உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / சிதம்பரம் மீது நடவடிக்கை எடுங்க: மணிப்பூர் காங்., தலைவர்கள் கொந்தளிப்பு

சிதம்பரம் மீது நடவடிக்கை எடுங்க: மணிப்பூர் காங்., தலைவர்கள் கொந்தளிப்பு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

இம்பால்: மணிப்பூர் தொடர்பாக மூத்த காங்கிரஸ் தலைவரான சிதம்பரம் வெளியிட்ட சர்ச்சை பதிவுக்கு, அந்த மாநில காங்கிரஸ் தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். சிதம்பரம் மீது நடவடிக்கை எடுக்கும்படி கார்கேவிடம் வலியுறுத்தி உள்ளனர்.மணிப்பூரில் கடந்த 2 ஆண்டுகளாக குக்கி மற்றும் மெய்ட்டி இனத்தவர்களிடையே பிரச்னை நடந்து வருகிறது.2 நாட்களுக்கு முன்பு கூட மணிப்பூரில் ஏற்பட்ட வன்முறையில் முதல்வர் பைரேன் சிங், அமைச்சர்கள், எம்எல்ஏக்களின் வீடுகள் சூறையாடப்பட்டன. தொடர்ந்து வன்முறை எல்லை மீறியதால் அங்கு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. இதற்கிடையே, மணிப்பூர் விவகாரம் பற்றி மாஜி மத்திய அமைச்சரும், மூத்த காங்கிரஸ் தலைவருமான ப.சிதம்பரம் வெளியிட்ட பதிவு சர்ச்சையானது. சிதம்பரம் சமூக வலைதளத்தில், மணிப்பூரில் 5000 ஆயிரம் மத்திய ஆயுதப்படை வீரர்களை குவிப்பதால் எந்த விடையும் கிடைக்கப்போவது இல்லை. பிரச்சனைக்கு காரணம் முதல்வர் பைரேன் சிங்கை அந்த பொறுப்பில் இருந்து உடனடியாக நீக்க வேண்டும்.அதாவது குக்கி, மெய்ட்டி, நாகா உள்ளிட்ட இனத்தை சேர்ந்தவர்கள் ஒரே மாநிலத்தில் சேர்ந்து வாழ வேண்டும் என்றால் அவர்களுக்கான பிராந்திய சுயாட்சியை உறுதி செய்ய வேண்டும். அதேபோல் பிரதமர் தனது பிடிவாதத்தைக் கைவிட்டு மணிப்பூருக்கு செல்ல வேண்டும். அங்கு வசிக்கும் மக்களை சந்தித்து பணிவுடன் பேச வேண்டும். அவர்களின் குறைகளை கேட்டறிந்து அதனை நிறைவேற்ற வேண்டும் என பதிவிட்டிருந்தார்.சிதம்பரத்தின் இந்த பதிவு, மணிப்பூர் மாநில காங்கிரஸ் தலைவர்கள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. அதாவது குக்கி, மெய்ட்டி, நாகா இன மக்களுக்கான பிராந்திய சுயாட்சி வழங்க வேண்டும் என்று கூறியிருப்பது தான் சர்ச்சைக்கு காரணமாக அமைந்தது. இந்நிலையில் தான் மணிப்பூர் மாநிலத்தை சேர்ந்த முன்னாள் அமைச்சர்கள், மாஜி எம்எல்ஏக்கள், மணிப்பூர் முன்னாள் காங்கிரஸ் தலைவர் உள்பட 10 காங்கிரஸ் தலைவர்கள் ப.சிதம்பரத்துக்கு கடும் கண்டனம் தெரிவித்தனர். அவர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி, கட்சியின் தேசிய தலைவர் மல்லிகார்ஜூன கார்கேவுக்கு கடிதம் எழுதியுள்ளனர். அதில் கூறியிருப்பதாவது:ஏற்கனவே மாநிலத்தில் குக்கி இனத்தை சேர்ந்தவர்கள் பிராந்திய சுயாட்சி கேட்டு வரும் நிலையில் அதற்கு வலு சேர்க்கும் வகையில் சிதம்பரம் பதிவிட்டுள்ளார். இதுதொடர்பாக நாங்கள் ஆலோசனை கூட்டம் நடத்தி சிதம்பரத்தின் பதிவுக்கு கண்டனம் தெரிவித்துள்ளோம்.மணிப்பூரில் வன்முறையான சூழல் நிலவி வரும் சூழலில் இந்த பதிவு கூடுதல் பதற்றத்தை தூண்டும். அதோடு மாநிலத்தின் ஒருமைப்பாட்டை பாதிக்கும். காங்கிரஸ் கட்சி மணிப்பூர் மாநிலத்தின் ஒற்றுமை மற்றும் பிராந்திய ஒருமைப்பாட்டிற்காக எப்போதுமே துணை நின்று வருகிறது. ப.சிதம்பரத்தின் இந்த பதிவு அதற்கு எதிரானதாக உள்ளது. இதனால் அந்த பதிவை உடனடியாக நீக்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு அவர்கள் தெரிவித்துள்ளனர்.மல்லிகார்ஜூன கார்கே சிதம்பரத்திடம் தொடர்பு கொண்டு பேசியவுடன் தற்போது அந்த பதிவு டெலிட் செய்யப்பட்டுள்ளது. மணிப்பூருக்கு எதிராக இதுபோன்ற கருத்தை தெரிவிக்க வேண்டாம் எனவும் சிதம்பரத்துக்கு காங்கிரஸ் கட்சி அறிவுறுத்தியுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 18 )

DARMHAR/ D.M.Reddy
டிச 10, 2024 01:57

நுணலும் தன் வாயால் கெடும் என்ற முது மொழியை மாண்பு மிகு ப. சிதம்பரம் அவர்கள் கேள்விப்பட்திருந்தால் மணிப்பூர் காங்கிரஸ் தலைவர்களின் கொந்தளிப்பிற்கு ஆளாகாமல் இருந்திருப்பார். .


Viswanathan nallakkan
நவ 24, 2024 08:56

சிதம்பரம் தன்னை அதிமேதாவி என்று நினைத்துக் கொண்டு ஏதாவது உளருவார்.


M Ramachandran
நவ 22, 2024 19:44

நடவடிக்கையயை எடுங்க . அந்த நிலையிலா கார்கே உள்ளார். அவரென சோனியா குடும்பம் எழுதி கொடுப்பதை வாசிக்க தான் பவர். எதிர்கட்சியை திட்ட கூட பேர்மிஸ்ஸின் வாங்கும் நிலை கார்க்கிக்கு


பட்டினத்தார் , மலையும் மலை சார்ந்த பகுதி
நவ 22, 2024 13:28

இந்த அதி புத்திசாலி அதி மேதாவி உலக மகா பொருளாதார மேதை ஆந்திராவை இரண்டாக பிரிக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்த அடுத்த நாளே முதன் முதலாக ஆந்திராவை இரண்டாக பிரிக்க வேண்டும் என்று என்று ஒத்து ஊதி இரண்டாக பிரிக்க உடனே எல்லா ஏற்பாடுகளும் செய்தவர். அப்போது இந்த அதி புத்திசாலி நிதியமைச்சராக இருந்தார். இந்த புத்திசாலிக்கு பிரிக்கிறது தான் தெரியும். காங்கிரஸுக்கு எப்பவுமே பிரித்து தானே பழக்கம் நேரு காலத்தில் இருந்தே.


Barakat Ali
நவ 22, 2024 08:22

கிறுக்குத்தனம் அதிகமா போச்சு ......


ராமகிருஷ்ணன்
நவ 22, 2024 07:44

மணிப்பூர் மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் தமிழகத்தில் வேலை செய்து கொண்டு இருப்பார்கள். அவர்கள் சிதம்பரத்தை கவனிக்கலாமே.


Kasimani Baskaran
நவ 22, 2024 06:03

வணிகர் ஒரு மிக கேவலமான தேசவிரோத ஜந்து - இதை வெளியே விட்டு வைத்து இருப்பதே தவறு.


Balasubramanian
நவ 22, 2024 05:59

நாமும் உள்துறை அமைச்சராக இருந்த ப. னா சி. னா பேசுவதற்கு பதில் மணிப்பூர் சென்று அமைதி ஏற்படுத்த முயலலாம் என்று பதிவு செய்து இருந்தோம் ! இப்போது அவர் பேசியதை வலை தளத்தில் இருந்து நீக்க வேண்டிய நிலை அவரது மணிப்பூர் கட்சியினரால் என்றால் அந்த மாநிலத்தில் நிலவும் உண்மை நிலை உணராமல் பேசும் மற்ற காங்கிரஸ் தலைவர்கள் பற்றி என்ன என்பது?


J.V. Iyer
நவ 22, 2024 04:29

இந்தியாவின் ஜார்ஜ் சோரேஸ் இந்த பசி. இவன் மேல் நடவடிக்கை எடுக்க எல்லோருக்கும் இன்னும் பயம். இன்னும் அவன் ஆட்கள்தான் மத்திய, மாநில அதிகாரத்தில், நீதிமன்றங்களில் நீதி அரசர்களாக. பண நோட்டு அச்சடிக்கும் இயந்திரத்தை போர்க்கிஸ்தானுக்கு விற்ற உடனேயே இவனை தண்டித்திருக்க வேண்டும்.


Palanisamy T
நவ 22, 2024 04:06

அன்று போரினால் எத்தனை உயிரிழப்புக்கள், துன்பங்கள் இடர்கள் இலங்கை தமிழர்கள் வீடுவாசலை மண்ணை இழந்தார்கள். உலகம் பார்த்துக் கொண்டுதான் இருந்தது. இனி அந்த காங்கிரஸ் கட்சியை தமிழகம் நம்பலாமா? தமிழர்கள் சிந்திக்கவேண்டும்,


Viswanathan nallakkan
நவ 24, 2024 09:01

அதை ஞாபகபடுத்திய திராவிட பயல்களே இவர்களோடுதானே கூட்டணி...இலங்கை தமிழர்கள் எ்ன்று கூறுவதலெ்லாம் வேசம். அதை மறக்காமல் இருந்திருந்தால் திமுக காங்ரஸ் கூட்டணி எப்படி.வெற்றிபெரும்


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை