உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / தெருநாய்கள் விவகாரம்; தலைமை செயலர் சுப்ரீம் கோர்ட்டில் ஆஜர்

தெருநாய்கள் விவகாரம்; தலைமை செயலர் சுப்ரீம் கோர்ட்டில் ஆஜர்

புதுடில்லி: தெருநாய்களை கட்டுப்படுத்துவது தொடர்பான வழக்கில் உச்சநீதிமன்ற கண்டிப்புக்குப் பிறகு, தமிழக அரசின் தலைமை செயலர் முருகானந்தம் இன்று நேரில் ஆஜரானார். அப்போது, பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்வதில் ஏற்பட்ட தாமதத்திற்காக, தமிழகம் உள்ளிட்ட மாநில செயலாளர்கள் நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்டனர். தெருநாய்களை கட்டுப்படுத்த உரிய வழிகாட்டு நெறிமுறைகளை உருவாக்குவது தொடர்பாக மேற்கு வங்கம், தெலுங்கானா தவிர்த்து, பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்யாத மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் தலைமை செயலர்கள் நவ.,3ம் தேதி ஆஜராக வேண்டும் என்று கடந்த அக்.,27ம் தேதி உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.மேலும், தலைமை செயலர்கள் நேரில் ஆஜராவதில் இருந்து விலக்களிக்க விடுத்த கோரிக்கையையும் நீதிமன்றம் நிராகரித்து விட்டது. இந்த நிலையில், தெருநாய்களை கட்டுப்படுத்துவது தொடர்பான வழக்கில் தமிழக தலைமைச் செயலாளர் முருகானந்தம் உச்சநீதிமன்றத்தில் நேரில் ஆஜரானார். அப்போது, தமிழக அரசு சார்பில் பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்யப்பட்டது. இதேபோல, ஆந்திரா, கர்நாடகா போன்ற பிற மாநிலங்களின் தலைமை செயலர்கள் நேரில் ஆஜராகி பிரமாணப் பத்திரத்தை தாக்கல் செய்தனர். இதைத் தொடர்ந்து, அனைத்து மாநில பிரமாண பத்திரங்களை ஆராய்ந்து ஒருங்கிணைந்த குறிப்பாக கொடுக்கும்படி, வழக்கறிஞர் கவுரவ் அகர்வாலுக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர். மேலும், தெருநாய்கள் கடியைத் தடுக்க மாநிலங்கள் எடுத்த நடவடிக்கைகளை ஆய்வு செய்த பிறகு கூடுதல் உத்தரவு பிறப்பிக்கப்படும் என்றும், புதிய உத்தரவு பிறப்பிக்கப்படும் வரையில் பழைய உத்தரவு தொடரும் என்றும் உச்சநீதிமன்றம் அறிவித்தது. இதையடுத்து, இந்த வழக்கின் அடுத்தகட்ட விசாரணையை நவ.,7ம் தேதிக்கு ஒத்திவைத்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 7 )

தாமரை மலர்கிறது
நவ 03, 2025 19:55

தெருநாய்களை குடும்ப கட்டுப்பாடு செய்யுங்கள். தெருநாய்களை கைதுசெய்து சிறையில் அடைத்து கொலைசெய்வது, மனிதாபிமற்ற செயல்.


N S
நவ 03, 2025 16:54

தெருநாய்கள் கடியைத் தடுக்க மாநிலங்கள் எடுத்த நடவடிக்கைகளை ஆய்வு செய்த பிறகு "தற்போதைய முயற்சிகளை தொடருமாறு" புதிய உத்தரவு பிறப்பிக்கப்படும். உச்சநீதிமன்றம் நேரம் இப்படி விரயமாகிறது.


Ravi
நவ 03, 2025 15:20

அப்படியே புது டிஜிபி போடதற்கு மறுபடியும் கூப்பிடுவார்கள். ஜட்ஜ் ஐயாகிட்ட சொல்லி தமிழ்நாட்டு மக்களின் பணத்தை இன்னும் விரயம் ஆக்க விரும்பவில்லை. அதனால் இன்னைக்கே தண்டனை கொடுங்கள் என்று கேட்டு விடுங்க


Anantharaman Srinivasan
நவ 03, 2025 14:32

தெருநாய்கள் விவகாரத்தில் மேற்குவங்கம் தெலுங்கானா போல் தமிழ்நாடும் குறிப்பிட்ட நேரத்தில் பிராமணபத்திரம் தாக்கல் செய்திருத்தால் தலைமை செயலர் + அவரின் Asst. கூட்டம் பல லட்சங்களை செலவழித்து சுப்ரீம் கோர்ட்டில் ஆஜராகியிருக்வேண்டாம். யார் பணம்?


KRISHNAN R
நவ 03, 2025 14:03

மக்களுக்கு..... பாதுகாப்பு வழங்க வேண்டும்


GMM
நவ 03, 2025 13:44

தெரு நாய் வழக்கில் முருகானந்தம் ஆஜர் என்பது தமிழக நிர்வாகம், மாநில மக்கள் குற்ற உணர்வு ஏற்று ஆஜருக்கு சமம். தலைமை செயலர் கவர்னர் அனுமதி பெற்று ஆஜர் ஆக வேண்டும். ஆளும் கட்சி கீழ் நிர்வாகத்தை நீதிமன்றம் கொண்டு வந்த பின் முதல்வர் அல்லது துணை முதல்வர் ஆஜர் படுத்த பட்டு இருக்க வேண்டும். நீதி, நிர்வாக மோதலில் பயன் பெற போவது நிர்வாக, சட்ட உருவம் இல்லாத ஊழல் அரசியல் மற்றும் உள்நாட்டு சமூக விரோத கும்பல்.


Chan
நவ 03, 2025 12:15

உலகளாவிய மனிதன், தெருநாய் விகிதாச்சாரம் கணக்கில் கொள்ளப் படுவதேயில்லை . 1000 மனிதர்களுக்கு 130 நாய்கள் என்ற அடிப்படையில் சுற்றித்திரியும் நாய்களை கட்டுப்படுத்த வேண்டும்


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை