உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / சுப்ரீம் கோர்ட் பார் கவுன்சில் தேர்தலில் பதிவான ஓட்டுகளை மீண்டும் எண்ண கோர்ட் உத்தரவு

சுப்ரீம் கோர்ட் பார் கவுன்சில் தேர்தலில் பதிவான ஓட்டுகளை மீண்டும் எண்ண கோர்ட் உத்தரவு

புதுடில்லி: சுப்ரீம் கோர்ட் வழக்கறிஞர்கள் சங்க தேர்தலில் பதிவான ஓட்டுகளை திரும்ப எண்ணும்படி உச்ச நீதிமன்றம் நேற்று உத்தரவிட்டது.சமீபத்தில் நடந்து முடிந்த உச்ச நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்க தேர்தலில் முறைகேடு நடந்துள்ளதாக கூறிய, தலைவர் பதவிக்கு போட்டியிட்ட அதிஷ் அகர்வாலா, மொத்த ஓட்டுகளை விட, பதிவான ஓட்டுகள் அதிகமாக இருந்ததாக கூறினார்.இதுகுறித்து விசாரணை நடத்திய நீதிபதிகள் சூர்யகாந்த் மற்றும் தீபங்கர் தத்தா ஆகியோரை கொண்ட அமர்வு பிறப்பித்த உத்தரவு:மொத்த ஓட்டுகளாக 2,588 உள்ள நிலையில், பதிவான ஓட்டுகளாக 2,651 அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே, பதிவான ஓட்டுகளை திரும்ப எண்ணுவது தான் சரியானதாக இருக்கும். முதலில் தலைவர் பதவிக்கு பதிவான ஓட்டுகளையும், அதன் பின், ஒன்பது செயற்குழு உறுப்பினர்கள் தேர்தலில் பதிவான ஓட்டுகளையும் எண்ண வேண்டும்.ஏனெனில், தலைவர் பதவிக்கான ஓட்டுகளை எளிதாக உடனே எண்ணி விட முடியும். செயற்குழு உறுப்பினர்கள் பலர் இருப்பதால், அந்த தேர்தலில் பதிவான ஓட்டுகளை எண்ணி முடிக்க, இரண்டு - மூன்று நாட்கள் ஆகும். முடிவுகளை யாரும் அறிவிக்கக் கூடாது. யார் வெற்றி பெற்றனர் என்ற விபரத்தை, உச்ச நீதிமன்றமே அறிவிக்கும். இவ்வாறு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

GMM
மே 27, 2025 09:54

வாக்காளரை விட வாக்கு எண்ணிக்கை அதிகம். குற்றம் நிகழ்ந்து கொண்டிருக்கிறது. குற்றம் தண்டிக்காமல் , தவறு அறியாமல், எதிர் காலத்தில் நிகழாமல் தேர்தல் ஆணையம் மற்றும் மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.


Kasimani Baskaran
மே 27, 2025 03:52

பொய் சொல்வதில் மகா திறமைசாலிகள்... எப்படி நம்பமுடியும்?


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை