந்த, 2014ம் ஆண்டு நடந்த லோக்சபா தேர்தலின் போது, உத்தரப் பிரதேச மாநிலம் அமேதியில் பிரசாரம் செய்த, ஆம் ஆத்மி ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கெஜ்ரிவால், தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறியதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதுகுறித்து, அமேதி போலீசார் வழக்குப் பதிவு செய்தனர். வழக்கை விசாரித்த சுல்தான்பூர் நீதிமன்றம் அனுமதி இல்லாமல், வெளிநாடுகளுக்கு செல்ல தடை விதித்தது. பாஸ்போர்டை புதுப்பித்துக் கொள்ள கடந்த மாதம் அனு மதி அளிக்கப்பட்டது . இந்நிலையில், கடந்த 8ம் தேதி, இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தது. கெஜ்ரிவால் வெளிநாடு செல்ல விதித்திருந்த தடையை நீக்கி நீதிபதி சுபம் வர்மா உத்தரவிட்டார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி