உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / ஏழைகள் பற்றி பேசினால் மைக் அணைக்கப்படுகிறது: ராகுல்

ஏழைகள் பற்றி பேசினால் மைக் அணைக்கப்படுகிறது: ராகுல்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: '' நாட்டில் ஏழைகள், பிற்படுத்தப்பட்ட மக்கள், தலித்கள் பற்றி பேசினால் மைக்குகள் அணைக்கப்படுகிறது,'' என எதிர்க்கட்சி தலைவர் ராகுல் கூறினார்.அரசியலமைப்பு தினத்தை முன்னிட்டு டில்லியில் காங்கிரஸ் சார்பில் நடந்த நிகழ்ச்சியில் ராகுல் பேசியதாவது: அரசியலமைப்பு தினத்தை முன்னிட்டு பிரதமர் மோடியும் பா.ஜ.,வும் பார்லிமென்டில் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்துள்ளனர். ஆனால், இந்திய அரசியலமைப்பு பற்றி பிரதமர் மோடி படிக்கவில்லை என்பதை நான் உறுதியுடன் கூறுகிறேன். அப்படி படித்து இருந்தால், அவர் தற்போது செய்வது எதையும் செய்ய மாட்டார். அரசியலமைப்பு என்பது வெறும் புத்தகம் மட்டும் அல்ல. அது ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கான இந்தியாவின் சிந்தனை. அது உண்மை மற்றும் அகிம்சை பற்றியது. https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=t2sowpto&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0டாக்டர் அம்பேத்கர், புத்தர் மற்றும் மகாத்மா காந்தி ஆகியோரின் சமூக அதிகாரம் பற்றிய சிந்தனைகள் அரசியலமைப்பில் உள்ளது. இதில் சாவர்க்கரின் குரல் எங்கு உள்ளது? வன்முறையை பயன்படுத்த வேண்டும் என இந்த புத்தகத்தில் கூறப்பட்டு உள்ளதா? ஒருவரை தாக்க வேண்டும் அல்லது மிரட்ட வேண்டும் எனக் கூறப்பட்டு உள்ளதா? பொய்களை பயன்படுத்தி அரசை இயக்க வேண்டும் எனக்கூறப்பட்டு உள்ளதா? இது உண்மை மற்றும் அகிம்சைக்கான புத்தகம்.தெலுங்கானாவில் ஜாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தப்படுகிறது. இது வரலாற்று நடவடிக்கை. காங்கிரஸ் ஆட்சி அமையும் மாநிலங்களில் இதனை நாங்கள் செய்வோம். நாட்டின் ஒட்டு மொத்த அமைப்புகளும் தலித்கள், ஆதிவாசிகள் மற்றும் பிற்படுத்தப்பட்ட வகுப்பு மக்களுக்கு எதிராக உள்ளது. இவர்களுக்கு எதிராக ஒரு தடுப்பு ஏற்படுத்தப்பட்டு உள்ளது. அதனை பிரதமர் மோடியும், ஆர்.எஸ்.எஸ்., அமைப்பும் வலுப்படுத்தி வருகின்றனர். இவ்வாறு ராகுல் பேசினார். அப்போது ராகுல் பேசிக் கொண்டிருந்த மைக் திடீரென தொழில்நுட்ப கோளாறு காரணமாக அணைக்கப்பட்டது. பிறகு அது சரி செய்யப்பட்டதும் ராகுல் தொடர்ந்து பேசியதாவது: 3 ஆயிரம் ஆண்டுகளாக, தலித்கள், பழங்குடியினர், பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், ஏழைகள் பற்றி யாரேனும் பேசினால், அவர்களின் மைக்குகள் அணைக்கப்படுகின்றன. அப்படி அணைக்கப்படும் போது என்னை இருக்கையில் அமரும்படி ஏராளமானோர் கூறுகின்றனர். அவர்களுக்கு நான் சொல்லிக் கொள்வது. நான் அமர மாட்டேன். நான் தொடர்ந்து நிற்பேன். உங்கள் விருப்பப்படி மைக்கை அணைத்துக் கொள்ளுங்கள். நான் பேச வேண்டியதை பேசுவேன். இவ்வாறு ராகுல் பேசினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 55 )

Neelachandran
நவ 27, 2024 19:21

ஜனநாயகம் என்பது பணத்தினால் பணக்காரர் ஆவதற்காக பணக்காரர்களால் ஏற்பாடு செய்யப்படுகிறது


பேசும் தமிழன்
நவ 27, 2024 08:58

தங்கள் பெயரில் கூட காந்தி என்று போலி பெயரை வைத்து கொண்டு நாட்டு மக்களை ஏமாற்றி கொண்டு இருக்கும் இவன் பேசுகிறான் பாருங்கள்.... உன் பெயருக்கு பின்னால் காந்தி என்ற போலி பெயர் எதற்காக வந்தது... காந்தி குடும்பம் என்று பாமர மக்களை ஏமாற்றி ஓட்டு வாங்க தானே ???


பேசும் தமிழன்
நவ 27, 2024 08:52

பாரளுமன்றம் ஒன்றும் நீங்கள் நடத்தும் பொது கூட்டம் அல்ல... வாய்க்கு வந்தபடி உளறி கொண்டு இருக்க... உங்களுக்கு கொடுத்த நேரத்தில் தான்.... பேச வேண்டும்... அதுவும் நாட்டிற்கு நன்மை தரும் செயலை....


பேசும் தமிழன்
நவ 27, 2024 08:47

நாடு விடுதலை பெற்ற பிறகு 50 ஆண்டுகள் கான் கிராஸ் கட்சி ஆட்சி செய்த பின்பும்... நாட்டில் ஏழ்மை நிலையில் மக்கள் இருக்கிறார்கள் என்றால் அது யார் குற்றம்.... தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடி மக்கள் மற்றும் பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு கிடைக்க வேண்டிய நலன்களை பறித்து.... மத சார்பாக ஒரு தரப்புக்கு கொடுத்ததன் விளைவு தானே அது ???


Raj S
நவ 26, 2024 23:44

தலைப்பில் தவறு உள்ளது... ராகுல் சொன்னது, ஏழைகளை பற்றி "பொய்" பேசினால் மைக் அணைக்கப்படுகிறது...


Abc
நவ 26, 2024 23:16

You are the back bone of BJP. As long as you are there in congress, dont worry be happy for BJP.


RAJ
நவ 26, 2024 21:33

அட நல்லவனே ...


Ramesh Sargam
நவ 26, 2024 21:15

காங்கிரஸ் கட்சி தேர்தலில் தோற்றால், ஓட்டு இயந்திரம் மீது பழிபோடுவது சரியா?


sankaranarayanan
நவ 26, 2024 20:59

இந்திய அரசியலமைப்பு பற்றி பிரதமர் மோடி படிக்கவில்லை என்பதை நான் உறுதியுடன் கூறுகிறேன் என்று கூறும் பப்பு, முதலில் இவருடைய பாட்டி அவைகளை படித்துவிட்டு எமெர்ஜெண்சியை கொண்டுவந்தார்? எதிர் கட்சிக்காரர்கள் அனைவரையும் சிறையில் வைத்தார். எந்த அரசியலமைப்பு சட்டத்தின்படி செய்தார்? பேசுமுன் சற்றே திரும்பிப்பார்த்து பேசுங்க


ஆரூர் ரங்
நவ 26, 2024 20:46

உங்க பாட்டி வறுமையை விரட்டுவேன் என்று கூறியே 1971 தேர்தலில் வென்றார். அதன் பிறகு நான்கு முறை மத்திய ஆட்சிக்கு வந்தும் நீங்கள் வறுமையை அப்படியே விட்டு வைத்தது ஏன்?


முக்கிய வீடியோ