உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / தொழிலக ஆல்கஹால் தயாரிப்பு; மாநில அரசுக்கே அதிகாரம்; நீதிபதிகள் 9 பேர் அடங்கிய அமர்வில் 8 பேர் ஒரே தீர்ப்பு

தொழிலக ஆல்கஹால் தயாரிப்பு; மாநில அரசுக்கே அதிகாரம்; நீதிபதிகள் 9 பேர் அடங்கிய அமர்வில் 8 பேர் ஒரே தீர்ப்பு

புதுடில்லி: 'தொழில்துறையில் பயன்படுத்தப்படும் ஆல்கஹாலை ஒழுங்குபடுத்தவும், வரி விதிக்கவும் மாநில அரசுகளுக்கு அதிகாரம் உள்ளது' என நீதிபதிகள் 9 பேர் அடங்கிய அமர்வில் 8 பேர் ஒருமித்த கருத்துடன் தீர்ப்பு அளித்தனர். தொழிலக பயன்பாட்டு ஆல்கஹால் தொடர்பாக, உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில், அனைத்து தரப்பு விசாரணைகளும் முடிவடைந்தது. இந்நிலையில், இன்று(அக்.,23) தலைமை நீதிபதி சந்திரசூட், நீதிபதிகள் ரிஷிகேஷ் ராய், அபய் எஸ், பிவி நாகரத்னா, பார்திவாலா, மனோஜ் மிஸ்ரா, உஜ்ஜல் புயான், சதீஷ் சந்திர சர்மா, அகஸ்டின் ஜார்ஜ் மாசி ஆகிய 9 பேர் அடங்கிய அமர்வு தீர்ப்பு அளித்தது.தொழில்துறையில் பயன்படுத்தப்படும் ஆல்கஹாலை ஒழுங்குபடுத்தவும், வரி விதிக்கவும் மாநில அரசுகளுக்கு அதிகாரம் உள்ளது என நீதிபதிகள் 9 பேர் அடங்கிய அமர்வில் 8 பேர் ஒருமித்த கருத்துடன் தீர்ப்பு அளித்தனர்.

நீதிபதிகள் கூறியதாவது:

* தொழிலக ஆல்கஹால் பயன்பாடு தொடர்பான சட்டங்களை இயற்ற மாநில அரசுக்கே உரிமை உள்ளது. இதுபோன்ற அதிகாரங்களை மாநில அரசிடம் இருந்து பறிக்க முடியாது.* தொழிலக ஆல்கஹால் மீது வரி விதிக்கவும் மாநில அரசுகளுக்கு அதிகாரம் உள்ளது. மத்திய அரசுக்கு அதிகாரம் இல்லை. இவ்வாறு நீதிபதிகள் தெரிவித்தனர். தொழிலக ஆல்கஹால் தயாரிப்பு குறித்த மாநில அரசுகளின் அதிகாரத்தை உச்சநீதிமன்றம் உறுதி செய்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 6 )

Rajathi Rajan
அக் 23, 2024 21:05

கூஜா உன் மரியாதையை தான் மனக்குத்தே,,, நான் கேட்டதுக்கு பதில் சொல்லவேள்ள நீ , இருக்க, ஓடி போய்டுச்சா?


Dharmavaan
அக் 23, 2024 21:02

இதெல்லாம் கொள்கையை முடிவுகள்.இதில் தலையிட கோர்ட்டுக்கு அதிகாரம் இல்லை.இப்போது எல்லாமே மாநில அரசுக்கு ஆதரவாக தீர்ப்புகள். மத்திய அரசை பலவீனப்படுத்தும் வேலை கோர்ட் செய்கிறது இது ஆபத்தானது எதை வைத்து இந்த தீர்ப்பு.விளக்கவில்லை


raja
அக் 23, 2024 14:21

சொள்ளிடீங்கள்ள யுவர் ஹானர் இனி பாருங்க எங்க விடியல் மாடல் அரசு நடத்தும் ஒன்கொள் தெலுங்கர் உடன் பிறப்புகள் காய்ச்சி வடிக்கும் சாராயத்தை யாரும் கள்ள சாராயம் என்று சொல்ல கூடாது அது மாநிலத்தில் தயாரிப்பதால் நல்ல சாராயம் என்றே கூற வேண்டும் என்று ஆணை பிறப்பிபாரு....


Rajathi Rajan
அக் 23, 2024 16:36

ஏன்டா கூஜா உன் ஆள் உன்கூட இருக்க இல்ல உடன்பிறப்பு கூட போய்டுச்சா?


raja
அக் 23, 2024 18:42

உடன் பருப்பு கூஜா ராமு ருவா 200 வாங்கிட்டு ஒரு குவார்டற அடிச்சமா பெஜாம கவுந்தமான்னு இருக்கணும் ...சப மரியாத தெரியாதவரே...


Saravanaperumal Thiruvadi
அக் 24, 2024 00:55

தெலுங்கர்களை பிடிக்க வில்லை என்றால் சந்திரபாபுவுடனான கூட்டணியை பாஜக முறித்து கொள்ளலாமே


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை