உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / புலம்பெயர் தொழிலாளர்கள் மீது டார்கெட்; 12 நாட்களில் 2வது தீவிரவாத தாக்குதல்

புலம்பெயர் தொழிலாளர்கள் மீது டார்கெட்; 12 நாட்களில் 2வது தீவிரவாத தாக்குதல்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

ஜம்மு: ஜம்மு காஷ்மீரில் புலம்பெயர் தொழிலாளர்கள் மீது தீவிரவாதிகள் தொடர்ந்து துப்பாக்கிச்சூடு நடத்தி வரும் சம்பவம் சக தொழிலாளர்களை மரண பீதியில் ஆழ்த்தியுள்ளது. புத்கம் மாவட்டத்தில் நீர்வளத்துறையில் தினக்கூலியாக வேலை செய்து வருபவர்கள் உத்தரபிரதேசத்தைச் சேர்ந்த ஷோபியான்,25, உஸ்மான் மாலிக், 25. இந்த நிலையில், இந்த இருவர் மீது தீவிரவாதிகள் நேற்று துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளனர். இதில், பலத்த காயமடைந்த அவர்களை அக்கம்பக்கத்தினர் மீட்டு, ஸ்ரீநகரில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர். இது தொடர்பாக தகவல் அறிந்த பாதுகாப்பு படையினர், சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, தாக்குதல் நடத்திய தீவிரவாதிகளை தேடி வருகின்றனர். 12 நாட்களுக்கு முன்பு இசட் மோர் சுரங்கப்பாதை கட்டுமானப் பணியில் ஈடுபட்டிருந்த புலம்பெயர் தொழிலாளர்கள் மீது தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இதில், டாக்டர் உள்பட 7 பேர் சுட்டுக்கொல்லப்பட்டனர். கடந்த ஏப்ரல் மாதத்தில் இருந்து புலம்பெயர் தொழிலாளர்கள் மீது தீவிரவாதிகள் நடத்தும் 6வது தாக்குதல் இதுவாகும். புலம்பெயர் தொழிலாளர்களை குறிவைத்து தீவிரவாதிகள் தாக்குதல் நடத்துவதால், ஜம்மு காஷ்மீரில் பணியாற்றும் சக தொழிலாளர்கள் பீதியில் உள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 4 )

Veera
நவ 02, 2024 13:50

INDI Alliance guys are in a coma stage on this issue. If one muslim is killed in UP/Gujarat, they will take up the issue to entire nation. Now also victims are muslim but killed by terrorists


Lion Drsekar
நவ 02, 2024 13:17

ஒரு ஆண்டா இரண்டு ஆண்டா எத்தினை ஆண்டுகள் அனுபவித்திருக்கிறீர்கள், அவர்கள் கொள்கையில் இருந்து மாற்றுவது அவ்வளவு சுலபம் அல்ல, மேலும் இப்படி தொடர்ந்து ஈடுபடுவோர்கள் ,மீது நடவடிக்கை எடுக்க நடந்ததுதான் தேர்தல், அவர்கள் என்ன செய்துகொண்டு இருக்கிறார்கள், ? இதற்க்கு மேல் எதுவுமே சொல்வதற்கு இல்லை, வந்தே மாதரம்


Kumar Kumzi
நவ 02, 2024 12:27

மறைந்திருந்து தாக்கும் மூர்க்க காட்டேரிகளை கண்டதும் சுட்டுக்கொல்லுங்கள்


Ms Mahadevan Mahadevan
நவ 02, 2024 09:51

அப்பாவி மக்களை தீவிர வாதிகளும் மற்றவர்களும் தாக்குவது என்ன ஞாயமோ? மிகவும் கண்டிக்க தக்கது.


புதிய வீடியோ