உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / தொகுதி மறுசீரமைப்பால் தமிழகம் பயனடையும்: ராஜ்நாத் சிங்

தொகுதி மறுசீரமைப்பால் தமிழகம் பயனடையும்: ராஜ்நாத் சிங்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி:2026 ஆம் ஆண்டுக்கு பிறகு தொகுதி மறுசீரமைப்பு மூலம் தமிழகத்தில் உள்ள லோக்சபா தொகுதிகள் அதிகரிக்ககூடும் என்று பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் வலியுறுத்தினார்.தமிழக முதல்வர் ஸ்டாலின்,2026 ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி, லோக்சபா தொகுதி மறுசீரமைப்பு நடவடிக்கை மிகுந்த ஆபத்தானது. இதனால் தமிழகம் உள்ளிட்ட தென் மாநிலங்களின் லோக்சபா தொகுதிகள் எண்ணிக்கை குறைக்கப்படும். அதேநேரத்தில் வட இந்திய மாநிலங்களில் லோக்சபா தொகுதிகளின் எண்ணிக்கை அதிகரிக்கும் என்று கூறியிருந்தார். இது குறித்து மற்ற மாநில முதல்வர்களுக்கும் கடிதம் எழுதி உள்ளார்.இதனயடுத்து ,முதல்வர் ஸ்டாலின் எழுப்பிய கவலையை போக்கும் வகையில் பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கூறியதாவது:இந்த செயல்முறை தமிழகம் உட்பட அனைத்து மாநிலங்களிலும் இடங்களை அதிகரிக்க வழிவகுக்கும்.வரையறை திட்டமிட்டபடி தொடர வேண்டும் என்று நான் நம்புகிறேன். ஸ்டாலினுக்கு ஏதேனும் ஆட்சேபனை இருந்தால், அவர் சுதந்திரமாக கூறலாம். இந்த விஷயத்தில் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் ஆலோசிப்பார்கள். நீதித்துறை இறுதி முடிவை எடுக்கும். சட்டசபையாக இருந்தாலும் சரி, லோக்சபாவாக இருந்தாலும் சரி, ஒவ்வொரு மாநிலத்திலும் எல்லை நிர்ணயத்திற்குப்பிறகு இடங்களின் எண்ணிக்கை இயல்பாகவே அதிகரிக்கும் என்பதை அனைவரும் உறுதியாக நம்ப வேண்டும்.தமிழகம், ஆந்திரா, கர்நாடகா மற்றும் கேரளாவும் அதிகரிப்பைக் காணும் என்று நான் உறுதியாக நம்புகிறேன். வட இந்தியா மட்டுமே பயனடையும் என்ற கூற்று நியாயமானது அல்ல. இவ்வாறு ராஜ்நாத் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 10 )

appaavi
மார் 12, 2025 08:58

Gerrymandering in India by BJP.


अप्पावी
மார் 12, 2025 08:15

தொகுதி சீரமைப்பு இப்போதைக்கு குடையாதுன்னுட்டு போன வாரம் அமித்சா பேசுனாரே. இப்போ தொகுதி சீரமைப்பு தமிழ்நாட்டுக்கு நல்லதுன்னு இவர் பேச்சு. ஏதோ புகையுது கோவாலு.


