உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / நகர்ப்புற விரிவாக்கத்தால் மனித -வனவிலங்கு மோதல் அதிகரிப்பு: சுப்ரீம் கோர்ட் நீதிபதி கவலை

நகர்ப்புற விரிவாக்கத்தால் மனித -வனவிலங்கு மோதல் அதிகரிப்பு: சுப்ரீம் கோர்ட் நீதிபதி கவலை

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

திருவனந்தபுரம்: 'விரைவான நகர்ப்புற விரிவாக்கங்களால் மனித-வனவிலங்கு மோதல்கள் அதிகரிக்க வழிவகுத்தது,' என்று சுப்ரீம் கோர்ட் நீதிபதி சூர்யகாந்த் கூறினார்.கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் தேசிய சட்ட சேவைகள் ஆணையத்தால் மாநில சட்டமன்றத்தில் ஏற்பாடு செய்யப்பட்ட மனித - வனவிலங்கு மோதல் மற்றும் சகவாழ்வு குறித்து, இன்று இரண்டு நாள் பிராந்திய மாநாட்டை சுப்ரீம் கோர்ட்டின் இரண்டாவது மூத்த நீதிபதியான சூர்யகாந்த் துவக்கி வைத்தார்.நீதிபதி சூர்ய காந்த் பேசியதாவது:'நவீன யுகத்தில் விரைவான தொழில்மயமாக்கல் மற்றும் நகர்ப்புற விரிவாக்கம், நகரங்களும் பரவி வன நிலத்தின் விழிம்புக்கு செல்ல க்காரணமாக அமைந்து, மனித-வனவிலங்கு மோதல்கள் அதிகரித்து வருகிறது.இத்தகைய விரிவாக்கத்தின் 'தவிர்க்க முடியாத விளைவு' மனிதர்களும் வனவிலங்குகளும் 'இயற்கைக்கு மாறான அருகாமையில்' வாழ வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர்,மனித குடியிருப்புகள் வனப்பகுதிகளை ஆக்கிரமித்து வாழ்விடங்கள் சுருங்கும்போது, ​​மனித செயல்பாடுகளுக்கும் வனவிலங்குகளுக்கும் இடையிலான இயற்கையான பிரிப்பு சரிந்து, அடிக்கடி தொடர்பு புள்ளிகள் உருவாகி மோதலாக மாறுகிறது,'இந்த விசயத்தில் பாதிக்கப்பட்டவர்கள் சமூகத்தின் பாதிக்கப்படக்கூடிய பிரிவினரான பழங்குடியினர் மற்றும் ஓரங்கட்டப்பட்டவர்கள் என்றும், அவர்கள் தங்கள் சட்ட உரிமைகள் பற்றி அறியாதவர்கள்.விழிப்புணர்வு இல்லாத, நிதி நெருக்கடிகள் அதிகரிப்பு, ஆகிய எந்த வழிகாட்டுதலோ அல்லது உதவியோ இல்லாமல், 'அவர்கள் உரிமைகளைத் தொடரவோ, இழப்பீடு கோரவோ அல்லது கருணையுடன் கூடிய நியமனங்கள் அல்லது ஊனமுற்றோர் ஆதரவு போன்ற கூடுதல் நிவாரணங்களைத் தேடவோ சக்தியற்றவர்களாக இருக்கிறார்கள்,அவர்கள் உதவியின்றி தவிக்க அனுமதிப்பது மனித லட்சியங்களின் இணை சேதமாக அவர்களைக் குறைப்பதாகும்.வனவிலங்குகள் செழிப்பை உறுதி செய்யும் அதே வேளையில், பாதுகாப்பு, ஸ்திரத்தன்மை மற்றும் மனித சமூகங்களின் நல்வாழ்வும் கருத்தில் கொள்ள வேண்டிய முக்கியமான அம்சங்களாகும்.இவ்வாறு நீதிபதி சூர்யகாந்த் பேசினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 7 )

ஆரூர் ரங்
ஆக 30, 2025 21:42

அப்போ.. முதல்ல காடுகளுக்கு அருகேயுள்ள ரிசார்ட்களை அகற்ற உத்தரவிட வேண்டும். (அரசை விட கோர்ட்தான் அதிகாரமிக்கது என்று சமீபகால தீர்ப்புகள் மறைமுகமாக காட்டுகின்றன?)


Nagarajan D
ஆக 30, 2025 21:49

அவங்க கப்பம் கட்டிவிட்டால் நீதியற்ற நிதியரசர்களுக்கு வாய்தா கொடுத்தே வழக்கை முடித்துவிடுவானுங்க


Velayutham rajeswaran
ஆக 30, 2025 21:25

நல்ல கவலை


Nagarajan D
ஆக 30, 2025 21:13

ஜாமீன் தருவதை பற்றியோ இடை கால தடை போடுவதை பற்றியோ இன்னும் நீங்கள் கவலை பட ஆரம்பிக்கவேயில்லை. நீங்க அதை செய்யுங்க ஆபிசர் போதும் மக்களுக்கு அதில் தான் கவலை. நீங்க உங்க வேலைய தவிர எல்லாத்துக்கும் கவலை படுறீங்க


M Ramachandran
ஆக 30, 2025 20:58

உங்களுக்கு இயற்கைய்ய வழங்கிகளையய அழிக்கும் கேரளா தமிழகத்தில் உள்ள காடுகாளை அழிக்கும் அவர்கள் கட்சியாட்கள் இந்த அரசெ உரு துணையாக யிருப்பதைய்ய பற்றிய கவலை உங்களுக்கு இருக்கா. தமிழகத்தில் ஏமாற்று மணல் கொள்ளை கனிம மணல் கொள்ளை மற்றும் தமிழகம் கேரளா மலைகளில் இருக்கும் காடுக்களை உள்ள மரங்களை வெட்டி சாய்த்து .ஒரு புறம் சொத்து சேர்த்தால் மற்றும் காட்சியாட்களிய்ய குடி அமர்த்தி ஒட்டு பெருக்குதல் வேலைய்ய செய்கிறார்களெ இதை பற்றியாவது சிந்தித்து உண்டா?


அப்பாவி
ஆக 30, 2025 20:11

ஆஹா... இவ்ளோ சீக்கிரம் புரிஞ்சிக்கிட்டாரே...


V Venkatachalam
ஆக 30, 2025 22:01

ஆஹா நீதிபதி புரிஞ்சுக்கிட்டாருங்கிறதை புரிஞ்சுக்கிறது சாதாரண விஷயமல்ல. அதுக்கு டபுள் மூளை வேணும்.


புதிய வீடியோ