உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / நாட்டில் அதிகரிக்கும் டிஜிட்டல் கைது மோசடிகள்: சுப்ரீம் கோர்ட் கவலை

நாட்டில் அதிகரிக்கும் டிஜிட்டல் கைது மோசடிகள்: சுப்ரீம் கோர்ட் கவலை

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: டிஜிட்டல் கைது என மோசடி செய்து ஏமாற்றும் நிகழ்வுகள் குறித்த புகாரை தாமாக விசாரணைக்கு எடுத்துக் கொண்ட சுப்ரீம் கோர்ட், மத்திய அரசுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. இந்த வழக்கில் உதவும்படி மத்திய அரசின் அட்டர்னி ஜெனரலிடம் தெரிவித்துள்ளது. நாட்டில் அனைத்து மாநிலங்களிலும் டிஜிட்டல் கைது என மிரட்டி பணம் பறித்து ஏமாற்றும் நிகழ்வுகள் அரங்கேறி வருகிறது. குறிப்பாக முதியவர்கள் இதனால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். ஹரியானா மாநிலம் அம்பாலாவைச் சேர்ந்த முதியவர் ஒருவர் கடந்த செப்., 3 முதல் செப்., 16 வரையிலான டிஜிட்டல் கைது முறையில் ஏமாந்து பணத்தை இழந்துள்ளார். இது குறித்து அவர் தெரிவித்த புகாரை அடிப்படையாக வைத்து சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள் சூர்யகாந்த் மற்றும் ஆர்யமாலா பக்ஷி அமர்வு தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்துக் கொண்டது.அப்போது நீதிபதிகள் கூறியதாவது: சிபிஐ அதிகாரிகள் மற்றும் அரசு அதிகாரிகள் எனக் கூறிக்கொண்டு தொலைபேசி அல்லது வீடியோ அழைப்புகள் மூலம் மோசடியாளர்கள் தங்களை தொடர்பு கொள்கிறார்கள் என பாதிக்கப்பட்டவர்கள் தெரிவித்துள்ளனர். சுப்ரீம் கோர்ட் உத்தரவு எனக்கூறி மோசடியாளர்கள் சில ஆவணங்களை வாட்ஸ்அப் அல்லது வீடியோ அழைப்பில் காட்டி கைது செய்யப்போவதாகவும், சொத்துக்களை முடக்கப் போவதாகவும் மோசடியாளர்கள் மிரட்டுகின்றனர். இதனை வைத்து ரூ.50 லட்சம் முதல் ரூ.1 கோடி வரை பாதிக்கப்பட்டவர்களின் வங்கிக்கணக்கில் இருந்து மோசடியாளர்கள் தங்களது வங்கிக்கணக்கிற்கு பணத்தை மாற்றுகின்றனர். இது குறித்த விசாரணையை துரிதப்படுத்தும்படி மாநில போலீசாருக்கு அறிவுறுத்தி உள்ளோம். போலி ஆவணங்கள் மற்றும் சுப்ரீம் கோர்ட் அல்லது ஐகோர்ட்டின் முத்திரை பெயரை கிரிமினல்கள் பயன்படுத்துவது கவலையளிக்கிறது. இது போன்ற நிகழ்வுகள் அமைப்புகளின் கண்ணியத்தின் மீது நடத்தப்படும் நேரடி தாக்குதல். அத்தகைய கிரிமினல் நடவடிக்கைகளை வழக்கமான அல்லது சாதாரணமானதாக எடுத்துக்கொள்ள முடியாது எனத் தெரிவித்தனர். இது குறித்து மத்திய அரசு, சிபிஐக்கு நோட்டீஸ் அனுப்பி உள்ளதுடன், இந்த வழக்கில் தங்களுக்கு உதவும்படி மத்திய அரசின் அட்டர்னி ஜெனரல் வெங்கட்ரமணியிடம் நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 9 )

jss
அக் 18, 2025 14:31

சுப்ரீம் கோர்ட் டுஜிட்டல் கைது என்று ஒன்றும் கிடையாது என்று தன்னிலை விளக்கம் கொடுக்கலாமே. அல்லது மத்திய உள் நாட்டு விவகீர மந்திரியை கொடுக்கச்சொல்லலாமே. அதனால் மீண்டும் இத்தகைய அசம்பாவிதங்கள் , நிகழ்வுகளை தடுக்கலாமே. அதை விட்டு வழக்கை துரிதப்படுத.தங்கள் எனக் கூறுவது நகைப்புக்கிறுயது


அப்பாவி
அக் 18, 2025 06:25

புடிபட்டவங்களை தண்டிக்க துப்பில்லை.


Krishna
அக் 17, 2025 22:08

Big&RealCriminals incl Cyber-DigitalArrest Criminals Must be Punished Fast& Mercilessly Without Vested CaseHungryBias /Advocate Brotherhood


GMM
அக் 17, 2025 19:11

சுப்ரீம் கோர்ட் உத்தரவு எனக்கூறி மோசடியாளர்கள் சில ஆவணங்களை வாட்ஸ்அப் அல்லது வீடியோ அழைப்பில் காட்டி மிரட்டி பணம் பறிக்கிறார்கள். தவறுக்கு உச்ச சுயாட்சி பணி தான் முக்கிய காரணம்.? கட்டுபாடு இல்லாத வக்கீல் நடவடிக்கை. வக்கீல் பணம் சம்பாதிக்க நீதிமன்றம் பயன் படுத்த பட்டு வருகிறது. கணவர், மனைவி விவாக வழக்கு என்றால் திருமண பதிவாளர் தகவல் பெற வேண்டும். சொத்து வழக்கு என்றால், சார் பதிவாளர், தாசில்தார் தகவல் கொடுக்க வேண்டும். வழக்கில் அரசு அலுவலகம் சம்பந்தப்பட்டு இருந்தால், அதன் அதிகாரி விவரம் அறிய வேண்டும்.


KRISHNAN R
அக் 17, 2025 18:56

டிஜிட்டல் முறை வரலாம் நல்லது.. ஆனால் தரவு பாதுகாப்பு என்ற போது அரசாங்கம் மௌனம், வங்கி மௌனம், போலீஸ் மௌனம்,,,, நஷ்டம் என்று வந்தால் மக்கள் பாடு.....?


chennai sivakumar
அக் 17, 2025 18:26

முதலில் தண்டனைகளை கடுமை ஆக்குங்கள். ஹியூமன் ரைட் கமிஷன் வெங்காயம் இதுக்கு எல்லாம் கவலைப்படாமல் சட்டத்தை அமைக்க உத்தரவிடும். பிறகு பாருங்கள். அதை விட்டு விட்டு கவலைப்பட்டால் ஒரு டீ மற்றும் சாரிடோன் சாப்பிட்டு விட்டுத் தூங்குங்கள். எல்லாம் சரியாக போய்விடும்


Nagarajan D
அக் 17, 2025 16:53

கவலை பட்டு ஒன்னும் ஆகா போவதில்லை.. தண்டனை கடுமையா குடுக்கணும்... முறையீடு மேல் முறையீடு இடைக்கால தடை, ஜாமீன் வழங்குவதை மொத்தமாக நிறுத்தணும்.. நீதிமன்றங்களுக்கு அரசு பணம் தருகிறது எங்களுக்கு நாங்கள் உழைத்தால் தான் பணம்...


Premanathan S
அக் 17, 2025 21:12

சரியான கருத்து தனி மனிதன் கவலைப்படுவதில் அர்த்தமுண்டு அதிகாரம் உள்ள கோர்ட்டுகள் நடவடிக்கைதான் எடுக்க வேண்டும்


RAMESH KUMAR R V
அக் 17, 2025 16:33

எந்த இடத்திலும் ஓட்டைகள் இல்லாத கடுமையான சட்டங்கள் இயற்றப்பட வேண்டும்.