உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / அரசு திட்ட விளம்பரங்களில் முதல்வர் பெயருக்கு தடை; சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு மேல்முறையீடு

அரசு திட்ட விளம்பரங்களில் முதல்வர் பெயருக்கு தடை; சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு மேல்முறையீடு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: அரசு திட்டங்களில் முதல்வரின் பெயரை பயன்படுத்த தடை விதித்த ஐகோர்ட் உத்தரவுக்கு எதிராக, சுப்ரீம்கோர்டடில் தமிழக அரசு மேல்முறையீடு செய்துள்ளது.தமிழக அரசு துவங்க உள்ள புதிய திட்டங்கள் மற்றும் அமலில் உள்ள பழைய திட்டங்கள் தொடர்பான விளம்பரங்களில், முதல்வரின் புகைப்படம் இடம் பெற அனுமதித்த சென்னை உயர் நீதிமன்றம், அவரது பெயரை பயன்படுத்த தடை விதித்துள்ளது.இந்த விவகாரம் தொடர்பாக, அ.தி.மு.க., தொடர்ந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், அரசு துவங்கும் திட்டங்களில், முன்னாள் முதல்வர் படத்தையோ, ஆளுங்கட்சியின் கொள்கை, சித்தாந்த தலைவர்களின் புகைப்படங்களையோ பயன்படுத்தக் கூடாது என்றும் உத்தரவிட்டுள்ளது.இந்நிலையில், இன்று (ஆகஸ்ட் 04) அரசு திட்டங்களில் முதல்வரின் பெயரை பயன்படுத்த தடை விதித்த ஐகோர்ட் உத்தரவுக்கு எதிராக, சுப்ரீம்கோர்டடில் தமிழக அரசு மேல்முறையீடு செய்துள்ளது.இந்த வழக்கை விசாரணைக்கு சுப்ரீம்கோர்ட் தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய் அமர்வு ஏற்றுக்கொண்டது. நாளை மறுதினம் ஆகஸ்ட் 6ம் தேதி நீதிபதிகள் விசாரிக்க உள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