உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / நியாயமாக இருக்க வேண்டும்: பேச்சு மீதான கட்டுப்பாடு குறித்து சுப்ரீம் கோர்ட் கருத்து

நியாயமாக இருக்க வேண்டும்: பேச்சு மீதான கட்டுப்பாடு குறித்து சுப்ரீம் கோர்ட் கருத்து

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: '' பேச்சுகள் மீதான கட்டுப்பாடுகள் நியாயமானதாக இருக்க வேண்டுமே தவிர, கற்பனையானதாக இருக்கக்கூடாது,'' என சுப்ரீம் கோர்ட் கூறியுள்ளது.காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த ராஜ்யசபா எம்.பி., இம்ரான் பிரதாப்கார்கி 'இன்ஸ்டாகிராம்' சமூக வலைதளத்தில் வெளியிட்ட கவிதை தொடர்பாக அவர் மீது குஜராத் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இதற்கு எதிராக காங்கிரஸ் எம்.பி., சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார்.இந்த வழக்கு நீதிபதிகள் அபய் எஸஅ ஓகா மற்றும் உஜ்ஜால் புயான் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.அப்போது, இம்ரான் கார்கி மீது குஜராத் போலீசார் பதிவு செய்த வழக்கை ரத்து செய்த நீதிபதிகள் தொடர்ந்து கூறியதாவது: பேச்சு மற்றும் கருத்து சுதந்திரத்தை பாதுகாப்பதில் நீதிமன்றங்கள் முன்னணியில் இருக்க வேண்டும். பேச்சுகள் மீதான கட்டுப்பாடு நியாயமானதாக இருக்க வேண்டுமே தவிர, கற்பனையானதாக இருக்கக்கூடாது. அரசியலமைப்பு சட்டம் 19(1) ன் கீழ் அளிக்கப்பட்ட சுதந்திரத்தை மீறுவதாக சட்டப்பிரிவு 19(1) இருக்கக்கூடாது.எண்ணங்கள் மற்றும் கருத்துகளை வெளிப்படுத்துவதற்கான சுதந்திரம் இல்லாமல், அரசியலமைப்பு சட்டப்பிரிவு 21ன் கீழ் அளிக்கப்பட்டுள்ள கவுரவமான வாழ்க்கைக்கான உறுதிமொழியை தொடர முடியாது. ஆரோக்கியமான ஜனநாயகத்தில் எதிர்க்கருத்துகளை பதில் கருத்துக்கள் மூலம் தான் எதிர்கொள்ள வேண்டுமே தவிர, ஒடுக்குமுறை மூலம் அல்ல.கவிஞர்கள், டிராமா, படங்கள், ஸ்டாண்ட் ஆப் காமெடி, நையாண்டி மற்றும் கலை உள்ளிட்ட இலக்கியங்கள், வாழ்க்கையை இன்னும் அர்த்தம் உள்ளதாக மாற்றுகின்றன. இவ்வாறு நீதிபதிகள் தெரிவித்து உள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 9 )

mohanraj
மார் 28, 2025 21:39

140 கோடி மக்கள் தொகைக்கு 100 கோடி வழக்குகள் தேக்கம் இன்னும் ஒரு 40 கோடியை தேய்க்கினால் தலைக்கு ஒரு வழக்கு மிகவும் அருமை. வாழ்க நீதிமன்றம் வளர்க


Appa V
மார் 28, 2025 18:37

நீதிபதி கர்ணனை ஆறு மாதம் சிறைக்கு அனுப்பும்போது இந்த ஞானோதயம் வரவில்லையே


GMM
மார் 28, 2025 17:01

பப்ளிக் பேச்சு மீதான அரசின் கட்டுப்பாடு நியாயமாக இருக்க வேண்டும். தனிநபர் கருத்து சுதந்திரம் நியாயமாக இருக்க வேண்டிய அவசியம் இல்லை. ? விதி விலக்கு நீதிமன்றம். பல கோடி மக்கள் கருத்து சுதந்திரம் தவறாக பயன்படுத்தினால் , பதில் சொல்ல முடியுமா. ? நீதிபதி நிர்வாக நடவடிக்கை மீது ரத்து உத்தரவு பிறப்பிக்க முடியாது. நிறுத்தலாம்.


lana
மார் 28, 2025 16:52

இந்த நீதிமன்றம் நொன் டி கூட்டணி மீதான மற்றும் சிறுபான்மையினர் எ‌ன்று உருட்டி செல்பவர்கள் இடம் ஒரு தீர்ப்பு இதேவேளை பெரும்பான்மை மற்றும் குறிப்பிட்ட கட்சிகள் என்றால் வேறு விதமான தீர்ப்பு செல்லும்


visu
மார் 28, 2025 16:36

எந்த மதத்தை நிந்தித்தலும் தண்டனை என்று சட்டம் வேண்டும் எந்த சாதியை தவறா பேசினாலும் சிறை என்ற சட்டம் தேவை நீதிமன்றங்கள் சட்டத்தை இயற்ற முடியாது அவற்றை பின்பற்றத்தான் மு டியும்


Tiruchanur
மார் 28, 2025 15:53

நூபுர் ஷர்மா இஸ்லாத்தை பற்றி விமர்ஷணம் பண்ணார்னு துவைத்தெடுத்த கோர்ட் தானே இதே உச்சநீதிமன்றம்? இப்போ என்ன ஞானோதயம்?


RAM IYER
மார் 28, 2025 16:30

What to do? most of the justice from Congress Houses


Easu
மார் 28, 2025 15:50

சிங்கப்பூர் மாதிரி கட்டுப்பாடான ஜனநாயகமாய் இருக்ஙனும்


ManiK
மார் 28, 2025 15:22

நாடு நாசமாக போனால் எனக்கென்ன என்பதுபோல் இருக்கு இந்த தீர்ப்பு. கருத்து சுதந்திரத்தை கசக்கி பிமியும் திமுக மேல் இப்படி தீர்ப்பு கூறுமா இந்த கோர்ட்??


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை