உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / வாரணாசியை கலக்கும் தமிழர்!

வாரணாசியை கலக்கும் தமிழர்!

வாரணாசி: உ.பி.,யின் வாரணாசியில் ரயில்வே நிலையத்திலிருந்து, காசி விஸ்வநாதர் கோவிலுக்கு செல்ல வேண்டும் என்றால், டிராபிக் நெருக்கடிகளை சமாளித்து ஒரு மணி நேரம் பயணம் செய்ய வேண்டும். ஆனால் இந்த வருட கடைசியில் இந்த நிலை மாறி, 16 நிமிடங்களிலேயே எந்தவித போக்குவரத்து நெருக்கடியும் இல்லாமல் கோவிலுக்கு சென்றுவிடலாம்.மொத்தம் 807 கோடி ரூபாயில் நடைபெற்று வரும், 'காசி ரோப் வே' திட்டம் தற்போது முடியும் தருவாயில் உள்ளது. காசி கன்டோன்மெண்ட் ரயில் நிலைய வாசலில் இருந்து விஸ்வநாதர் கோவிலுக்கு அருகில் வரை இந்த வான் வழியே செல்லக் கூடிய ரோப்வேயில் செல்லலாம். இன்னும் 10 சதவீத வேலை மட்டுமே மீதம் உள்ள நிலையில், இந்தாண்டு இறுதியில் பிரதமர் மோடி தன் லோக்சபா தொகுதியான காசியில் இதை தொடக்கி வைக்க உள்ளார்.இந்த ரோப்வேயில் 153 கேபின்கள் இயக்கப்படும். ஒரு கேபினில், 10 பயணியர் வீதம், ஒரு மணி நேரத்திற்கு ஒரு திசையில் 3,000 பேர் பயணிக்கலாம். நாள் ஒன்றுக்கு, 96,000 பேர் இதில் பயணிக்கும் வகையில் இந்த திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதற்கான வேலைகளை கவனித்து வருபவர் கடையநல்லூரைச் சேர்ந்த ஐ.ஏ.எஸ்., அதிகாரி எஸ். ராஜலிங்கம்.திருச்சி என்.ஐ.டி.,யில் பொறியியல் பட்டம் பெற்ற இவர், 2009 உத்திர பிரதேச கேடர் அதிகாரியாவார். தற்போது, வாரணாசியின் டிவிஷன் கமிஷனராக இவர் உள்ளார். முன்னதாக, காசியின் கலெக்டராக இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக சிறப்பாக பணியாற்றிய ராஜலிங்கம், தற்போது காசியின் ஒட்டுமொத்த உள்கட்டமைப்பு மற்றும் வளர்ச்சித் திட்டங்களை முன்னின்று நடத்தி வருகிறார்.இந்தத் திட்டத்தை சர்வதேச பொறியியல் நிறுவனங்களுடன் இணைந்து மத்திய அரசு வடிவமைத்துள்ளது. ஆனால், வாரணாசியில் இதனை வெற்றிகரமாகச் செயல்படுத்தி வரும் முக்கிய அதிகாரி ராஜலிங்கம். ரோப்வே பணிகள் நடக்கும் இடங்களுக்கு நேரில் சென்று அடிக்கடி திடீர் ஆய்வுகளை மேற்கொண்டு, வேலையை துரிதப்படுத்தி வருகிறார்.நிலம் கையகப்படுத்துதல், மின்சார வாரியம், போக்குவரத்துக் காவல் போன்ற பல்வேறு அரசுத் துறைகளை ஒருங்கிணைக்கும் பணிகளையும் மேற்கொள்கிறார் இவர். அடுத்த மாத இறுதிக்குள் ரோப்வே திட்டத்தை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவர வேண்டும் என்பதில் தீவிரமாக உள்ளார் ராஜலிங்கம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 7 )

Siva Rama Krishnanan
நவ 08, 2026 14:06

அதிகாரிகளின் திறமை அறிந்து அவர்களிடம் பொறுப்பை ஒப்படைப்பது ஆட்சியாளர்களின் சிறப்பு


Sundara Varadhan
நவ 08, 2026 11:17

இங்கே கோவையையும் ஒரு தெலுங்கர் கலக்கிக்கொண்டிருக்கிறார்.


Muralidharan Swaminathan
நவ 08, 2026 11:07

வாழ்க தமிழன் சூப்பர் மனிதன்


Barakat Ali
நவ 08, 2026 09:21

இந்த தமிழ் அதிகாரி திராவிட மாடலின் தலைமையில் வேலை செய்யாமல் ஆரிய மாடலின் தலைமையில் சுதந்திரமாகச் செயல்படுகிறார் .... ஆகவே அவரது திறமை பளிச்சிடுகிறது .... திராவிட மாடலின் கீழ் செயல்பட்டால் [என்ன இப்படி இருக்கீங்க ?? நீங்களும் காசு பார்த்து எங்களையும் சம்பாதிக்க விடுங்க] என்று அன்பாக அச்சுறுத்தியிருப்பார்கள் ....


C Viswanathan
நவ 08, 2026 11:56

100% உண்மை . இங்கே திராவிடம் அவரை மிரட்டி தன் வழிக்கு கொண்டு வந்து விடும். உயிர் பயம் வரும் பொது எல்லோரும் பணிந்து விடுவர்.


GANESHRAMANUJAM P
நவ 08, 2026 08:53

இந்த உலகத்தின் எந்த மூளை முடுக்கிலும் ஒரு தமிழனின் திறமை தெரியும்


T.Senthilsigamani
நவ 08, 2026 05:55

தமிழனாய் பெருமை கொள்வோம்


சமீபத்திய செய்தி