உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / காபி இடைவேளைக்கு செல்லும் நீதிபதிகள்; ஆய்வு நடத்த உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தல்

காபி இடைவேளைக்கு செல்லும் நீதிபதிகள்; ஆய்வு நடத்த உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தல்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி : வழக்கு ஒன்றில் குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு வழங்கப்பட்ட தண்டனையை எதிர்த்து, ஜார்க்கண்ட் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இதை விசாரித்த உயர் நீதிமன்றம், 2022ல் தீர்ப்பை ஒத்திவைத்தது.உச்ச நீதிமன்றத்தில் இது தொடர்பாக மனு தாக்கல் செய்யப்பட்டது. இதையடுத்து உடனடியாக முடிவு எடுக்க உயர் நீதிமன்றத்துக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. அதன்படி, சமீபத்தில் அந்த வழக்கில் உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்து.இந்த வழக்கு, நீதிபதிகள் சூர்யகாந்த், கோட்டீஸ்வர் சிங் அமர்வில் நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது அமர்வு கூறியுள்ளதாவது:இந்த வழக்கில் தண்டனை விதிக்கப்பட்ட மூவர் விடுவிக்கப்பட்ட நிலையில், மற்றொருவருக்கு ஜாமின் வழங்கப்பட்டுள்ளது. ஆனால், மூன்று ஆண்டுகளுக்கு முன் ஒத்தி வைக்கப்பட்ட தீர்ப்பில், தற்போதுதான் அவர்களுக்கு நிவாரணம் கிடைத்துள்ளது.மேலும், தீர்ப்பு தேதி எப்போது ஒத்திவைக்கப்பட்டது என்பதை உத்தரவில் குறிப்பிடாததால், அவர்கள் விடுதலை ஆவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. இதுபோன்ற தாமதங்களால், குற்றஞ்சாட்டப்பட்டவர்கள் தேவையில்லாமல் சிறையில் இருக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்படுகின்றனர். இது தனிமனித உரிமைக்கு எதிரானது. மேலும், உயர் நீதிமன்ற நீதிபதிகள் அடிக்கடி காபி இடைவேளைக்கு செல்வதாக புகார்கள் வந்துள்ளன. இதில் உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும். இது அவர்களின் பணித் திறனுடன் தொடர்புடையது. இதில் கட்டுப்பாடுகள் தேவை. இவ்வாறு அமர்வு கூறியுள்ளது.இதைத் தொடர்ந்து, எத்தனை வழக்குகளில் நீண்ட காலமாக தீர்ப்பு பிறப்பிக்கப்படாமல் உள்ளது போன்ற தகவல்களை அளிக்க உயர் நீதிமன்றங்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 9 )

Kanns
மே 14, 2025 09:01

Stop Useless Lecturing& Start Punishing All Errant Judges Giving Biased-PoorQuality-Slow-Costlier Judgements And those Not Working 08hr PerDay 06WorkingDaysPer Week for Full Year Only 24 Casual Leave pa Only Contract Jobs With Moderate NonLuxury Wages


D Natarajan
மே 14, 2025 07:51

உலகத்திலேயே மித மோசமான நீதி துறை இந்தியாவிலே தான். கோடை விடுமுறை எதற்கு. கேடுகெட்ட வக்கீலகள், நீதிமான்கள் இருக்கும் வரை இந்தியாவில் நீதி குறுகிய காலத்தில் கிடைப்பது மித கஷ்டம்.


பேசும் தமிழன்
மே 14, 2025 07:47

நீதிமன்றம் இந்த லட்சணத்தில் நடக்கிறது..... ஆனால் நீங்கள் நாட்டின் உயர் பதவி வகிக்கும் ஆளுநர் மற்றும் ஜனாதிபதி அவர்களுக்கு காலக்கெடு விதிக்கும் செயலை என்னவென்று சொல்ல ???


M. Palanivelu
மே 14, 2025 07:06

அப்படியானால் அரசு ஊழியர்கள் பொறுப்பில்லாத வர்களா?


Ganesh Subbarao
மே 15, 2025 11:51

ஆமாம் பொறுப்பும் இல்லை, பொறுப்பும் accountability இல்லை மஹா மட்டமான சிஸ்டம்


தர்மராஜ் தங்கரத்தினம்
மே 14, 2025 06:33

சராசரி அரசு ஊழியர்களைப்போல நீதிபதிகளும் நடந்துகொள்வது அவர்களின் பொறுப்பின்மையைக் காட்டுகிறது ....


சூரியா
மே 14, 2025 06:30

கொஞ்சம் இருங்கள். ஜனாதிபதி, கவர்னர் இவர்கள்தவிர வேறு யாரெல்லாம் உடனடியாக முடிவு எடுக்க வேண்டும் என்பதை ஆராய்ந்து கொண்டிருக்கிறோம்.


Kasimani Baskaran
மே 14, 2025 04:02

பணத்தை சாக்கு மூட்டைகளில் பதுக்கி வைத்து இருந்த நீதிபதிக்கு பதவி மட்டுமே பறிக்கப்பட்டு உள்ளது. அவர் பற்றிய விசாரணை கூட நேர்மையாக நடக்கவில்லை. கொலீஜியம் மூடி மறைக்கவே முயன்றது. இன்னும் சொத்து விபரங்களை அரசுக்கு தெரிவிக்காத உச்ச பஞ்சாயத்தார் கூட பலர் உண்டு. அவர்களுக்கு சட்டத்தில் விதி விலக்கு இருக்கிறது இல்லையோ - ஆனால் கொலீஜியம் விதி விலக்கு கொடுக்கிறது.


D.Ambujavalli
மே 14, 2025 03:26

அரசு அலுவலகங்களில் கான்டீன் விசிட் நாளுக்கு நாலு முறை, தம் அடிக்க மூன்று முறை - ஒவ்வொருமுறையும் 10 நிமிஷம்- என்று செல்வது போல பொறுப்பான நீதிபதிகள் நினைத்து நினைத்து தங்கள் இருக்கையை விட்டுச் செல்வது நீதிமன்றத்தின் நேரத்தை விழுங்குவதாகும்


முக்கிய வீடியோ