வாசகர்கள் கருத்துகள் ( 4 )
நாடே ஆபாச களஞ்சியமா இருக்கு, கொஞ்சம் சுறுசுறுப்பா ஏதாவது செஞ்சா தேவலை, அவங்க மத்திய அரசு எங்கேயோ 30 பேர சுட்டு போட்டாங்களாம் அது மேல கவலையா இருக்காங்க, நீங்க வேற இந்த நேரத்தில தமாஷ் பண்ணிக்கிட்டு
அப்படியே ரியாலிட்டி ஷோ என்ற பெயரில் குழந்தைகள் வைத்து பாட்டு போட்டி தொலைக்காட்சிகளில் நடத்துவதையும் தடை செய்ய வேண்டும். 7 வயது குழந்தைகள் முதல் 14 அல்லது 15 வயது குழந்தைகளுக்கு சினிமா காதல் பாடல்கள் கொடுத்து பாடிச் செய்கிறார்கள். அந்த பாடல் பாடப்படும் போது பின்னால் அசிங்கமாக வயது வந்த இளைஞர்கள் நடனம் ஆட வைக்கின்றனர். இரட்டை அர்த்தம் தொனிக்கும் பாடல்களை குழந்தைகள் வைத்து பாட வைக்கின்றனர். இதில் காதல் ரசம் தோய திரைப்படத்தில் எப்படி பாடல் உள்ளது என்று கூறி அது போல பாட வேண்டும் என்று நடுவர்கள் என்று சொல்லிக்கொள்ளுவர்கள் சொல்லி கொடுப்பது கொடுமையிலும் கொடுமை. இரண்டு தினங்களுக்கு முன் ஒரு தொலைக்காட்சியில் அந்த நடுவருக்கு வயது 45 மேல் இருக்கும். ஒரு சிறுவன் ஒரு சினிமா காதல் பாடல் பாட அவனை பாரட்ட அந்த நடுவர் மேடைக்கு வந்து சிறுவனிடம் டேய் என்னை பார்த்து பார்த்து பாடும் போது எனக்கு ஷையா இருந்ததுடா என்று கூறி அச்சிறுவனை புகழ்ந்தார். நடுவர் வயது 50 சிறுவன் வயது 10 இது சரியா. சின்னஞ்சிறு குழந்தைகளை பெரியவர்கள் உடன் காதல் பாடல்கள் பாட வைக்கிறார்கள். அதுவும் அந்த குழந்தையின் முக பாவங்கள் செய்கைகள் அப்பாடலுக்கு ஏற்ப இருக்க சொல்லி கொடுத்து பாட வைக்கிறார்கள். தாங்கள் ஒரு குழந்தையை பிஞ்சிலேயே பழுக்க வைக்கிறோம் என்று குற்ற உணர்ச்சி ஒருவரிடமும் இல்லை. அந்த நிகழ்ச்சியில் உள்ள அனைவரும் காசு பணம் துட்டு மணி மணி என்ற ஒரே குறிக்கோள் தான். இதில் மிகவும் வேதனையான விஷயம் என்னவென்றால் அந்த குழந்தையை பெற்றெடுத்த தாய் தந்தையர் அதை பார்த்து ஆனந்த கண்ணீர் விடுவது. கலி காலம். வீடுகளில் இதனை பார்க்கும் குழந்தைகள் பள்ளிக்கு சென்று இது போல் நடக்க முயற்சி செய்வார்கள். இந்த நிகழ்ச்சி பார்த்த ஆசிரியர்கள் குழந்தைகளிடம் பாலியல் சீண்டல்கள் செய்கிறார்கள். காலம் மாறிவிட்டது.
நிச்சயமாக இதற்கு தீர்வு வேண்டும். அதுவும் ஆபாச வார்த்தைகள் ஏறத்தாழ எல்லா வெப் தொடர்களிலும் சர்வ சாதாரணமாக கேட்க முடிகிறது. குடும்பத்துடன் பார்க்கதான் ஓடிடி தளம். இதனை மனதில் வைத்து வெப் தொடர்களை உருவாக்கினால் நல்லது
ஆன்லைன்.. தளங்களில் ஆபாச காட்சிகள் தடை அவசியம். வழக்கு தொடுத்தவருக்கு அக்கறை அதிகம் இருப்பதால் ஒரு தடுப்பு வழி புலப்படும். அதனை மனுவில் குறிப்பிடுவது நீதிபதிக்கு உதவியாக இருக்கும். மத்திய அரசுக்கு வழிகாட்டியாக இருக்கும். பொதுநல வழக்கு தனக்கு புலப்படும் தீர்வை மனுவில் சொல்ல வேண்டும்.