உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / மசோதாக்கள் மீது ஜனாதிபதி முடிவெடுக்கும் விவகாரத்தில் நீதிமன்றம் தலையிட முடியாது: சுப்ரீம் கோர்ட்

மசோதாக்கள் மீது ஜனாதிபதி முடிவெடுக்கும் விவகாரத்தில் நீதிமன்றம் தலையிட முடியாது: சுப்ரீம் கோர்ட்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

'நீதிமன்றத்தில் ஒரு வழக்கு விசாரணை தாமதம் ஆகும்போது, அதில் தலையிட்டு ஜனாதிபதி எப்படி தீர்ப்பு வழங்க முடியாதோ, அதேபோல மசோதாக்கள் மீது முடிவு எடுக்கும் விவகாரத்தில் நீதிமன்றங்கள் தலையிட முடியாது' என, மத்திய அரசு தரப்பு உச்ச நீதிமன்றத்தில் வாதங்களை முன்வைத்தது. https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=9itdxht4&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0மாநில சட்டசபைகளில் நிறைவேற்றி அனுப்பி வைக்கப்படும் மசோதாக்கள் மீது முடிவெடுக்க, கவர்னர் மற்றும் ஜனாதி பதிக்கு காலக்கெடு விதித்து உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இந்த தீர்ப்பின் மீது, 14 கேள்விகளை எழுப்பி ஜனாதிபதி திரவுபதி முர்மு எழுதிய கடிதம் தொடர்பான வழக்கு விசாரணை, உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய் தலைமையிலான ஐந்து நீதிபதிகள் அடங்கிய அரசியல் சாசன அமர்வு முன் கடந்த இரு தினங்களாக விசாரிக்கப்பட்டு வருகிறது. மத்திய அரசு சார்பில் சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா ஆஜராகி வாதிட்டு வருகிறார். மூன்றாவது நாளாக நேற்றும் விசாரணை நடந்தது. அதன் விபரம்: துஷார் மேத்தா: கவர்னரின் அதிகார வரம்பு என்ன என்பதில் நீதிமன்றங்கள் தலையிடக் கூடாது என அரசியல் சாசனம் தெளிவாக சுட்டிக்காட்டியும், மசோதா மீது ஒப்புதல் அளிக்க உச்ச நீதிமன்றம் காலக்கெடுவை நிர்ணயித்தது சரியானது அல்ல. நம் ஜனநாயகத்தில் அதிகார வரம்புகள் தனித்தனியாக பிரிக்கப்பட்டு செயல்படுத்தப்பட்டு வருகிறது. ஒன்றுடன் ஒன்று மோதும் போது அது பிரச்னையை உருவாக்கும். எனவே, மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்கும் விவகாரத்தில் எந்த கால நிர்ணயமும் செய்ய வேண்டாம். நீதிபதிகள்: மசோதாக்களுக்கு ஒப்புதல் வழங்க காலக்கெடு எதையும் அரசியல் சாசனம் தெரிவிக்கவில்லை என்றால், மசோதாக்களுக்கு ஒப்புதல் வழங்குவதற்கான ஒரு புதிய செயல் முறையை நாம் தான் வகுக்க வேண்டும். மக்களால் தேர்ந்தெடுத்த அரசு அனுப்பும் ஒரு மசோதா எப்படி செயல்பாட்டுக்கு வராமல் இருக்க முடியும்? எவ்வளவு நாட்களுக்கு அதன் மீது எந்த முடிவையும் எடுக்காமல் கவர்னர் வைத்திருக்க முடியும்? கவர்னரின் செயல்படாத தன்மைக்கு எதிராக மாநில அரசு நீதிமன்றத்தை நாடினால், நாங்கள் அதை விசாரிக்காமல் இருக்க முடியுமா? உச்ச நீதிமன்றம் என்பது அரசியல் சாசனத்தின் பாதுகாவலர். அரசியல் அமைப்பின் பணியாளர்கள் சரியான காரணம் இல்லாமல் செயல்படாமல் இருக்கும் போது அதில் நீதிமன்றங்கள் தலையிட அதிகாரம் இல்லையா? எங்களது கைகள் கட்டப்பட்டிருக்கிறது என நீங்கள் கூற வருகிறீர்களா? துஷார் மேத்தா: சட்டசபையால் நிறைவேற்றப்படும் மசோதா அரசியலமைப்புக்கு எதிராக இருந்தாலும், தேசத்திற்கு எதிராக இருந்தாலும் அதை நிறுத்தி வைக்க முடியும். அதன் வாயிலாக அந்த மசோதாவை நீர்த்துப்போக செய்ய கவர்னருக்கு அதிகாரம் உள்ளது. கவர்னர் வெறும் காட்சி பொருளாக இருப்பவர் கிடையாது. அவர் மத்திய அரசின் பிரதிநிதி. மாநில அமைச்சர்களுக்கு ஒரு வழிகாட்டியாக, நண்பராக இருக்கக் கூடியவர்.எல்லா விவகாரங்களிலும் மாநில அமைச்சரவை எடுக்கும் முடிவுகளுக்கு கவர்னர் கட்டுப்பட வேண்டும் என கூறுவது தவறு. கவர்னர் ஒரு மசோதாவுக்கு விரைவாக ஒப்புதல் அளிக்கவில்லை என்றால், உடனடியாக நீதிமன்றத்தை நாட வேண்டும் என்பது கிடையாது. அதற்கு பல வழிகளில் தீர்வு காண முடியும்.மேலும், மசோதா விவகாரங்களில் கவர்னருக்கு அரசியல்சாசனப் பிரிவு 200 எல்லையற்ற அதிகாரத்தை வழங்கியிருக்கிறது. அதில், நீதிமன்றங்கள் தலையிட முடியாது.நீதிபதிகள்: மசோதா மீது கவர்னர் நீண்ட காலம் முடிவெடுக்காமல் இருந்தால், அதற்குள் நீதிமன்றம் தலையிட முடியாதா? அப்படியானால் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசை பாதுகாப்பது யார்? கவர்னருக்கு தான் எல்லையற்ற அதிகாரங்கள் இருக்கிறது என்றால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு செயலற்றதாகி விடாதா? மிக உயர்ந்த அரசியலமைப்பு பதவிகளில் இருந்தாலும் அவர்கள் செயல்படவில்லை என்றால், அவர்களை சரிப்படுத்தும் அதிகாரம் நீதிமன்றத்திற்கு கிடையாதா? துஷார் மேத்தா: தமிழக சட்டசபையில் நிறைவேற்றிய மசோதாக்களுக்கு உச்ச நீதிமன்றம் ஒப்புதல் வழங்கியது. அதற்குப் பின் அதை தமிழக அரசு அரசிதழில் வெளியிட்டது. இது, நிர்வாக ரீதியிலான விவகாரத்திலும் உச்ச நீதிமன்றம் நேரடியாக தலையிட்டதாக தான் பார்க்க முடியும். நீதிபதிகள்: மசோதாக்கள் மீது நான்கு ஆண்டுகளாக எந்த ஒப்புதலும் அளிக்காமல் கிடப்பில் போடப்பட்டிருக்கிறது. இப்படி முடிவெடுக்காமல் இருந்தால், நிர்வாகத்தை எப்படி அவர்கள் செயல்படுத்துவர்?துஷார் மேத்தா: ஒரு நபர் ஏழு ஆண்டுகளாக தன் வழக்கு விசாரணையை நடத்திக் கொண்டிருக்கிறார். நீதிமன்றத்தில் அந்த வழக்கு ஏழு ஆண்டுகளாக நிலுவையில் இருக்கிறது. ஆனால், அந்த வழக்கின் அதிகபட்ச தண்டனையே ஏழு ஆண்டுகள் தான். 'எனவே தன்னை வழக்கிலிருந்து விடுவிக்க வேண்டும்' என, ஜனாதிபதியிடம் அவர் முறையிட்டால் ஜனாதிபதி அவரை வழக்கில் இருந்து விடுதலை செய்து விட முடியுமா?அதைப் போலத்தான் இந்த மசோதா விவகாரங்களிலும் எங்கு முறையிட வேண்டுமோ அங்கு சென்று பேச வேண்டும். அனைத்திற்கும் நீதிமன்றத்தின் மூலமாக தீர்வு காணக்கூடாது. இப்படி காரசார விவாதம் நடந்த நிலையில், நீதிமன்ற அலுவல் நேரம் முடிந்ததை அடுத்து விசாரணை ஒத்திவைக்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 61 )

