உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / கவர்னருக்கு எதிரான தமிழக அரசின் மனுக்கள்: ஜனாதிபதி வழக்கின் தீர்ப்புக்கு பின் விசாரணை

கவர்னருக்கு எதிரான தமிழக அரசின் மனுக்கள்: ஜனாதிபதி வழக்கின் தீர்ப்புக்கு பின் விசாரணை

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: 'கவர்னரின் அதிகாரம் குறித்து, ஜனாதிபதி எழுப்பிய கேள்விகள் தொடர்பான வழக்கில் தீர்ப்பு வந்த பின், தமிழக கவர்னருக்கு எதிராக தமிழக அரசு சமீபத்தில் தாக்கல் செய்த மனு மீதான விசாரணையை நடத்தலாம்' என, உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.தமிழக சட்டசபையில் நிறைவேற்றி அனுப்பி வைக்கப்படும் மசோதாக்களுக்கு கவர்னர் ஒப்புதல் அளிக்காமல் கால தாமதம் செய்வது குறித்து, தமிழக அரசு சார்பில் உச்ச நீதிமன்றத்தில் தனித்தனியாக மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. ஏற்கனவே, கலைஞர் பல்கலை மசோதாவுக்கு கவர்னர் ஒப்புதல் வழங்காமல் ஜனாதிபதிக்கு அனுப்பியதை எதிர்த்து மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது. இந்நிலையில், தமிழக விளையாட்டு பல்கலை மசோதாவுக்கு கவர்னர் அனுமதி வழங்க உத்தரவிடக்கோரி நேற்று முன் தினம் மனு தாக்கல் செய்யப்பட்டது.இந்த இரண்டு மனுக்களும், உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய் அமர்வில் விசாரணைக்கு வந்தன. அப்போது தமிழக அரசு சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர், 'இந்த விவகாரத்தை பொறுத்தவரை அமைச்சரவையின் ஆலோசனைப்படி தான் கவர்னர் செயல்பட வேண்டும். அதை மீறி மசோதாவை ஜனாதிபதியின் ஒப்புதலுக்காக கவர்னர் அனுப்பி வைத்திருக்கிறார்' என, வாதிட்டார். அப்போது பேசிய தலைமை நீதிபதி கவாய், ''ஏற்கனவே கவர்னரின் அதிகாரம் தொடர்பாக உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு குறித்து ஜனாதிபதி, 14 கேள்விகளை எழுப்பியுள்ளார். அந்த வழக்கில் இன்னும் தீர்ப்பு வர வேண்டி இருக்கிறது. நவம்பர் 21க்கு முன்பாக தீர்ப்பு வெளியாகும் என எதிர்பார்க்கிறோம். எனவே, தமிழக அரசின் இந்த புதிய மனுக்களை அந்த தீர்ப்பு வெளியான பின் விசாரிக்கலாம். என்னுடைய பதவிக்காலம் 4 வாரம் தான் இருக்கிறது. அதற்குள் வழக்கில் முடிவு தெரியும்,'' எனக்கூறி, விசாரணையை ஒத்தி வைத்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 20 )

மணமுருகன்
அக் 19, 2025 00:03

அயர்லாந்து வாரிசு திராவட மாடல் ஓட்டை விளம்பர மோக ஊழல்கட்சி திமுகா கூட்டணி அறிவித்த திட்டங்களுக்கி நிதி ஒதுக்கீடில்லை ஏனென்றால் அறிவிப்புகள் அனைத்தும் பயன்பாட்டில் உள்ள !தை சார்ந்த திட்டங்கள் இருக்கும் திட்டங்களை மீண்டும் அறிவிப்பதா இது எந்த வகை பித்தலாட்டம் அறிவிப்பே இந்த லட்சணம் இதில் புதிய மசோதாக்கள் பொழுது போக்க சட்டசபை நடவடிக்கைப் போல


Gnana Subramani
அக் 18, 2025 16:32

ஆளுநர் பதவிக்கும் தேர்தல் வைத்தால் உண்மை தெரிந்து vidum


c.mohanraj raj
அக் 18, 2025 14:12

கவர்னருக்கும் ஜனாதிபதிக்கும் எதிரான மனுக்களை விசாரிக்கும் நீதிபதிகளை வீட்டிற்கு அனுப்ப வேண்டும் அவர்களை விசாரிக்க சட்டத்தில் இடம் இல்லை


theruvasagan
அக் 18, 2025 10:08

ஊழலை கட்டுப்படுத்தும் முயற்சிகளுக்கு எதிராக வெட்டி வழக்குகள் போடுவதை கட்டுப்படுத்த வேண்டும்.


Shekar
அக் 18, 2025 10:08

தீர்ப்பு வருவதற்குள் விடியல் முடிந்துவிடும்.


vbs manian
அக் 18, 2025 09:09

தமிழகத்துக்கு கவெர்னரே வேண்டாம். யார் வந்தாலும் இந்த நிலைதான். கட்டுக்கு அடங்கா காட்டாற்று வெள்ளம் பாய்கிறது.


பாலாஜி
அக் 18, 2025 08:15

ஜனாதிபதி வழக்கின் தீர்ப்பு வர இருபது ஆண்டுகள் ஆகுமா?


GMM
அக் 18, 2025 07:44

ராணுவ வீரர்கள் கட்டுப்பாட்டுக்கு முக்கிய காரணம் பதவிக்கு உரிய மரியாதை கொடுப்பது. கவர்னருக்கு எதிராக மனு தாக்கல் மற்றும் விசாரணை ஒரு ஆபத்தான நடைமுறை. அரசியல் சாசன பதவிகள் எந்த நீதிபதி கட்டுப்பாட்டிலும் வராது . நீதிபதியை தேச விரோதம் நெருங்கி கட்டுபடுத்தி விடும். திமுக பின்னால் ஒரு பெரிய தேச விரோத கும்பலின் பின்புலம் தான் மசோதா மூலம் வழக்கு. மசோதா பதவி மற்றும் அதன் பண பலன் திமுக கால் தூசிக்கு சமம். அரசியல் சாசன பதவிகளை அசைந்து பார்க்க தான் வழக்கு.


Barakat Ali
அக் 18, 2025 07:20

இந்தியா 1950 லேயே குடியரசு நாடாகியும், கவர்னரின் அதிகாரங்களையே இன்னமும் வரையறுக்க முடியவில்லை ..... இதில் நீதித்துறை தலையிடலாம், இதில் தலையிட முடியாது என்பதிலும் கூடக் குழப்பம் .... காமெடி .....


ramani
அக் 18, 2025 07:12

முதலில் ஜனாதிபதிக்கு பதில் தரட்டும். அங்கேயே நீதிமன்றத்தின் நிலை ஆட்டம் கண்டுள்ளது. திராவிஷ மாடல் அரசு ஆளுநர் மீது வழக்கு தொடர்ந்து கொண்டிருந்தால் அதை குப்பை தொட்டியில் போடட்டும். ஆளுநர் சட்டப்படிதான் செயல்படுகிறார். தமிழக மக்களுக்கு அவர் மீது மிகுந்த நம்பிக்கை உள்ளது.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை