வாசகர்கள் கருத்துகள் ( 1 )
இவரை காங்கிரஸ் தான் ஆதரிக்க வேண்டும் .
பெங்களூரு: “சித்தராமையா ஐந்து ஆண்டுகளும் முதல்வராக இருப்பார்,” என, துணை முதல்வர் சிவகுமார் தம்பி சுரேஷ் கூறி உள்ளார்.பெங்களூரில் அவர் அளித்த பேட்டி:முடா வழக்கில் முதல்வர் சித்தராமையாவுக்கு மீது, அமலாக்கத்துறை வழக்குப்பதிவு செய்து இருப்பது அரசியல் சதி. அவருக்கு சாமுண்டீஸ்வரி அம்மனின் ஆசி உள்ளது. விரைவில் பிரச்னைகளில் இருந்து மீண்டு வருவார். அவரே ஐந்து ஆண்டுகளும் முதல்வராக இருப்பார்.மாநிலத்தில் சமீப காலமாக நடக்கும் அரசியல் நிகழ்வுகள் சரியில்லை. மக்கள் அனைத்தையும் கவனிக்கின்றனர். தெருவில் நின்று அரசியல் கட்சித் தலைவர்கள் சண்டை போடுவது சரியா?ஒவ்வொருவரும் தங்களை சுயபரிசோதனை செய்து கொள்ள வேண்டும். அரசியல் தலைவர்கள் தங்களை மாற்றிக் கொள்ளவில்லை என்றால், மக்கள் கல் எறிவர். காங்கிரஸ், பா.ஜ., - ம.ஜ.த., என மூன்று கட்சித் தலைவர்களையும் நான் எச்சரிக்கிறேன். நாள் ஒன்றுக்கு ஏதாவது பிரச்னை பற்றி பேசி பெரிதாக்க வேண்டாம். மாநிலத்தில் பல பிரச்னைகள் உள்ளன. அதை பற்றி விவாதிக்க வேண்டும்.தொழில் அதிபர் விஜய் டாட்டாவிடம், குமாரசாமி 50 கோடி ரூபாய் கேட்டு மிரட்டினாரா என்று தெரியவில்லை. திருடர்கள் ஒற்றுமையாக இருப்பதாக, சமூக ஆர்வலர் ஸ்நேகமயி கிருஷ்ணா கூறி உள்ளார்.சமூக ஆர்வலரான அவர், அரசியல் பேசுவதை நிறுத்திக் கொள்ளட்டும். ஜாதிவாரி கணக்கெடுப்பு அறிக்கையை கவனமாக அமல்படுத்துமாறு முதல்வர் சித்தராமையாவை கேட்டுக் கொள்கிறேன்.இவ்வாறு கூறினார்.
இவரை காங்கிரஸ் தான் ஆதரிக்க வேண்டும் .