உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / ரயிலில் குழந்தை கடத்திய தமிழக வாலிபர் சிக்கினார்

ரயிலில் குழந்தை கடத்திய தமிழக வாலிபர் சிக்கினார்

பாலக்காடு: கேரள மாநிலம், பாலக்காட்டில், குடிபோதையில், ரயிலில் இருந்து பச்சிளம் குழந்தையை கடத்திய தமிழக வாலிபரை போலீசார் கைது செய்தனர்.ஒடிசா மாநிலத்தை சேர்ந்த தம்பதி மானஸ் - ஹமீரா. இவர்கள், ஒரு வயதான பெண் குழந்தையுடன், கட்டட வேலைக்காக கேரள மாநிலம், ஆலுவாவுக்கு, டாடா நகர் எக்ஸ்பிரஸ் ரயிலில் வந்தனர்.நேற்று முன்தினம் நள்ளிரவு, திருச்சூர் ரயில்வே ஸ்டேஷன் வந்ததும், திடீரென உறக்கத்தில் இருந்து எழுந்த தம்பதி, குழந்தையை காணாததால் ரயில்வே போலீசாரிடம் புகார் அளித்தனர்.போலீசார், உடனடியாக அனைத்து ரயில்வே ஸ்டேஷன்களுக்கும் தகவல் தெரிவித்தனர். பாலக்காடு ரயில்வே ஸ்டேஷனில், கையிலிருந்த குழந்தையின் அழுகையை கட்டுப்படுத்த முடியாமல் விழித்த நபரிடம் போலீசார் விசாரித்தனர்.அவர், திண்டுக்கல்லை சேர்ந்த வெற்றிவேல், 38, என்பதும், ரயிலில் குழந்தையை கடத்தியதும் தெரியவந்தது. அவரை கைது செய்து, குழந்தையை போலீசார் மீட்டனர். பாலக்காட்டிற்கு வந்த திருச்சூர் போலீசார், பெற்றோரிடம் குழந்தையை ஒப்படைத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி