உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / வர்த்தக ஒப்பந்தம் குறித்து பேச்சு; இந்தியா வருகிறது அமெரிக்க குழு!

வர்த்தக ஒப்பந்தம் குறித்து பேச்சு; இந்தியா வருகிறது அமெரிக்க குழு!

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி:இந்தியாவுடன் இரு தரப்பு வர்த்தக ஒப்பந்தம் தொடர்பாக பேச்சு நடத்துவதற்காக அமெரிக்க குழுவினர் நாளை (மார்ச் 25) வர உள்ளனர்.அமெரிக்க அதிபராக பொறுப்பேற்ற பிறகு டொனால்டு டிரம்ப் தினமும் அதிரடி உத்தரவுகளை பிறப்பித்து வருகிறார். அமெரிக்க பொருட்களுக்கு வரி விதிக்கும் நாடுகளுக்கு பதிலுக்கு பதில் வரி விதிப்பதாக மிரட்டி வருகிறார். அவரது வரிவிதிப்பு அறிவிப்புகளால் கனடா, மெக்ஸிகோ, ஐரோப்பிய நாடுகள், சீனா கடும் அதிருப்தி அடைந்துள்ளன.இந்தியாவும் அமெரிக்க பொருட்களுக்கு அதிக வரி விதிப்பதாக டிரம்ப் தொடர்ந்து குறை கூறி வருகிறார். இந்நிலையில் இரு நாடுகளுக்கு இடையிலான வர்த்தக ஒப்பந்தம் தொடர்பாக பேச்சு வார்த்தை ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.பேச்சுவார்த்தையில் பங்கேற்பதற்காக அமெரிக்க குழுவினர் நாளை (மார்ச் 25) இந்தியா வர உள்ளனர். அமெரிக்காவின் தெற்கு மற்றும் மத்திய ஆசியாவுக்கான வர்த்தக பிரதிநிதி பிரண்டன் லிஞ்ச் மற்றும் குழுவினர் இந்த பேச்சுவார்த்தையில் பங்கேற்கின்றனர். இதுகுறித்து இந்தியாவுக்கான அமெரிக்க தூதரக செய்தி தொடர்பாளர் கூறியதாவது: வர்த்தகம் மற்றும் முதலீடு தொடர்பான விவகாரங்களில் இந்தியாவுடன் நடத்தும் பேச்சுகளுக்கு அமெரிக்க அரசு மிகுந்த முக்கியத்துவம் அளிக்கிறது. இந்த பேச்சுவார்த்தையின் மூலம் இருதரப்புக்கும் சமமான நன்மைகள் கிடைக்கும் என்று எதிர்பார்க்கிறோம் என்று தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

Easwar Kamal
மார் 24, 2025 20:14

மோடிஜி அமெரிக்கா நட்பு தேவை. அமெரிக்கா எது கேட்டாலும் கொடுப்பார். இந்தியவை அமெரிக்காஉடன் சேர்த்து கொள்வோம் என்றாலும் சரி என்பர். அவ்வளவு பாசம் அமெரிக்காவின் மேல்.


என்றும் இந்தியன்
மார் 24, 2025 16:33

வரட்டும் ஒரு நல்ல வர்த்தக ஒப்பந்தம் போடட்டும் அப்போ சொல்லலாம் டிரம்ப் ஆட்சியின் உண்மை தன்மையை


முக்கிய வீடியோ