K V Ramadoss
ஆக 23, 2025 21:25

துஷார் மெத்தாவின் மேற்கோள் மிக அருமையானது. எப்படிப்பட்ட மசோதாவை கவர்னர் தேங்க வைத்தார் ? நாளை தமிழ் நாட்டு அரசு நீட் தேர்வை தமிழ் நாட்டில் நடத்த விடமாட்டோம் என்று தீர்மானம் செய்து மசோதா அனுப்பினால் அதற்கும் கவர்னர் ஒப்புதல் அளிக்க வேண்டுமா? மாநில அரசின் ஏடாகூடமான மசோதாவை எப்படி கவர்னர் கையாள வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் சொல்ல வேண்டும். இதை உச்ச நீதி மன்றம் ஒரு கௌரவ பிரச்சனையாக எடுத்துக்கொள்ளக்கூடாது.


kannan
ஆக 23, 2025 22:23

அதுதானே சட்டம், இரண்டு ரூபாய்க்கு ஆசைப்பட்டு தமிழ்நாட்டுக்கு துரோகம் செய்யாதீர். பாஜக தமிழ்நாட்டுக்கு என்று செய்த ஒரே ஒரு நல்லது சொல்லுங்கள்.


Ganapathy Subramanian
ஆக 23, 2025 09:35

ஒரு தீர்ப்பினை எதிர்த்து அப்பீல் செய்த வழக்கில், அந்த வழக்கில் உயர்நீதிமன்றத்தில் வெற்றி பெற்றவருக்கு அபராதம் விதித்தபோதே உங்களின் லட்சணம் தெரிந்துவிட்டதே? நீங்களெல்லாம் கட்டப்பஞ்சாயத்து செய்யத்தான் லாயக்கு, அப்படிப்பட்டவர்களின் பக்கம்தான் உங்கள் தீர்ப்பு இருக்கும் என்பது மக்களுக்கு விளங்கிவிட்டது. உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்புகளை ஆய்வு செய்ய ஒரு கமிட்டீ பாராளுமன்றத்தால் நியமிக்கப்படவேண்டும். அப்போதுதான் காவாய், மகாதேவன் மற்றும் யஷ்பால் போன்றவர்கள் கவனமாக தீர்ப்பு வழங்குவர்.


ManiMurugan Murugan
ஆக 22, 2025 23:44

ஒரு மசோதா 4 வருடங்களாக விட ப் பில் உள்ளது அது பயனற்ற மசோதா என்று தானே அர்த்தம் 4 வருடமாக ஒரு அரசு கண்டு க் கொள்ளாமல் தூங்கிவிட்டு இப்போது என்ன அவசர ம் இது அந்த அரசின் நிர்வாக சீர்க்கேடு தானே அதை ஏன் கேட்க வில்லை அரசியல் அமைப்பைக் காப்பாற்றும் உச்சநீதிமன்றம் அரசியல் சாசனங்களை காப்பாற்றுவது பாராளுமன்றத்திற்கு தான் முதல் உரிமை பிறகு தான் நீதிமன்றம் அரசியல் அமைப்பை மக்களை காப்பாற்றும் உச்சநீதிமன்றம் அயர்லாந்து வாரிசு திராவிட மாடல் ஓட்டை விளம்பர மோக கட்சி தி மு கா கூட்டணி டாஸ்மாக் ஊழல் வழக்கிற்கு ஏன் அமலாக்கத்த் துறைக்கு தடை விதித்தது 40 வழக்குகள் மேல் ஊழல் புகார் வழக்கு போடப்பட்டது தெரிந்தும் எந்த வழக்கின் ஆதாரம் என்று க் கேட்பது மக்களை காப்பாற்றும் பண்பா காசு க்கு ஒப்பாரி வைக்கும் பண்பா அந்த வழக்கில் அரசு தரப்பில் 40 புகார் வழக்குகளைப் பற்றி கேட்க ப் பட்டதா இங்கு நீதிமன்றத்தின் கைகள் கட்டப்பட்ட தா நிறைக்கப் பட்டதா பணத்தால் ஆயிரம் குற்றவாளி தப்பிக்கலாம் ஒரு நிரபராதி தண்டிக்கப்பக் கூடாது என்பவர்கள் தவறு என்று தெரிந்தும் தவறவிடுவது ஏனோ நீதிமன்றத்தின் கைகள் கட்டப்படவில்லை நீதிமன்றத்தின் கைகள் நிறைக்கப்படுவதைத் தான் தவறு என்கிறோம் மற்றும் நீதிமன்றம் காப்பாற்ற நினைக்கும் அரசியலைப்பை மீறும் அதாவது கவர்னர் உரை என்பது மதிப்பு தர வேண்டிய ஒன்று அங்கு தேசிய கீதம் ்இசைக்கப்பட வேண்டும் என்பது ஒரு அரசியல் சட்டம் அதை மீறும் அயர்லாந்து வாரிசு திராவிட மாடல் ஓட்டை விளம்பர மோக கட்சி திமுகா கூட்டணியின் ஒரே மசோதாபத்துகளுக்காக ்இவ்வளவு சிரமம் எடுக்க வேண்டுமா என்பதே எனதுக் கேள்வி 4 வருடமாக கிடப்பில உள்ளது என்றால் முதலமைச்சர் கவர்னரை சந்திக்க வேண்டுமா வேண்டாமா நீதிமன்றம் விளக்கம் கொடுக்குமா


K V Ramadoss
ஆக 23, 2025 21:31

சபாஷ் சரியான கேள்வி ..இதை அப்படியே உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதிக்கு அனுப்பி வைக்க வேண்டும்... அல்லது துஷார் மேதாவிற்காவது அனுப்பி வைக்க வேண்டும் with english translation


S Srinivasan
ஆக 22, 2025 22:29

sariana aappu


Ganapathy
ஆக 22, 2025 21:19

நீதிபதிகள் வக்கீலை மிரட்டுவது அய்யோக்கியத்தனத்தின் உச்சம்.


Sun
ஆக 22, 2025 20:46

அந்தக் காலத்தில் வெள்ளைக் கார நீதிபதிகள் இருந்தார்கள். பொது மக்கள் தங்கள் சிறிய பிரச்சனைகளை ஊர்ப் பெரியவர்கள் , உறவினர்கள் மூலம் தீர்த்துக் கொண்ட காலம் அது. வழக்குகளும் மிகக் குறைவாகவே இருந்தன. அதனால் வெள்ளைக்கார நீதிபதிகள் என்பதால் கோடையை அனுபவிக்க கோடை காலத்தில் நீதி மன்றங்களுக்கு விடுமுறை அளித்தனர். ஆனால் இன்று? பல்லாயிரக் கணக்கான வழக்குகள் நீதி மன்றங்களில் தேங்கிக் கிடக்கின்றன. இன்றும் அதே கோடை விடுமுறை, தசரா விடுமுறை ஆண்டில் பல நாட்கள் விடுமுறையிலேயே கழிகிறது. இதற்கெல்லாம் விடிவு காலம் எப்போது? இதற்கும் இந்த விசாரணை பெஞ்ச் சேர்த்தே நீதி வழங்கட்டும்.


பேசும் தமிழன்
ஆக 22, 2025 20:42

ஒரு வழக்கு குறிப்பிட்ட காலத்திற்குள் நீதிமன்றம் முடிக்கவில்லை என்றால்..... ஜனாதிபதி குறுக்கிட்டு.... அந்த நபரை விடுதலை செய்ய முடியுமா..... அதை போன்ற வேண்டாத செயலை தான் உச்ச நீதிமன்றம் செய்கிறது..... அது சரி என்றால்...... இதுவும் சரியாக தானே இருக்க முடியும் ???


sankaranarayanan
ஆக 22, 2025 20:37

தமிழக சட்டசபையில் நிறைவேற்றிய மசோதாக்களுக்கு உச்ச நீதிமன்றம் ஒப்புதல் வழங்கியது. அதற்குப் பின் அதை தமிழக அரசு அரசிதழில் வெளியிட்டது. இது, நிர்வாக ரீதியிலான விவகாரத்திலும் உச்ச நீதிமன்றம் நேரடியாக தலையிட்டதாக தான் பார்க்க முடியும். இனி அந்த மசோதாக்கள் செல்லாது என்றே உச்ச நீதிமன்றம் காலம் தாழ்த்தாமல் அறிவிக்க முடியுமோ அப்போதுதான் நீதி மன்றகளின் தலையிடு இல்லை என்றே அர்த்தம்


K V Ramadoss
ஆக 23, 2025 21:33

அப்போதுதான் அதை நீதி மன்றம் என்று ஒப்புக்கொள்ள முடியும்..


Iyer
ஆக 22, 2025 20:27

SC மற்றும் HC க்களில் லக்ஷக்கணக்கான வழக்குகள் தேங்கி கிடக்கின்ன்றன ஆனால் அங்குள்ள நீதிபதிகள் அவற்றில் கவனம் செலுத்துவது இல்லை


C.SRIRAM
ஆக 22, 2025 20:18

முதலில் இந்த மாதிரி தீர்ப்பை கொடுத்த நீதிபதிகளை நிரந்தர பனி நீக்கம் செய்யவேண்டும் .