உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / பள்ளிகளில் ப வடிவில் இருக்கை வசதி: உத்தரவை நிறுத்தி வைத்தது தமிழக அரசு

பள்ளிகளில் ப வடிவில் இருக்கை வசதி: உத்தரவை நிறுத்தி வைத்தது தமிழக அரசு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: பள்ளிகளில் மாணவர் இருக்கை வரிசையை 'ப' வடிவில் மாற்றி அமைக்கும் திட்டத்தை நிறுத்தி வைக்க பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.கேரளாவில் சமீபத்தில் வெளியான, 'ஸ்தானார்த்தி ஸ்ரீகுட்டன்' என்ற திரைப்படம், கடைசி வரிசை இருக்கையில் அமர்வதால், கிராமப்புற மாணவர்களின் நலன் பாதிக்கப்படுகிறது என்பதை காட்சிப்படுத்தி இருந்தது. அரை வட்ட வடிவில் மாணவர்களின் இருக்கை மாற்றி அமைக்கப்பட்டால், கடைசி பெஞ்ச் என்பதே இருக்காது என்றும் அந்தப் படத்தில் வலியுறுத்தப்பட்டு இருந்தது.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=qq1ecuh2&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0இந்தப் படத்தின் எதிரொளியாக, அம்மாநிலத்தில், ஒரு சில பள்ளிகளில் 'ப' வடிவில் மாணவர்களின் இருக்கைகள் மாற்றம் செய்யப்பட்டன. பஞ்சாப், ஜம்மு காஷ்மீர் மாநிலங்களிலும் ஒரு சில பள்ளிகளில் இத்தகைய மாற்றம் செய்யப்பட்டது. தமிழகத்திலும் அதன் தாக்கம் எதிரொலித்துள்ளது. தமிழகத்தில் வாய்ப்பு உள்ள பள்ளிகளில், 'ப' வடிவில் இருக்கை வரிசையை மாற்றி அமைக்க, பள்ளி கல்வித்துறை உத்தரவு பிறப்பித்தது.ஆனால் இந்த உத்தரவு, சமூக வலைத்தளங்களில் கலவையான விமர்சனங்களை பெற்றது. ஒரு தரப்பினர் மத்தியில் வரவேற்பை பெற்றாலும், இன்னொரு தரப்பினர் இந்த முடிவை குறை கூறினர். மாணவர்கள் நீண்ட நேரம் பக்கவாட்டில் பார்வையை செலுத்த வேண்டி இருக்கும். இதனால் கழுத்து வலி ஏற்பட வாய்ப்புள்ளதாக சமூக வலைத்தளங்களில் விமர்சனங்கள் எழுந்தன. இதையடுத்து, உத்தரவு பிறப்பித்த அதே நாளிலேயே 'ப' வடிவில் மாற்றி அமைக்கும் திட்டத்தை நிறுத்தி வைக்க பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. வல்லுனர்களிடம் உரிய ஆலோசனை பெறும் வரை திட்டத்தை நிறுத்தி வைக்க பள்ளிக்கல்வித்துறை முடிவு செய்துள்ளது. இன்னும் ஒரு வாரத்தில் இது தொடர்பான முடிவு அறிவிக்கப்படும் என்றும் பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 24 )

RRR
ஜூலை 14, 2025 09:29

அரசுப்பள்ளி மாணவர்கள் பலருக்கு பத்தாம் வாய்ப்பாடே தெரியலையாம்... நிறைய பள்ளிக்கூடத்துல கட்டமைப்பு, கழிவறை வசதிகள் சரிவர இல்லையாம்... பல்வேறு பிரச்சினைகள் இருக்கு... இதுல ப வடிவம்... U வடிவம்னு உருட்டிக்கிட்டு...


ஆரூர் ரங்
ஜூலை 13, 2025 22:25

நிறைய ஊரகப் பள்ளிகளில் ஒரே மாணவர் மட்டுமே படிக்கிறார். அவருக்கு ப வடிவில் உட்கார YOGA பயிற்சி தரலாம்


எஸ் எஸ்
ஜூலை 13, 2025 19:23

முதலில் அரசு பள்ளி கட்டிடங்கள் நன்றாக இருக்கிறதா என்று பார்த்து சீரமையுங்கள்


sankaranarayanan
ஜூலை 13, 2025 17:27

பிறகு மாணவர்களுகு கழுத்து வலி வந்தால் திராவிட மாடல் அரசுதான் பொறுப்பேற்க வேண்டும் கரும்பலகை யில் ஆசிரியர்கள் எழுதுவது என்பது இனி வாய்ப்பில்லை ஏனென்றால் இருபக்கமும் அமரும் மாணவர்கள் கழுத்தை திருப்பி பார்த்துதான் கரும்பலகையை பார்க்க வேண்டும்


சிந்தனை
ஜூலை 13, 2025 17:00

மிகவும் அருமை மாதா மாதம் உத்தரவை மாற்றுவது மிகவும் நல்லது நாட்டு மக்களை பைத்தியக்காரர்கள் ஆக்கிவிடலாம் சீக்கிரமாக தற்கொலை செய்து கொள்வார்கள் அதன் மூலமாக ஜனத்தொகையும் குறையும்


theruvasagan
ஜூலை 13, 2025 15:55

ப வடிவில் உட்கார்த்தி வைத்துவிட்டால் கடைசி பெஞ்சுகாரன் புத்திசாலி ஆகிவிடுவானா. கல்வியாளர்கள் கருத்தை கேட்காமல் எவனோ பொழுதுபோக்குக்கு சினிமா எடுக்கறவன் சொல்லுவதை கேட்கணுமா.


Arachi
ஜூலை 13, 2025 13:22

ப வடிவில் மாணவர்களை அமர வைத்து விளையாட்டு முறையில் கற்பிப்பது ஒரு முறை . பெரிய தவறு ஒன்றுமில்லை. சாக் & டாக் முறையில் கண்டிப்பாக ப வடிவம் நீண்ட நேரம் வகுப்பு முறைக்கு எளிதாக இருக்காது. சோதனை முறையில் சரி இல்லை என்றால் மாற்றிக்கொள்வதில் என்ன தவறு இருக்கு. என்னமோ திமுக அரசு பெரிய தவறு செய்தது மாதிரி பேசுவது சரியில்லை என்பது கல்வியாளர்களுக்கு புரியும். பரிசோதனை முறையில் சரி இல்லை என்றால் கற்றல் கற்பித்தல் முறையை மாற்றி அமைக்க வேண்டியதுதான். இது ஒரு பெரிய விஷயம் அல்ல.


Palanisamy Palanisamy
ஜூலை 13, 2025 12:57

வகுப்பில் சுழற்சி முறையில் வாரம் ஒருமுறை அனைவரையும் இடம் மாறி அமர வைப்பதே சிறப்பானதாகும். இதனால் வாழ்க்கையில் எதுவும் நிரந்தரமில்லை என்பதையும் மாணவர்களுக்கு கற்று தர முடியும்.


RAAJ68
ஜூலை 13, 2025 12:55

சைடு பெஞ்சில் உட்காரும் மாணவர்களுக்கு கழுத்து வலி வரும்.


Ramesh Sargam
ஜூலை 13, 2025 12:10

இந்த ஒரு சின்ன விஷயத்துக்கே சரியாக முடிவு எடுக்கத்தெரியாத திமுக அரசு, மற்ற பெரிய விஷயங்களில் எப்படி முடிவு எடுக்கும் என்று யோசியுங்கள். இப்படிப்பட்ட ஒரு அரசு 2026 தேர்தலுக்குப்பிறகு தேவையா என்றும் நன்றாக யோசியுங்கள்.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை