உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / உயர்நீதிமன்ற நீதிபதிகள் 21 பேரை இடமாற்றம் செய்ய உச்ச நீதிமன்றம் கொலீஜியம் பரிந்துரை: அவர்கள் யார்? யார்?

உயர்நீதிமன்ற நீதிபதிகள் 21 பேரை இடமாற்றம் செய்ய உச்ச நீதிமன்றம் கொலீஜியம் பரிந்துரை: அவர்கள் யார்? யார்?

புதுடில்லி: ஐகோர்ட் நீதிபதிகள் 21 பேரை இடமாற்றம் செய்ய உச்ச நீதிமன்றம் கொலீஜியம் பரிந்துரை செய்துள்ளது. அதன் விவரம் பின்வருமாறு: 1. நீதிபதி சுஜோய் பாலை கொல்கட்டா உயர்நீதிமன்றத்திற்கு மாற்ற பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. தற்போது அவர் தெலுங்கானா உயர்நீதிமன்றத்தில் பதவி வைக்கிறார்.2. நீதிபதி வி. காமேஸ்வர் ராவை கர்நாடகா உயர்நீதிமன்றத்தில் இருந்து டில்லி உயர்நீதிமன்றத்திற்கு மாற்ற பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.3. நீதிபதி லனுசுங்கும் ஜமீர் - குவஹாத்தி உயர் நீதிமன்றத்திலிருந்து கோல்கட்டா உயர் நீதிமன்றத்திற்கு மாற்ற பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.4. நீதிபதி மனாஷ் ரஞ்சன் பதக்கை குவஹாத்தி உயர் நீதிமன்றத்திலிருந்து ஒடிசா உயர் நீதிமன்றத்திற்கு மாற்ற பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.5.நீதிபதி நிதின் வாசுதேவ் சாம்ப்ரேவை மும்பை உயர் நீதிமன்றத்திலிருந்து டில்லி உயர் நீதிமன்றத்திற்கு மாற்ற பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.6. நீதிபதி அஸ்வனி குமார் மிஸ்ராவை அலகாபாத் உயர் நீதிமன்றத்திலிருந்து பஞ்சாப் அல்லது ஹரியானா உயர் நீதிமன்றத்திற்கு மாற்ற பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.7.நீதிபதி சுமன் ஷியாமை குவஹாத்தி உயர் நீதிமன்றத்திலிருந்து மும்பை உயர் நீதிமன்றத்திற்கு மாற்ற பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.8. நீதிபதி சஞ்சீவ் பிரகாஷ் சர்மாவை பஞ்சாப் அல்லது ஹரியானா உயர் நீதிமன்றத்திலிருந்து ராஜஸ்தான் உயர் நீதிமன்றத்திற்கு மாற்ற பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.9. நீதிபதி விவேக் சவுத்ரியை அலகாபாத் உயர் நீதிமன்றத்திலிருந்து டில்லி உயர் நீதிமன்றத்திற்கு மாற்ற பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.10. நீதிபதி தினேஷ் குமார் சிங்யை கேரளா உயர் நீதிமன்றத்திலிருந்து கர்நாடக உயர் நீதிமன்றத்திற்கு மாற்ற பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.11. நீதிபதி விவேக் குமார் சிங்யை சென்னை உயர் நீதிமன்றத்திலிருந்து மத்தியப் பிரதேச உயர் நீதிமன்றத்திற்கு மாற்ற பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.12. நீதிபதி பட்டு தேவானந்த் சென்னை உயர் நீதிமன்றத்திலிருந்து ஆந்திரா உயர் நீதிமன்றத்திற்கு மாற்ற பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.13. நீதிபதி ஓம் பிரகாஷ் சுக்லாவை அலகாபாத் உயர் நீதிமன்றத்திலிருந்து டில்லி உயர் நீதிமன்றத்திற்கு மாற்ற பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.14. நீதிபதி ஸ்ரீ சந்திரசேகரை ராஜஸ்தான் உயர் நீதிமன்றத்திலிருந்து மும்பை உயர் நீதிமன்றத்திற்கு மாற்ற பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.15. நீதிபதி சுதிர் சிங்யை பஞ்சாப் உயர் நீதிமன்றத்திலிருந்து பாட்னா உயர் நீதிமன்றத்திற்கு மாற்ற பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.16. நீதிபதி அனில் ஷேதர்பாலை ஹரியானா உயர் நீதிமன்றத்திலிருந்து டில்லி உயர் நீதிமன்றத்திற்கு மாற்ற பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.17. நீதிபதி அருண் குமாரை ராஜஸ்தான் உயர் நீதிமன்றத்திலிருந்து டில்லி உயர் நீதிமன்றத்திற்கு மாற்ற பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.18. நீதிபதி ஜெயந்த் பானர்ஜியை அலகாபாத் உயர் நீதிமன்றத்திலிருந்து கர்நாடக உயர் நீதிமன்றத்திற்கு மாற்ற பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.19. நீதிபதி சி. சுமலதாவை கர்நாடக உயர் நீதிமன்றத்திலிருந்து தெலுங்கானா உயர் நீதிமன்றத்திற்கு மாற்ற பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.20. நீதிபதி லலிதாவை கர்நாடக உயர் நீதிமன்றத்திலிருந்து தெலுங்கானா உயர் நீதிமன்றத்திற்கு மாற்ற பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.21. நீதிபதி அன்னிரெட்டியை பாட்னா உயர் நீதிமன்றத்திலிருந்து தெலுங்கானா உயர் நீதிமன்றத்திற்கு மாற்ற பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 4 )

prakash
மே 28, 2025 22:40

கொலாஜியம் என்ற அமைப்பு சட்டப்படி அமைக்கப்படவில்லை. மத்திய அரசாங்கம் அதை அங்கீகரிக்கவும் இல்லை. ஜனாதிபதி இந்த கொலாஜியத்தை கலைத்துவிட்டு புதியதாக ஒரு அமைப்பை மத்திய அரசின் உதவியுடன் அமைக்க வேண்டும். எதிர்க்கும் நீதிபதிகளை டிஸ்மி செய்ய வேண்டும்


Gajageswari
மே 28, 2025 05:35

சென்னை உயர்நீதிமன்றத்தில் நீதிபதிகள் 5வர் பதவி ஓய்வு. ஒருவர் இயற்கை எய்தினார் கடந்த ஒரு மாதத்தில். எப்போது நிரப்பப்படும்


Gajageswari
மே 28, 2025 05:33

சென்னை உயர்நீதிமன்றத்தில் நீதிபதிகள் பணி ஓய்வு. ஒருவர் இயற்கை எய்தினார் கடந்த ஒரு மாதத்தில். இவ்வளவு இடங்கள் காலியாக உள்ளது


சுந்தரம் விஸ்வநாதன்
மே 27, 2025 19:51

வீட்டுல கட்டு கட்டா கரன்சி வச்சிருந்த இப்போ அலகாபாத் நீதிமன்றத்துல இருக்குற பெரிய ஐயாவுக்கு உச்சா நீதிமன்றத்துக்கு பதவி உயர்வோட கூடிய மாற்றம் கிடைக்கலையா