உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / தமிழ் மாணவி கழுத்து அறுத்து கொலை: பெங்களூரில் பட்டப்பகலில் பயங்கரம்

தமிழ் மாணவி கழுத்து அறுத்து கொலை: பெங்களூரில் பட்டப்பகலில் பயங்கரம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

ஸ்ரீராமபுரம்: பெங்களூரில் தமிழர்கள் அதிகம் வசிக்கும் பகுதியான ஸ்ரீராமபுரம் சுதந்திரபாளையா, 1வது மெயின் ரோட்டில் வசிப்பவர் கோபால். இவரது மனைவி வரலட்சுமி. இந்த தம்பதிக்கு பிரசாந்த், 22, என்ற மகனும், யாமினி பிரியா, 20, என்ற மகளும் இருந்தனர். கோபாலின் சொந்த ஊர் தமிழகத்தின் வேலுார் மாவட்டம், படவேடு கிராமம். பல ஆண்டுகளாக பெங்களூரில் குடும்பத்துடன் வசிக்கிறார். பனசங்கரியில் உள்ள தனியார் கல்லுாரியில், யாமினி பி.பார்ம் 2ம் ஆண்டு படித்தார். இவரை, எதிர்வீட்டில் வசிக்கும் விக்னேஷ், 25, என்பவர் ஒருதலையாக காதலித்தார். பல முறை தன் காதலை வெளிப்படுத்தியபோதும், அவர் ஏற்றுக் கொள்ளவில்லை. கடந்த ஏப்ரல் மாதம் ஸ்ரீராமபுரத்தில் நடந்த திரவுபதி கோவில் கரக ஊர்வலத்தின்போது, யாமினி கழுத்தில், விக்னேஷ் வலுக்கட்டாயமாக மஞ்சள் கயிறை கட்டி உள்ளார். பின், அந்த கயிறை அவர் கழற்றிவிட்டார். இதுகுறித்து தெரிய வந்ததும், விக்னேஷை பிடித்து போலீசார் விசாரித்தனர். ஆனால் அவர் மீது யாமினி குடும்பத்தினர் புகார் செய்யவில்லை. 'இனி யாமினியின் பின்னால் செல்ல மாட்டேன்' என்று விக்னேஷ் கூறியதால், போலீசார் எச்சரித்து அனுப்பினர். இந்நிலையில் கடந்த ஒரு மாதமாக மீண்டும் யாமினியின் பின்னால் விக்னேஷ் சென்றார். தன்னை காதலிக்கும்படி மீண்டும் வற்புறுத்த ஆரம்பித்தார். யாமினி கண்டுகொள்ளவில்லை. நேற்று காலை வழக்கம்போல கல்லுாரி சென்ற யாமினி, கல்லுாரி முடிந்ததும் மெட்ரோ ரயிலில் வந்து, மல்லேஸ்வரம் மெட்ரோ ரயில் நிலையத்தில் இறங்கி, வீட்டிற்கு நடந்து சென்றார். அவரை பின்தொடர்ந்து சென்ற விக்னேஷ், வழிமறித்து தகராறு செய்தார். திடீரென தான் மறைத்து வைத்திருந்த மிளகாய் பொடியை எடுத்து யாமினியின் கண்ணில் துாவி, அவரது கழுத்தை கத்தியால் அறுத்துவிட்டு, அங்கிருந்து தப்பினார். ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடிய யாமினி, சிறிது நேரத்தில் சம்பவ இடத்திலேயே இறந்தார். தகவல் அறிந்த பெற்றோர், சம்பவ இடத்திற்கு வந்து மகளின் உடலை பார்த்து கதறி அழுதனர். தலைமறைவாக உள்ள விக்னேஷை போலீசார் தேடிவருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 11 )

தர்மராஜ் தங்கரத்தினம்
அக் 17, 2025 07:44

பெரிய இடத்து பையனாக இருந்தால் போலீசார் எச்சரித்து விட்டுவிடுவார்கள். நடவடிக்கை எடுக்க மாட்டார்கள் ....


நிக்கோல்தாம்சன்
அக் 17, 2025 07:33

வழக்கம்போல பொதுமக்கள் இதனை வீடியோ எடுத்துக்கொண்டு சோசியல் மீடியாவிற்காக வேலை செய்துகொண்டு இருந்தனர்


அப்பாவி
அக் 17, 2025 06:50

அவனைப் பிடிச்சதும் கேள்வி ஏதும் கேக்காம என்கவுண்ட்டரில் போட்டுத் தள்ளணும். இல்லேன்னா தஸ்வந்த் நாதிரி நிரபராதின்னு கோர்ட் விடுவிச்சுரும்.


BALACHANDRAN
அக் 17, 2025 06:49

தன்னை காப்பாற்றிக் கொள்ள தவறி விட்டால் பாவம்


Ram
அக் 17, 2025 06:46

உத்தரபிரதேச வைத்தியம் நம்ம ஊருக்கு தேவைப்படும் நேரம் வந்துவிட்டது


GMM
அக் 17, 2025 06:33

திருமணம், மறுமணம், மத மாற்றம், செய்ய பெற்றோர் ஒப்புதல் கட்டாயம் என்றால், காதல் கொலை குற்றங்கள் குறையும். சீர்திருத்தம் திருமணம் செய்ய குடும்ப வாரிசு ஒப்புதல் கட்டாயம். நீதிமன்ற வழக்கில் பாதிக்க படுவர் உடன் நிவாரணம் பெறுவது இல்லை. குற்றம் அதிகரிக்க நீதிமன்ற விசாரணை சடங்கு முக்கிய காரணம்? டாக்டருக்கு மாத சம்பளம் போல் வக்கீல் நியமனம் செய்ய வேண்டும்.


D Natarajan
அக் 17, 2025 05:57

யோகி போன்ற முதலமைச்சர் எல்லா மாநிலங்களிலும் அவசியம்


RK
அக் 17, 2025 05:07

பெற்றோர்களின் கவன குறைவே இதற்க்கு காரணம்.


visu
அக் 17, 2025 07:27

அவனை முதலிலேயே பிடித்து உள்ளே வைத்தால் நீதிமன்றங்கள் ஏற்றுக் கொள்ளாது என்ன செய்வது என்ற நடக்கக்கூடிய தீர்வு தேவை


Kasimani Baskaran
அக் 17, 2025 04:00

பைத்தியங்கள் பலவிதம். இது தனிவிதம்...


Ramesh Sargam
அக் 17, 2025 01:51

இதே சம்பவம் உத்திர பிரதேசத்தில் நடந்திருந்தால் அந்த கொலைகாரன் இந்நேரம் என்கவுண்டர் செய்யப்பட்டிருப்பான். கர்நாடகாவில் அவனுக்கு ஜாமீன், அல்லது ஒருவேளை சிறையில் அடைத்தாலும் அங்கே நல்ல வகைவகையான மீன் குழம்புடன் சாப்பாடு.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை