உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / தலித் முதல்வர் அமைச்சர் பாட்டீல் ஆதரவு

தலித் முதல்வர் அமைச்சர் பாட்டீல் ஆதரவு

விஜயபுரா, : ''தலித் சமூகத்தை சேர்ந்தவர், முதல்வர் ஆக என் ஆதரவு உண்டு'' என்று, அமைச்சர் எம்.பி.பாட்டீல் கூறி உள்ளார். கர்நாடகா தொழில் அமைச்சர் எம்.பி.பாட்டீல் விஜயபுராவில் அளித்த பேட்டி:தலித் சமூகத்திற்கு விஜயபுரா 'சீட்' வழங்க வேண்டும் என்பது, நீண்டகால கோரிக்கையாக இருந்தது. இதனால் அந்த சமூகத்தின் ராஜு அல்குருக்கு வாய்ப்பு கிடைத்து உள்ளது. அவர் எம்.பி., ஆவார் என்பதில் சந்தேகம் இல்லை. தலித் முதல்வராக வேண்டும் என்று, அமைச்சர் மஹாதேவப்பா கூறியதில், எந்த தவறும் இல்லை. தலித் முதல்வர் ஆக என் ஆதரவு உண்டு. ஆனால் முதல்வர் நாற்காலி காலியாக இல்லை.இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்













அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை