உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / இந்தியாவின் ஒற்றுமையை பிரதிபலிக்கும் தமிழகத்தின் பங்களிப்பு: ராகுல்

இந்தியாவின் ஒற்றுமையை பிரதிபலிக்கும் தமிழகத்தின் பங்களிப்பு: ராகுல்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: ''தமிழகத்தின் பங்களிப்புகள், இந்தியாவின் புதுமை மற்றும் ஒற்றுமையை பிரதிபலிக்கின்றன'', என லோக்சபா எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் கூறியுள்ளார்.சென்னை கோட்டூர்புரத்தில் உள்ள, அண்ணா நுாற்றாண்டு நுாலக அரங்கில், இன்று (ஜன.,23), இந்திய துணைக்கண்ட வரலாற்றின் கண்ணோட்டத்தை மாற்றி அமைக்கும், 'இரும்பின் தொன்மை' என்ற நுாலை, முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டார். அப்போது அவர் பேசுகையில், 5,300 ஆண்டுகளுக்கு முன் தமிழகத்தில் இரும்பு பயன்படுத்தப்பட்டது. இரும்பு தாதுவிலிருந்து இரும்பை பிரிக்கும் தொழில்நுட்பம் தமிழகத்தில் தான் தொடங்கியது. இந்தியாவின் வரலாறு இனி தமிழ் நிலத்தில் இருந்து தான் எழுதப்படும் எனக்கூறியிருந்தார்.இது தொடர்பாக ராகுல் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது: இந்தியாவின் வளமான பாரம்பரியம், உலகிற்கு தொடர்ந்து உத்வேகம் அளிக்கிறது. தமிழகத்தில், சமீபத்திய தொல்லியல்துறை கண்டுபிடிப்புகள் 5,300 ஆண்டுகளுக்கு முன்னரே இரும்பு பயன்பாட்டில் இருந்ததை காட்டுகிறது. இது இரும்பு யுகத்தில் ஆரம்ப கால முன்னேற்றங்களை காட்டுகிறது. தமிழகத்தின் பங்களிப்புகள், இந்தியாவின் புதுமை மற்றும் ஒற்றுமையை பிரதிபலிக்கின்றன.ஒவ்வொரு மாநிலத்திலும் சமூகத்திலும் மற்றும் குரலிலும் செழித்து வளரும் இந்தியாவின் உணர்வைக் கொண்டாடுவோம். இவ்வாறு அந்த அறிக்கையில் ராகுல் கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 7 )

Laddoo
ஜன 23, 2025 20:59

கேடுகெட்ட ஓர் எம்பி திருப்பரங்குன்றத்துல பிரியாணி சாப்பிடுனு இருக்கானே அத வச்சி சொல்றியா


Barakat Ali
ஜன 23, 2025 20:57

தமிழகத்தின் பங்களிப்புகள், இந்தியாவின் புதுமை மற்றும் ஒற்றுமையை பிரதிபலிக்கின்றன ......... துக்ளக்காரை குத்திக்காட்டியுள்ளார் ......


பேசும் தமிழன்
ஜன 23, 2025 19:38

பப்பு..... ஆனால் நீங்கள் என்னமோ உங்கள் கொள்ளு தாத்தா நேருவும்...... நீங்கள் போலியாக பெயரை வைத்து கொண்டு இருக்கும் காந்தி மட்டுமெ காரணம் என்பது போல் உருட்டி கொண்டு இருக்கிறார்களே ???


Kumar Kumzi
ஜன 23, 2025 18:33

ஆமாம் உன்னை போல ஓங்கோல் தேசத்துரோகி தான் டாஸ்மாக் நாட்டை ஆட்சி செய்றார்


R SRINIVASAN
ஜன 23, 2025 18:20

பாரம்பரியத்தை பத்ரி ராகுல் பேசுவது ஆச்சர்யமாயிருக்கிறது .கர்ப்பமான பசுவின் மடியை அறுத்து அதன் தலையை வெட்டி கொலை செய்ததோடு அல்லாமல் அதன் குட்டியான இலஙக்கன்றின் கால்களை வெட்டி அந்த கன்றையும் துடிக்க துடிக்க வெட்டிக்கொலை செய்வதை வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்கிறது உன்னுடை கர்நாடக அரசாங்கம். இந்தியாவின் பாரம்பரியத்தை பத்ரி உனக்கு என்ன தெரியும் .பேசாமல் நீயும் உன் தாயாரும் ,உன் சகோதரியும் இந்த நாட்டை விட்டு இத்தாலிக்கு சென்று ஓய்வெடுத்தக்கொள்ளுங்கள் .கமல்நாத் அல்லது அசோக்கெலோட்டை காங்கிரஸ் தலைவருக்குங்கள் காங்கிரஸ் வளரும்.


Saai Sundharamurthy AVK
ஜன 23, 2025 17:50

ஈரோடு தேர்தல் பிரச்சாரத்திற்கு வர முடியவில்லை என்று சொல்லி விட்டு போக வேண்டியது தானே !!!


hariharan
ஜன 23, 2025 17:39

நமது அண்டை மாநிலம் கேரளாவில் எங்கும் குப்பையை பார்க்க முடிவதில்லை. அவைகளை மூடையாக கட்டி தெருக்களில் இருந்து அப்புறப்படுத்தி விடுகின்றனர். தமிழ்நாட்டில் தெருக்களில் குப்பை, குளங்களில் குப்பை, பஸ்டாண்டு, ரியில்வே ஸ்டேஷன் எல்லா இடமும் குப்பை மயம்.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை