உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / துணை வேந்தர் நியமன வழக்கில் கவர்னருக்கு சுப்ரீம் கோர்ட் நோட்டீஸ்

துணை வேந்தர் நியமன வழக்கில் கவர்னருக்கு சுப்ரீம் கோர்ட் நோட்டீஸ்

பல்கலைகளில் துணைவேந்தர்களை நியமிக்க தமிழக அரசுக்கு அதிகாரம் வழங்கிய சட்டத்தை நிறுத்தி வைத்த சென்னை உயர் நீதிமன்ற உத்தரவுக்கு எதிரான தமிழக அரசின் மனு மீது பதிலளிக்க, கவர்னர் ரவி, பல்கலை மானியக் குழுவான யு.ஜி.சி., அமைப்புக்கு, உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. தமிழகத்தில் உள்ள பல்கலைகளில் துணைவேந்தர்களை நியமிக்கும் அதிகாரத்தை மாநில அரசுக்கு வழங்குவது, பல்கலைகளில் வேந்தராக மாநில முதல்வரை நியமிப்பது உள்ளிட்ட பல்வேறு முக்கிய மசோதாக்களை, கவர்னரின் ஒப்புதலுக்காக தமிழக அரசு அனுப்பி வைத்திருந்தது.

எதிர்ப்பு

ஆனால், மசோதாக்களுக்கு கவர்னர் ஒப்புதல் அளிக்காமல் கிடப்பில் போட்டு வைத்திருந்ததற்கு எதிராக, தமிழக அரசு சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம், தமிழக அரசின் மசோதாக்களுக்கு, தன் சிறப்பு அதிகாரத்தை பயன்படுத்தி ஒப்புதல் வழங்கி இருந்தது. இதையடுத்து, பல்கலை களில் துணைவேந்தர்களை நியமிக்க தமிழக அரசுக்கு வழங்கப்பட்ட அதிகாரத்தை பயன்படுத்தி, அடுத்தடுத்த நடவடிக்கைகளில் தி.மு.க., அரசு இறங்கியது. இந்நிலையில், துணைவேந்தர்களை நியமிப்பதற்கான இந்த குறிப்பிட்ட சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து, பா.ஜ.,வைச் சேர்ந்த வழக்கறிஞர் வெங்கடாசலபதி என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.இந்த மனுவை விசாரித்த சென்னை உயர் நீதிமன்ற விடுமுறை கால சிறப்பு அமர்வு நீதிபதிகள் ஜி.ஆர்.சுவாமிநாதன், வி.லட்சுமி நாராயணன் ஆகியோர், தமிழக அரசுக்கு வழங்கப்பட்ட அதிகாரத்தை இடைக்காலமாக நிறுத்தி வைத்து உத்தரவிட்டனர்.ஏற்கனவே வெங்கடாசலபதி தொடர்ந்த மனுவை உச்ச நீதிமன்றத்திற்கு மாற்றக்கோரி மனு தாக்கல் செய்திருப்பதால், இடைக்கால உத்தரவு பிறப்பிக்கக் கூடாது என, தமிழக அரசு தரப்பில் முன்வைக்கப்பட்ட வாதத்தை நீதிபதிகள் ஏற்கவில்லை. இந்நிலையில், சென்னை உயர் நீதிமன்ற நடவடிக்கைக்கு எதிராக, உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனு, நீதிபதிகள் பி.வி.நரசிம்மா, ஆர்.மகாதேவன் முன், நேற்று முன்தினம் விசாரணைக்கு வந்தது. தமிழக அரசு சார்பில் மூத்த வழக்கறிஞர்கள் அபிஷேக் மனு சிங்வி, ராகேஷ் திவேதி வில்சன் ஆகியோர் ஆஜராகினர். அப்போது அவர்கள், 'இந்த வழக்கு தொடர்பாக ஏற்கனவே உச்ச நீதிமன்றத்தில் முறையிட்டுள்ளோம். அதை, சென்னை உயர் நீதிமன்றம் கவனத்தில் கொள்ளாமல் இடைக்கால தடை விதித்துள்ளது; இது, உச்ச நீதிமன்றத்தின் உத்தரவுக்கு எதிரானது. 'இப்படி ஒரு முக்கியத்துவம் வாய்ந்த வழக்கை விசாரணைக்கு எடுத்து, அவசர அவசரமாக இடைக்கால உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது' என, வாதங்களை முன்வைத்தனர்.

இடைக்கால தடை

அப்போது, பல்கலைக்கழக மானியக் குழு சார்பில் ஆஜரான மத்திய அரசின் சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா, ''தமிழக அரசு தாக்கல் செய்துள்ளது டிரான்ஸ்பர் மனு தான். இதன் மீது உயர் நீதிமன்ற விசாரணைக்கு தடை கேட்பதை ஏற்க முடியாது,'' என எதிர்ப்பு தெரிவித்தார். இதையடுத்து, தமிழக அரசு சார்பில் ஆஜரான வழக்கறிஞர்கள், 'ஜூலை இரண்டாவது வாரத்தில் சென்னை உயர் நீதிமன்றத்தில் இதே வழக்கு மீண்டும் விசாரணைக்கு வர இருப்பதால், இடைக்கால தடை விதிக்க வேண்டும்' என வலியுறுத்தினர்.இதையடுத்து நீதிபதிகள், 'தமிழக அரசு தொடர்ந்த மேல்முறையீட்டு மனு மீது தமிழக கவர்னர், யு.ஜி.சி., உள்ளிட்ட எதிர்மனுதாரர்கள் நான்கு வாரத்திற்குள் பதில் அளிக்க வேண்டும்' என நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டனர். மேலும், சென்னை உயர் நீதிமன்ற உத்தரவுக்கு இடைக்கால தடை விதிப்பது குறித்து அடுத்த விசாரணையின் போது முடிவு செய்யலாம் என்றும் அறிவித்தனர்.- டில்லி சிறப்பு நிருபர் -


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 27 )

Bala
ஜூலை 30, 2025 11:32

பாஜக எருமைகளை வரும் தேர்தலில் ஒட்டு மொத்தமாக செருப்படி கொடுத்து வீட்டுக்கு அனுப்ப வேண்டும். அப்போது தான் தமிழ் நாட்டிற்கு விடிவுகாலம் வரும்.


Mahendran Puru
ஜூலை 11, 2025 11:02

இந்த விஷயத்தில் பாதிக்கப் படுவது மாணவர்களே. இதை புரிந்து கொள்ளாத வக்கீல்கள் ஜட்ஜுகள். என்ன தடை உத்தரவோ ஏன் தடை உத்தரவோ.


c.mohanraj raj
ஜூலை 06, 2025 20:01

ஒரு நான்கு ஐந்து நீதிபதிகளையாவது வீட்டிற்கு அனுப்பினால் தான் இந்த பிரச்சனை முடிவுக்கு வரும்


மூர்க்கன்
ஜூலை 11, 2025 16:51

மொத்தமா நீதி மன்றத்தையே நாக் பூருக்கு ஷிப்ட் பண்ணிட்டால் என்ன??


spr
ஜூலை 06, 2025 18:30

இதுவரை மத்திய அரசுக்கும் உச்ச நீதிமன்றத்திற்கும் இடையேதான் போராட்டம் இப்பொழுது உச்ச - உயர் நீதிமன்றங்களுக்கிடையேவே போராட்டமா? ஏற்கனவே ஆளுநரின் அதிகாரத்தைக் கையிலெடுத்த நீதிமன்ற முடிவே தவறு, ஆளுநருக்கு அறிவுறுத்தி, அவரையே மசோதாவை அனுமதிக்கச் செய்திருக்க வேண்டும் அந்த வகையில், அப்படிச் செய்யாதது, ஒரு தவறான முன்னுதாரணம். பொதுவாகவே வாதத்தின் அடிப்படையில், சந்தர்ப்ப சாட்சியங்களின் அடிப்படையில் வழங்கப் படும் தீர்ப்பு நியாயம் நேர்மையின் அடிப்படையில் அல்ல என்றாலும் உயர் நீதிமன்றத்தீர்ப்பை உச்ச நீதிமன்றம் மாற்றுவது முறையல்ல. அந்த வகையில், இப்போதும் இது ஒரு தவறான முன்னுதாரணம். சட்டத்துறை கவனிக்க வேண்டுவது அவசியம்


RAAJ68
ஜூலை 06, 2025 16:32

துணை வேந்தர் நியமன வழக்கில் ஆளுநருக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ். ஆழ்ந்த உறக்கத்தில் மத்திய அரசு என்று சேர்த்து போடும்.


தேவதாஸ் புனே
ஜூலை 06, 2025 14:59

நாட்டிற்க்கு முக்கியமானது கல்வி துறை, இவர்கள் அதை நாசப்படுத்துகிறார்கள்..... எங்கே போய் முடியுமோ.....


சிகண்டி ரங் aka ஆரியா ப்பசங்க
ஜூலை 06, 2025 11:53

மெட்ராஸ் உயர்நீதிமன்ற இந்த ரெண்டு மஹாப்பிரபுக்கள் அட்டகாசம் நாளுக்கு நாள் எல்லை மீறி போகுது ....இதுக்கெல்லாம் காலம் நிச்சயம் சரியான பாடத்தை கற்றுக்கொடுக்கும் ...


venugopal s
ஜூலை 06, 2025 11:37

மத்திய பாஜக அரசுக்கும், ஆளுநருக்கும் குட்டு வைத்த உச்ச நீதிமன்றம் அடுத்து உயர் நீதிமன்றத்துக்கும் ஒரு குட்டு பலமாக வைத்தால் தான் அடங்குவார்கள் போல் தெரிகிறது!


Barakat Ali
ஜூலை 06, 2025 20:08

ஒரு குடும்பத்தின் சானல்களையே பார்க்கும் கொத்தடிமைகளுக்கு கோர்ட்டில் மாநில அரசு நிர்வாகம் சிரிப்பாய்ச் சிரிப்பது தெரியாது .......


பாமரன்
ஜூலை 06, 2025 10:54

அட கருத்து வரனும்ல...


Subburamu Krishnasamy
ஜூலை 06, 2025 10:49

There is no accountability in judiciary


முக்கிய வீடியோ