உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / பாக்.,கிற்கு ஆதரவு: அசாமில் மேலும் 2 பேர் கைது

பாக்.,கிற்கு ஆதரவு: அசாமில் மேலும் 2 பேர் கைது

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

குவஹாத்தி: ஜம்மு - காஷ்மீரின் முக்கிய சுற்றுலா தலமான பஹல்காமில், பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் கொல்லப்பட்டனர்.இதையடுத்து பஹல்காம் தாக்குதல் குறித்து பாகிஸ்தானுக்கு ஆதரவாக பேசிய ஐக்கிய ஜனநாயக முன்னணி எம்.எல்.ஏ., அமினுல் இஸ்லாம் உள்பட 37 பேர் அசாமில் தேசத் துரோக வழக்கில் கைது செய்யப்பட்டனர். இந்நிலையில், இந்த விவகாரத்தில் பாகிஸ்தானுக்கு ஆதரவாக பேசியதாக, ஹஜோய் மற்றும் தெற்கு சல்மரா - மங்கசார் மாவட்டங்களை சேர்ந்த மேலும் இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக அசாம் முதல்வர் ஹிமந்த பிஸ்வ சர்மா தெரிவித்துள்ளார்.இது குறித்து அவர் கூறுகையில், ''இந்திய மண்ணில் பாகிஸ்தானுக்கு ஆதரவாக பேசிய தேசவிரோதிகள் 39 பேர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். பாகிஸ்தான் ஜிந்தாபாத் கோஷம் எழுப்பியவர்களின் கால்கள் முறிக்கப்படும்,'' என, எச்சரித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 5 )

VENKATASUBRAMANIAN
மே 05, 2025 08:13

இங்கேயும் நிறைய பேர்கள் கைது செய்யப்படவேண்டும். மாநில அரசு செய்யாது. விடியாத அரசு. மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்


Barakat Ali
மே 05, 2025 05:59

தமிழ்நாட்டிற்கு வாங்க ...... நிறைய பேரு கிடைப்பாங்க ..... சாரி பாகிஸ்தான் சொன்ன டீம்காவே பாக் ஆதரவு கட்சிதான் ...... இதை ஒரு பெருமையாகவே கருதுகிறார்கள் ..... இஸ்லாமிய வாக்குவங்கியை உயர்த்திக்கொள்ள இது உதவும் என்றும் கருதுகிறார்கள் .... ஆனால் அது தவறு ..... அனைத்து இஸ்லாமியர்களும் படுகொலைகள் செய்து வரும் பாக் ஐ ஆதரிப்பதில்லை ..... குர்ஆன் 5:32, ஒரு நபரைக் கொல்வது, நியாயமான பழிவாங்கலுக்காகவோ அல்லது பூமியில் குழப்பத்தைப் பரப்பியதற்காகவோ தவிர, அனைத்து மனிதகுலத்தையும் கொல்வதற்குச் சமம் என்று கூறுகிறது.


Rajarajan
மே 05, 2025 05:42

அப்போ தமிழ்நாடுன்னா மட்டும் விதிவிலக்கா ?? திருமா மீது நடவடிக்கை எதுவும் இல்லையா?? தமிழக அரசியல்வாதிகள் என்ன பேசினாலும், உள்துறை வேடிக்கை பார்க்குமா ??


essemm
மே 05, 2025 04:01

இவர்களுக்கு தண்டனை உடனே பாக்கிஸ்தான் நாட்டிற்கு நாடு கடத்தவேண்டும். அப்புறம் ஜென்மத்திற்கும் இந்தியாவினுள் இவர்களை அனுமதிக்கக்கூடாது.


Kasimani Baskaran
மே 05, 2025 03:54

தேசப்பற்றுள்ள நீதிபதியிடம் வழக்குகளை பட்டியலிட்டால் தவிர மன்னிப்பு வழங்கப்பட வாய்ப்பு அதிகம். கொலீஜியத்தில் இந்திய விசுவாசம் உள்ள நீதிபதிகள் குறைவு.


முக்கிய வீடியோ