உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / படங்களை திருத்திய தமிழக பெண்: நடிகை அனுபமா பரபரப்பு புகார்

படங்களை திருத்திய தமிழக பெண்: நடிகை அனுபமா பரபரப்பு புகார்

கொச்சி: தன் புகைப்படங்களை மாற்றம் செய்து சமூக வலைதளங்களில் பரப்பியதாக, தமிழகத்தைச் சேர்ந்த இளம்பெண் மீது கேரள போலீசில் நடிகை அனுபமா பரமேஸ்வரன் புகார் அளித்துள்ளார். பிரேமம் என்ற மலையாள படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை அனுபமா பரமேஸ்வரன். இவர், தமிழில் கொடி, பைசன் உள்ளிட்ட படங்களிலும் நடித்துள்ளார். இந்நிலையில், 'மார்பிங்' எனப்படும் திருத்தப்பட்ட தன் புகைப்படங்களை சமூக வலைதளத்தில் பரப்பியதாக, தமிழகத்தைச் சேர்ந்த, 20 வயது இளம்பெண் மீது நடிகை அனுபமா குற்றஞ் சாட்டியுள்ளார். இது குறித்து நடிகை அனுபமா, சமூக வலைதள பதிவில் கூறியிருப்பதாவது: சமீபத்தில், என்னை பற்றியும் என் குடும்பத்தைப் பற்றியும் தவறான தகவல் அடங்கிய பதிவை, 'இன்ஸ்டாகிராம்' சமூக வலைதளத்தில் பார்த்தேன். என் புகைப்படங்கள் மார்பிங் செய்யப்பட்டு என்னை பற்றி தவறான தகவல்கள் அதில் இடம் பெற்றிருந்தன. இது குறித்து கேரள சைபர் குற்றப்பிரிவு போலீசில் புகார் அளித்தேன். அவர்கள் நடத்திய விசாரணையில் தமிழகத்தைச் சேர்ந்த 20 வயது இளம்பெண் இதை செய்தது தெரியவந்துள்ளது. அந்த பெண்ணின் இளம் வயது, எதிர்காலத்தை கருதி அவர் பெயரை வெளியிட விரும்பவில்லை. ஸ்மார்ட்போன் வைத்திருப்பதை, பிறரை துன்புறுத்தி அவதுாறு செய்யும் உரிமையாக கருதக்கூடாது. நாங்கள் அந்த பெண் மீது சட்டப்படி நடவடிக்கை எடுத்துள்ளோம். அதன் விளைவுகளை அவர் எதிர்கொள்வார். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

நிக்கோல்தாம்சன்
நவ 10, 2025 07:06

ஒரு பொன்னே இப்படி seiyalaamaa?


Barakat Ali
நவ 10, 2025 06:21

தமிழச்சி எம்புட்டு பிசி ???? எதுல பிசி ????


முக்கிய வீடியோ