உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / டாஸ்மாக் வழக்கு: அமலாக்கத்துறை மீது உச்சநீதிமன்றம் கடும் காட்டம்!

டாஸ்மாக் வழக்கு: அமலாக்கத்துறை மீது உச்சநீதிமன்றம் கடும் காட்டம்!

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

தமிழகத்தின், 'டாஸ்மாக்' முறைகேடு தொடர்பான வழக்கில், 'சந்தேகம் இருந்தாலே சோதனை செய்வதா?' என, அமலாக்கத்துறைக்கு உச்ச நீதிமன்றம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. மேலும், டாஸ்மாக்கில் சோதனை நடத்தியது குறித்தும் சரமாரியாக கேள்வி எழுப்பியது. தமிழக அரசு நடத்தும், டாஸ்மாக் மதுபான கடைகளில், அதிக விலைக்கு மதுபானங்கள் விற்பனை செய்யப்படுவது, பார் உரிமம் வழங்குவதில் முறைகேடு உள்ளிட்ட புகார்களில், 1,000 கோடி ரூபாய் அளவுக்கு ஊழல் நடந்ததாக கூறப்படுகிறது. இது தொடர்பாக லஞ்ச ஒழிப்புத் துறை பதிவு செய்த பல்வேறு வழக்குகளின் அடிப்படையில், அமலாக்கத்துறை சட்டவிரோத பணப்பரிமாற்ற தடைச் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்தது.

சோதனை

இதையடுத்து கடந்த மார்ச் மாதம், சென்னையில் உள்ள டாஸ்மாக் தலைமை அலுவலகத்தில், அமலாக்கத்துறை அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினர். மேலும், டாஸ்மாக் நிறுவனத்தில் பணியாற்றும் மூத்த அதிகாரிகளிடமும் விரிவான விசாரணை மேற்கொண்டனர். அப்போது பெண் ஊழியர்களை இரவு வரை வீட்டிற்கு அனுப்பாமல் விசாரிக்கப்பட்டதாகவும் குற்றஞ்சாட்டப்பட்டது. அமலாக்கத்துறையின் இந்த நடவடிக்கையை எதிர்த்து தமிழக அரசு மற்றும் டாஸ்மாக் நிர்வாகம் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு மீதான விசாரணை, உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய் தலைமையிலான அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழக அரசு சார்பில் மூத்த வழக்கறிஞர் கபில் சிபில் ஆஜராகி முன்வைத்த வாதம்: கடந்த மார்ச் மாதம் சென்னை, விழுப்புரம் உட்பட டாஸ்மாக் நிறுவனத்திற்கு சொந்தமான, 10க்கும் மேற்பட்ட இடங்களில் அமலாக்கத்துறை சோதனை நடத்தியது. அப்போது, டாஸ்மாக் அலுவலகத்தில் இருந்த மின்னணு கருவிகள், 'லேப் - டாப்' ஆகியவற்றை எடுத்துச்சென்றனர். அமலாக்கத் துறையின் இந்நடவடிக்கை அதிர்ச்சி அளிக்கிறது. டாஸ்மாக் நிறுவனத்தில் தனிப்பட்ட நபர் யாரேனும் தவறு செய்திருந்தால், அவரிடம் அமலாக்கத்துறை விசாரணை நடத்தலாம். அதை விடுத்து, அதன் தலைமை அலுவலகத்தில் எப்படி அத்துமீறி சோதனை நடத்தி, முக்கிய ஆவணங்கள், கோப்புகள், லேப் - டாப்களை பறிமுதல் செய்ய முடியும்?

அடாவடி

இது, கூட்டாட்சி தத்துவத்திற்கு எதிரான செயல். வழக்கு பதிவு செய்தாலே எந்தவொரு அரசு நிறுவனத்திலும் அமலாக்கத் துறை நுழைந்து சோதனை நடத்த முடியுமா? சி.பி.ஐ., கூட சோதனை நடத்தும் முன், அது குறித்த தகவல்களை சம்பந்தப்பட்ட அரசிடம் பகிர்ந்து கொள்கிறது. ஆனால், அமலாக்கத்துறை அடாவடித்தனமாக நடந்து கொண்டிருக்கிறது. இவ்வாறு அவர் வாதிட்டார். அமலாக்கத்துறை சார்பில் ஆஜரான கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் ராஜு, ''டாஸ்மாக் மதுபான விற்பனையில் மிகப் பெரிய அளவுக்கு ஊழல் நடந்திருக்கிறது. ''தமிழக அரசு கூட இது தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது. அமலாக்கத்துறைக்கும் இந்த விவகாரத்தில் வலுவான சந்தேகம் இருக்கிறது,'' என, பதில் அளித்தார்.

அதிகார மீறல்

இந்த வாதத்தை ஏற்க மறுத்து நீதிபதிகள் கூறியதாவது: உங்களுக்கு சந்தேகம் ஏற்பட்டாலே, எந்தவொரு அரசு நிறுவனத்திலும் நுழைந்து சோதனை செய்வீர்களா? என்ன நினைத்துக் கொண்டுஇருக்கிறீர்கள்? இந்த நடவடிக்கை கூட்டாட்சி தத்துவத்திற்கு எதிரானது என உங்களுக்கு தோன்றவில்லையா? தமிழக அரசு தனியாக வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வரும் நிலையில், அமலாக்கத் துறை திடீரென நுழைந்து விசாரிக்க என்ன காரணம்? மாநில அரசின் விசாரணை அதிகாரத்தை பறிக்க முயற்சிக்கலாமா? இவ்வாறு நீதிபதிகள் அடுக்கடுக்காக கேள்வி எழுப்பினர். வழக்கு தகவல் அறிக்கை இல்லாமல் அமலாக்கத்துறையால் ஒரு வழக்கை தொடர்ந்து விசாரிக்க முடியுமா? என்பது குறித்த வழக்கு, உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. எனவே, அந்த வழக்கு முடிந்த பின் டாஸ்மாக் விவகாரத்தை விசாரிப்பதாக கூறி, விசாரணையை நீதிபதிகள் ஒத்தி வைத்தனர். டாஸ்மாக் வழக்கை உச்ச நீதிமன்றம் ஒத்திவைத்ததால், அமலாக்கத்துறை விசாரணைக்கு ஏற்கனவே விதிக்கப்பட்டு இருந்த தடை உத்தரவு தொடர்கிறது. --- டில்லி சிறப்பு நிருபர் -


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 44 )

சத்யநாராயணன்
அக் 15, 2025 14:58

டாஸ்மாக் துறையே தேவை இல்லாத பொது நலனுக்கு எதிரான நாட்டின் கலாச்சாரம் சீரழிவுக்கு காரணமான ஒரு கேடு விளைவிக்கும் துறை அந்தத் துறையில் நடந்த ஊழலையும் விசாரிக்கக் கூடாது என்று விசாரணை அமைப்புகளின் மீது கடும் காட்டும் இந்த நீதிபதிகளின் குடும்பத்தில் உள்ள அனைவரும் சாராயத்திற்கு அடிமையாகட்டும் அது மட்டுமல்லாமல் அவர்கள் குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் வாழ்க்கையை அனுபவிப்பதற்கு முன்பாகவே போதையில் தள்ளாடி நாசமாகட்டும் சட்ட திட்டங்கள் என்பது நாட்டு நலனுக்கும் பொது மக்களின் நலன் காப்பதாகவும் தான் இருக்க வேண்டும் அவ்வாறு இல்லாத சட்டங்கள் எதுவும் தேவையே இல்லை


Anand
அக் 15, 2025 14:50

டாஸ்மாக்கின் மீது உச்சநீதிமன்றத்திற்கு இவ்வளவு பாசம் ஏன்?


Rengaraj
அக் 15, 2025 13:45

அமலாக்கத்துறையின் அதிகாரம் என்னவென்று தெரிந்துமா உச்சநீதிமன்றம் இப்படி கடுமை காட்டுகிறது? அமலாக்கத்துறைக்கு என்று இருக்கும் அதிகார விதிகளை அது மீறி உள்ளதா என்று மட்டும்தான் பார்க்கவேண்டும். அதற்கு எங்கு, யாரை, எப்படி, விசாரிக்கவேண்டும் என்று நியதிகளை வகுக்க, இது குறித்து பாடம் எடுக்க உச்சநீதிமன்றத்துக்கு அதிகாரம் இருக்கிறதா? கூட்டாட்சி தத்துவம் இதில் எதற்கு வருகிறது? அமலாக்கத்துறை எந்த அடிப்படையில் சந்தேகப்பட்டு விசாரணை நடத்தியது என்பதற்கான முகாந்திரங்கள் சரிதானா என்று மட்டும் பார்க்கமுடியாதா? இதில் டாஸ்மாக் தமிழக அரசின் கீழ் இயங்கும் ஒரு நிறுவனம். எனவே தமிழக அரசும் இதில் ஒரு பார்ட்டி. வழக்கு பதிந்து இருந்தாலும் அரசின் விசாரணை சரியாக இருக்கும் என்று நம்ப முடியுமா? இந்த கோணத்தில் உச்ச நீதிமன்றம் பார்த்ததா? அது கடுமை காட்டுவதை பார்த்தால் அப்படி ஒரு கோணம் இருப்பதாகவே அதற்கு தெரியவில்லையோ என்ற சந்தேகிக்கத்தோன்றுகிறது.


Murugesan
அக் 15, 2025 13:29

உச்சநீதிமன்றத்தில் தலைமை நீதிபதியாக இருக்கிறவருக்கு திராவிட முன்னேற்ற கழக அயோக்கியனுங்க மொள்ளமாரித்தனம் நன்கு தெரியும், ஏன் என்றால் அவனுங்க போட்ட பிச்சையில் வந்த ஆள், அயோக்கியனுங்களுக்கு துணையாக இருக்கிற காங்கிரஸ்கார வக்கீல்களின் குடும்பங்களும் ஏழை மக்களுக்கான பணத்தை கொள்ளையடித்து வாழுகின்ற கேடுகெட்ட கேவலமான ஆளுங்க


c.mohanraj raj
அக் 15, 2025 13:21

நீதிபதிகளின் வீட்டில் ரைடு நடத்த சட்டத்தை திருத்த வேண்டும் 100 கோடிக்கு மேலாக லஞ்சம் வாங்கிய நீதிபதியின் மேல் நடவடிக்கை எடுக்க வக்கில்லை இதில் சட்டநூல் புனிதமானது சட்ட நூல் கனமானது சட்ட நூல் பாராட்டு கூறியது என்று பெருமை வேறு நாட்டு மக்கள் வறுமையில் இருக்கிறார்கள் என்று இலவச அரிசி கொடுத்துக் கொண்டிருக்கின்றது ஆனால் இவர்களுக்கு நூறு கோடி சாதரணம் அப்படித்தானே சாமானியனின் தண்டனையிலிருந்து வந்தால் தடுக்கலாம் இறைவனின் தண்டனையிலிருந்து இவர்கள் ஒரு நாளும் தப்பிக்க முடியாது மூன்று ஏழு 21 தலைமுறையும் அழிந்து போய்விடும்


Ganesun Iyer
அக் 15, 2025 13:10

அடி ஆத்தி.. இந்த காங்கிரஸ் வக்கிலு கப்பில் சிபிலுக்கு மணிக்கு லட்சக்கணக்கில் கூலியாமே.. யாரு ஊட்டு காசு...


sankar
அக் 15, 2025 12:54

எப்படியானாலும் களவாண்டுட்டு போங்கன்னு கம்முன்னு இருங்கப்பா -பெரியண்ணன் சொல்லிட்டாரு


srinivasan
அக் 15, 2025 12:50

இங்கு இவ்வளவு கருத்துக்களை போடும் சாமானியர்கள் கேள்விகளை அங்கு அந்த நீதிபதியிடம் கேட்க ஒரு நல்ல வக்கீல் கிடைக்க வில்லையா இந்த அமலாக்க துறைக்கு


Venugopal S
அக் 15, 2025 12:03

பாஜகவின் அடியாட்கள் வேறு எப்படி செயல்படுவார்கள் என்று உச்ச நீதிமன்றம் எதிர்பார்க்கிறது?


AKM KV SENTHIL MUSCAT
அக் 15, 2025 11:48

இரண்டு நாட்களுக்கு முன்பு உச்ச நீதி மன்றம் தந்த தீர்ப்பு சந்தோசமாக இருந்தது.. தற்போது மனது வலிக்கிறது என்ன செய்ய ...


சமீபத்திய செய்தி