உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / என்னா ஒரு தைரியம்? உச்சநீதிமன்ற யூடியூப் பக்கத்தை ஹேக் செய்த மர்மநபர்கள்; மீட்கும் முயற்சி தீவிரம்

என்னா ஒரு தைரியம்? உச்சநீதிமன்ற யூடியூப் பக்கத்தை ஹேக் செய்த மர்மநபர்கள்; மீட்கும் முயற்சி தீவிரம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: உச்சநீதிமன்றத்தின் யூடியூப் பக்கத்தை அடையாளம் தெரியாத நபர்கள் ஹேக் செய்துள்ளனர். மீட்கும் பணியில் தொழில்நுட்ப வல்லுநர்கள் ஈடுபட்டுள்ளனர்.அரசு மற்றும் மருத்துவமனை சமூகவலைதளப் பக்கத்தை மர்மநபர்கள் திடீரென ஹேக் செய்வார்கள். இதையடுத்து தொழில்நுட்ப வல்லுநர்கள் நீண்ட நேரம் போராடி பத்திரமாக, மீட்பதை கேள்விப்பட்டு இருப்போம். அதேபோல், தனிநபர் சமூக வலைதளப்பக்கமும் ஹேக் செய்யப்படும் சம்பவம் நடந்திருக்கிறது. அரசியலமைப்பு பெஞ்ச் முன்பு, விசாரணைக்கு வரும் வழக்குகள் யூ.டி.யூப்., பக்கத்தில் நேரடி செய்யப்பட்டு வருகிறது. தற்போது உச்சநீதிமன்றத்தின் யூடியூப் பக்கத்தேயே மர்மநபர்கள் இன்று (செப்.,20) ஹேக் செய்துள்ளனர். 'ரிப்பிள்' என்ற பெயரில் ஹேக் செய்யப்பட்டுள்ளது. தற்போது அமெரிக்காவை சேர்ந்த ரிப்பிள் லேப்ஸ் உருவாக்கிய கிரிப்டோகரன்சியான எக்ஸ்ஆர்பியை விளம்பரப்படுத்தும் வீடியோக்கள் காட்டுகிறது. மீட்கும் பணியில் தொழில்நுட்ப வல்லுநர்கள் ஈடுபட்டுள்ளனர். இதனால் வழக்கு விசாரணை நேரலை செய்வதில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 3 )

J.V. Iyer
செப் 20, 2024 18:46

யார் என்று இவர்களுக்கு தெரியாதா என்ன? எல்லாம் பதவி, பணம் செய்யும் மாயம்தான் என்று மக்கள் நம்புகிறார்கள்.


RAMAKRISHNAN NATESAN
செப் 20, 2024 13:42

யார் செஞ்சது ன்னு கண்டுபுடிக்க வக்கில்லை .........


Oru Indiyan
செப் 20, 2024 13:01

உச்சத்திற்கே பாதுகாப்பு இல்லை. உம்


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை