வாசகர்கள் கருத்துகள் ( 1 )
திருட்டு டுப்ளிகேட் காந்திகள் மற்றும் பிரிவினைவாத திருட்டு த்ரவிஷன்கள் நிறைந்த நாட்டில் உண்மையை உரக்க கூறாதே
புதுடில்லி, வழக்கு விசாரணையின் போது, சர்ச்சைக்குரிய கருத்து தெரிவித்த கர்நாடக உயர் நீதிமன்ற நீதிபதி வேதவியாசசார் ஸ்ரீஷாநந்தாவுக்கு உச்ச நீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது. 'வீடியோ'
கர்நாடகாவின் பெங்களூரில், நில உரிமையாளருக்கும், குத்தகைகாரருக்கும் இடையிலான வழக்கு அம்மாநில உயர் நீதிமன்றத்தில் சமீபத்தில் விசாரணைக்கு வந்தது.வழக்கை நீதிபதி வேதவியாசசார் ஸ்ரீஷாநந்தா விசாரித்தார்.விசாரணையின் போது, பெங்களூரில் முஸ்லிம்கள் பெரும்பான்மையாக வசிக்கும் பகுதியை பாகிஸ்தான் என்று அவர் குறிப்பிட்டார். மேலும், வழக்கில் ஆஜரான பெண் வக்கீலை பார்த்து, 'எதிர்தரப்பினர் குறித்து அனைத்து விபரங்களும் இவருக்கு தெரிந்துள்ளன. அவர்கள் அணிந்துள்ள உள்ளாடையின் நிறத்தை கூட இவரால் சொல்ல முடியும் என தோன்றுகிறது' என்றார்.வழக்கு விசாரணையின், 'வீடியோ' சமூக வலைதளங்களில் பரவியது. நீதிபதி தெரிவித்த கருத்துக்கு கடும் கண்டனங்கள் குவிந்தன. ஒத்தி வைப்பு
இதையடுத்து, இந்த விவகாரத்தை உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் அமர்வு தாமாக முன்வந்து விசாரித்தது. அப்போது நீதிபதிகள் கூறியதாவது:நீதிமன்ற விசாரணையின் போது கர்நாடக உயர் நீதிமன்ற நீதிபதி தெரிவித்த கருத்துகள், ஊடகங்களில் வெளியாகி உள்ளன.விசாரணையின் போது, நீதிபதிகள் எந்த மாதிரி யான கருத்துகளை கூற வேண்டும் என்பது குறித்த வழிகாட்டு நெறிமுறைகளை உருவாக்க வேண்டிய தேவை ஏற்பட்டுஉள்ளது.நீதிமன்ற நடவடிக்கைகளை, சமூக ஊடகங்கள் உன்னிப்பாக கவனித்து வருகின்றன.அதை மனதில் வைத்து நீதிபதிகள் செயல்பட வேண்டும். இந்த விவகாரம் தொடர்பாக தலைமை நீதிபதியின் அறிவுறுத்தல்களை பெற்று, சம் பந்தப்பட்ட நீதிபதியின் விளக்கத்தை இரு தினங்களுக்குள் உச்ச நீதிமன்றத்தில் கர்நாடகா ஐகோர்ட் சமர்ப்பிக்க வேண்டும்.வழக்கு விசாரணை, வரும் 25ம் தேதிக்கு ஒத்தி வைக்கப்படுகிறது.இவ்வாறு நீதிபதிகள் தெரிவித்தனர்.
திருட்டு டுப்ளிகேட் காந்திகள் மற்றும் பிரிவினைவாத திருட்டு த்ரவிஷன்கள் நிறைந்த நாட்டில் உண்மையை உரக்க கூறாதே