| ADDED : செப் 09, 2024 11:43 AM
புதுடில்லி: ஆசிரியர் பணி நியமன ஊழல் வழக்கில், அமலாக்கத்துறை சம்மனை எதிர்த்து திரிணமுல் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், மம்தா மருமகனுமான அபிஷேக் பானர்ஜி தாக்கல் செய்ய மனுவை சுப்ரீம் கோர்ட் தள்ளுபடி செய்தது.மேற்குவங்க மாநிலத்தில் கடந்த 2014ம் ஆண்டு முதல் 2021ம் ஆண்டுகளில் ஆசிரியர்கள் பணி நியமனத்தில் ஊழல் நடந்ததாக புகார் எழுந்தது. சி.பி.ஐ., வழக்குப்பதிவு செய்து, முதல்வர் மம்தா பானர்ஜி மருமகனும், திரிணமுல் காங்கிரஸ் கட்சி மூத்த தலைவருமான அபிஷேக் பானர்ஜியிடம் விசாரணை நடத்தியது. இந்த வழக்கில் நேரில் ஆஜர் ஆகுமாறு அபிஷேக் பானர்ஜிக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பி இருந்தது.இதனை எதிர்த்து, அபிஷேக் பானர்ஜி மற்றும் அவரது மனைவி ருஜிரா பானர்ஜி சுப்ரீம் கோட்டில் மனு தாக்கல் செய்தனர். இந்த மனு நீதிபதிகள், திரிவேதி மற்றும் சந்திர சர்மா ஆகியோர் அடங்கி அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அபிஷேக் அமலாக்கத்துறை சம்மனை பல முறை தவிர்த்துள்ளார். இதனால் நீதிபதிகள் அமலாக்கத்துறை சம்மனை எதிர்த்த மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.