உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / நமோ செயலி நடத்திய சர்வே; ஒரே நாளில் 5 லட்சம் பேர் பதில்

நமோ செயலி நடத்திய சர்வே; ஒரே நாளில் 5 லட்சம் பேர் பதில்

புதுடில்லி; மோடி பிரதமராக பதவியேற்று 11 ஆண்டுகள் நிறைவடைந்துள்ள நிலையில், அவரது ஆட்சி குறித்த கருத்துக் கணிப்பு, 'நமோ' செயலியில் நேற்று முன்தினம் துவங்கியது. இதில் ஒரே நாளில், 5 லட்சம் பேர் பதில் அளித்துள்ளனர்.பிரதமராக மோடி பதவியேற்று நேற்று முன்தினத்துடன், 11 ஆண்டுகள் நிறைவடைந்தது. தொடர்ந்து மூன்றாவது முறையாக தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி அமைத்துள்ளது.மோடி அரசின் செயல்பாடுகள் குறித்து கருத்து தெரிவிக்க, 'நமோ' செயலியில், 'ஜன் மன்' என்ற பெயரில் கருத்துக் கணிப்பு நடத்தப்பட்டது. கடந்த, 11 ஆண்டுகளில் பயங்கரவாதத்தை எதிர்ப்பதற்கான மத்திய அரசின் அணுகுமுறை பாதுகாப்பானதா, 'டிஜிட்டல் இந்தியா'வின் எந்த தயாரிப்பை நீங்கள் அதிகம் பயன்படுத்துகிறீர்கள், 'மேக் இன் இந்தியா' திட்டம் வேலைவாய்ப்புகள் மற்றும் தொழில்துறைக்கு உதவியதா? என்பது உள்ளிட்ட கேள்விகள் இந்த சர்வேயில் கேட்கப்பட்டிருந்தன.சர்வே துவங்கிய ஒரே நாளில் 5 லட்சம் பேர் பதில் அளித்துள்ளனர். இதில், 77 சதவீதம் பேர் முழு கணக்கெடுப்பையும் முடித்துள்ளனர். இந்த சர்வேயில் அதிகபட்சமாக உத்தர பிரதேசத்தை சேர்ந்த, 1,41,150 பேர் பதிலளித்துள்ளனர். இரண்டாவதாக மஹாராஷ்டிராவை சேர்ந்த, 65,775 பேரும், மூன்றாவதாக தமிழகத்தை சேர்ந்த, 62,580 பேரும் பதில் அளித்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 6 )

பாரத புதல்வன்
ஜூன் 11, 2025 12:27

சமீபத்தில் எனக்கும் போன் வந்தது, தி மு க விலிருந்து சர்வே என அறிமுகம் செய்த உடனே நான் கால் ப்ளாக் செய்து விட்டேன்.


Pats, Kongunadu, Bharat, Hindustan
ஜூன் 11, 2025 11:10

இவங்கதானா? நேத்து ஒரு வாய்ஸ் மெசேஜ் வந்தது... 1 பிரஸ் பண்ணு, ரெண்டு பிரஸ் பண்ணு என்று. முதல் கட்சி பெயர் சொன்னதுமே வெறுப்பில் இணைப்பை துண்டித்துவிட்டேன். புரிந்தவன் பிஸ்தா.


vivek
ஜூன் 11, 2025 11:45

அறிவுள்ளவர்களுக்கு புரியும். உனக்கு புரியாது patts பிஸ்தா.. போவியா....


Keshavan.J
ஜூன் 11, 2025 10:14

தமிழகத்தில் 62,500 பேர் பதில் அளித்துள்ளனர் . இதை பார்த்த அப்பாவுக்கு தூக்கம் பொய் விட்டதாம். இது என்ன திராவிடத்துக்கு வந்த சோதனை.


venugopal s
ஜூன் 11, 2025 11:04

எட்டு கோடி மக்கள் வாழும் மாநிலத்தில் அறுபத்தி இரண்டாயிரம் பேர் என்பது எத்தனை சதவீதம் என்று தெரியுமா?


சமீபத்திய செய்தி