சிட்டுக்குருவி
மார் 12, 2025 07:36

மிரண்டவன் கண்ணுக்கு இருண்டதெல்லாம் பேய் என்ற கதைதான் .தங்களின் கதை கந்தலாகிவரும் வேலையில் மக்களை திசை திருப்பும் வேலைதான் இது. ஆச்சரியபடும் விஷயம் என்னவென்றால் மக்களவையில் பல ஐந்தாண்டுகளாக கொட்டை போட்ட கோமாளிகளுக்கு கூட என்ன பேசுகிறோம் என்று புரிந்து பேசவில்லை .2001 இல் தமிழ்நாட்டின் மக்கள் தொகை ஆறு கோடியே இருபத்திநான்கு லக்ஷங்கள் 2011 இல் ஏழு கோடியே இருபத்தி ஒரு இலக்ஷங்கள் .2021 இல் மக்கள் தொகை எட்டு கொடியே இருபத்தி ஓரு லக்ஷங்களாக இருக்கும் என்று கணிக்கப் பட்டிருக்கின்றது .மக்கள் தொகைஇப்பொழுது குறைந்துவிட்டது என்று எதைவைத்து சொல்கிறார்கள். மேலும் 1973 இல் இயற்றிய சட்டப்படி எந்த ஒரு மாநிலத்தின் பிரதிநிதிகளின் எண்ணிக்கையும் மருவறையின்போது குறைக்கப்படக்கூடாது என்ற விதியே உள்ளது .அப்படி இருக்கும் போது எதை வைத்து மக்களின் கவனத்தை மடைமாற்ற முயற்சிக்கிறார்கள்? மருவறையின் போது எண்ணிக்கை கூடவே வாய்ப்புள்ளது அல்லது இந்த நிலைமையே நீடிக்கும். இது அரசின் மோசமான ஆளுமையை மடைமாற்றம் செய்யும் முயற்ச்சியே .எண்ணிக்கை என்னவிருந்தால் என்ன .மக்களுக்கு ஒரு பயனும் இருக்கப்போவதில்லை .எண்ணிக்கை அதிகமானால் கமிஷன் குறைந்துபோகும் .அவவலவே .


Iyer
மார் 12, 2025 06:16

சட்டப்படி எப்படி செய்யவேண்டுமோ அதன்படி தொகுதி சீரமைப்பு மத்திய அரசு செய்யட்டும். மாநில அரசுகளின் பூச்சாண்டிகளிக்கு மத்திய அரசு அஞ்ச தேவையில்லை.


Priyan Vadanad
மார் 11, 2025 23:40

எல்லா மாநிலங்களுக்கும் பத்து சதவிகித இன்க்ரிமெண்ட் என்று தொகுதிகளை பாராளுமன்றத்தில் நிர்ணயம் செய்துவிட்டு அதற்கேற்றாற்போல தொகுதிகளை வரையறை செய்யலாமே


Priyan Vadanad
மார் 11, 2025 23:40

எல்லா மாநிலங்களுக்கும் பத்து சதவிகித இன்க்ரிமெண்ட் என்று தொகுதிகளை பாராளுமன்றத்தில் நிர்ணயம் செய்துவிட்டு அதற்கேற்றாற்போல தொகுதிகளை வரையறை செய்யலாமே


தாமரை மலர்கிறது
மார் 11, 2025 22:40

தனக்கு என்ன கிடைக்கிறது என்று தான் தமிழகம் பார்க்க வேண்டும். உபி, எம்பி, ராஜஸ்தான், பிஹாருக்கு என்ன கிடைக்கிறது என்று பார்க்க கூடாது. தமிழகத்திற்கு தொகுதி மறுசீரமைப்பால், பத்து தொகுதிகள் அதிகம் கிடைக்கிறது. தமிழக மக்கள் தொகையை விட அதிகமாகவே கிடைக்கிறது. குறைக்கப்படவில்லை.இதனால் தமிழகம் மகிழ்ச்சி தான் அடையவேண்டும். மாறாக ஸ்டாலின் குறைசொல்லிக்கொண்டு திரிகிறார்.


Priyan Vadanad
மார் 11, 2025 23:47

இப்படியே பல்லாக்கு தூக்குங்கள். தாமரை உலர்கிறது என்று பெயர் மாற்றம் செய்ய வேண்டியதிருக்கும்.


ஆரூர் ரங்
மார் 11, 2025 22:04

சென்னைல பத்து MLAசீட் டாவது அதிகரிக்கும். மற்ற மா‌வ‌ட்டங்களில் குறையும். முதலில் இதற்கு முதல்வர் தீர்வு காண வேண்டும். அல்லது வரி வருவாய் அதிகம் தரும் மாவட்டங்களுக்கு விகிதப்படி அதிகரிக்கலாம்.


PalaniKuppuswamy
மார் 11, 2025 22:01

திராவிடன் போட்ட வலையில் மத்திய அரசு.. ஏன் பதில் சொல்லுகிறீர்கள் என்று புரியவில்லை. உண்மையில் தமிழகதிற்கு நன்மை இருந்தாலும் திராவிட கும்பல் இல்லை என்று புரட்டு பேசும் . அமிதக்ஷி , பிரதமர் கூறிய பிறகும் இதை பேசுவது .. சும்மாவே பேசி பெரிதாக்குவாதற்கு ..


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை