உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / தேசிய நெடுஞ்சாலை உணவகங்களை கணக்கெடுக்க சுப்ரீம் கோர்ட் உத்தரவு

தேசிய நெடுஞ்சாலை உணவகங்களை கணக்கெடுக்க சுப்ரீம் கோர்ட் உத்தரவு

தேசிய நெடுஞ்சாலைகளில் எத்தனை உணவகங்கள் இருக்கின்றன என்பதை கணக்கெடுத்து, இரண்டு வாரங்களில் அறிக்கை சமர்ப்பிக்கும்படி மத்திய சாலை போக்குவரத்து துறை அமைச்சகத்துக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ராஜஸ்தான் தேசிய நெடுஞ்சாலையில் கடந்த 2ம் தேதி, நின்று கொண்டிருந்த லாரி மீது பின்னால் வந்த வேன் மோதியதில், 18 பேர் உயிரிழந்தனர். விபத்துகள் தெலுங்கானாவில் கடந்த 3ம் தேதி, அரசு பஸ் - சரக்கு லாரி மோதிக்கொண்ட விபத்தில், 20 பேர் உயிரிழந்தனர். தேசிய நெடுஞ்சாலைகளில் நடக்கும் இதுபோன்ற விபத்துகள் குறித்து, உச்ச நீதிமன்றம் தாமாக முன்வந்து வழக்குப்பதிவு செய்தது. இந்த வழக்கு, நீதிபதிகள் ஜே.கே.மகேஸ்வரி, விஜய் பிஷ்னோய் அமர்வு முன் நேற்று விசாரணைக்கு வந்தது.

அப்போது நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு:

தேசிய நெடுஞ்சாலை ஓரங்களில் அங்கீகரிக்கப்படாத ஏராளமான உணவகங்கள் செயல்படுகின்றன. லாரி ஓட்டுநர்கள், சாலையிலேயே வாகனத்தை நிறுத்திவிட்டு உணவகங்களுக்கு சென்று விடுகின்றனர். இதனால், பின்னால் வரும் வாகனங்கள் லாரி மீது மோதி விபத்துகள் ஏற்படுவது அதிகரித்துள்ளன. இதை எப்படி சரிசெய்வது என்பதை தான் நாம் பார்க்க வேண்டி இருக்கிறது. விதிமுறைகள் தேசிய நெடுஞ்சாலைகளில் எத்தனை உணவகங்கள் இருக்கின்றன. அவற்றில் அங்கீகரிக்கப்படாதது எத்தனை என்பது உள்ளிட்ட விபரங்களை, மத்திய சாலை போக்குவரத்து துறை அமைச்சகம் மற்றும் தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் அடுத்த இரண்டு வாரங்களுக்குள் கணக்கெடுத்து நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க வேண்டும். மேலும், தரமான சாலைகள் இல்லாவிட்டாலும் சுங்கக் கட்டண வசூல் தொடர்ந்து கொண்டே தான் இருக்கிறது. எனவே, நெடுஞ்சாலை பராமரிப்பு தொடர்பான ஒப்பந்ததாரர்களின் விதிமுறைகளையும் அறிக்கையாக சமர்ப்பிக்க வேண்டும். மேலும், தேசிய நெடுஞ்சாலைகள் அமைந்துள்ள மாநிலங்களின் தலைமைச் செயலர் மற்றும் மத்திய உள்துறை அமைச்சகத்தை, வழக்கின் ஒரு தரப்பாக சேர்க்கிறோம். இவ்வாறு உத்தரவிட்ட நீதிபதிகள், விசாரணையை ஒத்திவைத்தனர். - டில்லி சிறப்பு நிருபர் -


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 8 )

Ram
நவ 11, 2025 12:55

முதலில் தேசிய நெடுஞ்சாலையைஇல் patrolai அதிகப்படுத்தி , ரோட்டிலே நிறுத்தும் வாகனவோடிகளுக்கு அபராதம் விதிக்கவேண்டும் , அதேபோல் ஸ்பீட் லேனில் மெதுவாக செல்லும் லாரிகளுக்கு அபராதம் விதிக்கவேண்டும் ....


Kulandai kannan
நவ 11, 2025 12:27

அரசுகள் தொலைநோக்கு இல்லாமல் தூங்கி வழிந்து, தேவையின்றி கோர்ட்டுகளுக்கு அதிகாரங்களை தாரை வார்க்கின்றனர்.


duruvasar
நவ 11, 2025 07:15

தமிழ்நாட்டை பொறுத்தவரை பாலாஜி ரெஸ்டூரண்ட்கள் அதிகம்


திகழ் ஓவியன்
நவ 11, 2025 07:07

தேசிய நெடுஞ்சாலை முழுவதும் வேலி அமைக்க உத்தரவிடுங்கள், யுவர் ஆனர்...


ஜெய்ஹிந்த்புரம்
நவ 11, 2025 08:38

அப்புறம் நீ போக முடியாதே?


duruvasar
நவ 11, 2025 09:53

திருட்டு கும்பலுக்கு வேலியை தாண்டமுடியாத என்ன


GMM
நவ 11, 2025 07:03

தேசிய நெடுஞ்சாலை ஓரம், டோல்கேட் அருகில், ரவுண்டானாவில் வாகனம் நிறுத்த இடம் இல்லாமல் அதிக புதிய கடைகள், புதிய சிறுபான்மை வழிபாட்டு இடங்கள், மலை அடிவாரத்தில் கிறித்தவ பள்ளிகள் ஓசூர் சென்னை வழியில் அதிகம். வழிபாட்டு முகப்பு சுவர் மட்டும் உண்டு. இதனை அனுமதிப்பது, உள்ளாட்சி , மாநில நிர்வாகம்? தேசிய நெடுஞ்சாலை விளிம்பில் இருந்து 500 மீட்டர் இவைகள் இருக்க கூடாது. முன்பு இருந்த பள்ளி, கடைகள், மண்டபம் .. நுழை வாயில் வேறு திசையில் இருக்க வேண்டும். தேசிய நெடுஞ்சாலையில் இணையும் குறுக்கு சாலையில் வேக தடை கட்டாயம். சாலை போடுவது, பராமரிப்பு பணிகள் செய்வது ஒரே நிறுவனம். ஊழல் குறையும்.


visu
நவ 11, 2025 06:22

சிறப்பு ஆனால் இதன் தீர்ப்பு ஒரு 50 வருடங்களுக்குள் வரலாம்


முக்கிய வீடியோ