உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / பலாத்கார வழக்கில் மாஜி பிரதமர் பேரனுக்கு சுப்ரீம் கோர்ட் ஜாமின் மறுப்பு

பலாத்கார வழக்கில் மாஜி பிரதமர் பேரனுக்கு சுப்ரீம் கோர்ட் ஜாமின் மறுப்பு

புதுடில்லி: கர்நாடகாவில் பாலியல் பலாத்கார வழக்கில் கைதாகி சிறையில் உள்ள முன்னாள் எம்.,பி,, பிரஜ்வெல் ரேவண்ணாவுக்கு ஜாமின் வழங்க சுப்ரீம் கோர்ட் மறுத்தது.கர்நாடகாவில், பிரதான எதிர்க்கட்சியான மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சியின் தேசிய தலைவரான முன்னாள் பிரதமர் தேவகவுடாவின் பேரன் பிரஜ்வல் ரேவண்ணா, 33. ,சில பெண்களை மிரட்டி, பலாத்காரம் செய்ததாகவும், ஏராளமான ஆபாச வீடியோக்கள் வைத்திருந்ததாக கடந்த சில மாதங்களுக்கு முன் சமூக வலைதளங்களில் வெளியானது. இதையடுத்து கைதிலிருந்து தப்பிக்க ஜெர்மனிக்கு தப்பியோடினார்.பாதிக்கப்பட்ட பெண்கள் அளித்த புகாரின் அடிப்படையில், ஹொளேநரசிபுரா போலீஸ் நிலையத்தில், அவர் மீது மூன்று பலாத்கார வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இவ்வழக்கை, எஸ்.ஐ.டி., எனும் சிறப்பு புலனாய்வு குழு விசாரித்து வருகிறது.இந்நிலையில் கடந்த மே.31-ம் தேதி ஜெர்மனிலிருந்து நாடு திரும்பிய போது சிறப்பு விசாரணை குழுவினரால் கைது செய்யப்பட்டார். கடந்த சில நாட்களுக்கு முன்பு 2144 பக்கம் கொண்ட இரண்டு குற்றப் பத்திரிகைகள் பெங்களூர் சிறப்பு நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது.ஜாமீன் வழங்க கோரி கர்நாடக உயர்நீதிமன்றத்தில் பிரஜ்வெல் ரேவண்ணா தாக்கல் செய்த மனு தள்ளுபடியானது. உச்சநீதிமன்றத்தில் அப்பீல் செய்தார். இம்மனு இன்று நீதிபதிகள் திரிவேதி, சதீஷ் சந்திர சர்மா ஆக்யோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்த போது, 'நீங்கள் மிகவும் சக்தி வாய்ந்த நபர்' என குறிப்பிட்ட நீதிபதிகள், ஜாமின் வழங்க மறுத்ததுடன் மனுவை டிஸ்மிஸ் செய்து உத்தரவிட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 5 )

skv srinivasankrishnaveni
நவ 12, 2024 07:32

இந்தமாதிரி வெறிநாய்களை சுட்டுத்தள்ளவேண்டும் தப்பேயில்லீங்க ரேப் செய்றா எல்லா ஊதேவிகளுக்கும் வயது வித்தியாசமே பாக்காமல் சுட்டுகொல்லுங்க


Mani . V
நவ 12, 2024 05:48

இதென்னய்யா அநியாயமாக இருக்கு. பெரிய இடத்துப் பிள்ளைங்க என்றால் அப்படித்தான் கொழுப்பெடுத்து இருப்பார்கள். இதையெல்லாம் கண்டுக்கக்கூடாது.


நிக்கோல்தாம்சன்
நவ 12, 2024 05:30

முதல்முறையாக நீதிபதிகளை பாராட்ட தோன்றுகிறது


Padmasridharan
நவ 12, 2024 01:55

இதுவே சாதாரண மனிதன், ஒரு சின்ன தவறு செயதிருந்தாலும், புகைப்படம் ? வந்திருக்கும். இந்த செய்தியில் மாஜி பிரதமர் பேரன் ? இல்லையே ?


தர்மராஜ் தங்கரத்தினம்
நவ 12, 2024 09:19

தேவகௌடாதான் அந்த மாஜி பிரதமர் ..... இதெல்லாம் உரை கல்லின் கிண்டலு ......


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை