உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / காசோலையில் எழுத்துப்பிழை: ஆசிரியர் சஸ்பெண்ட்

காசோலையில் எழுத்துப்பிழை: ஆசிரியர் சஸ்பெண்ட்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சிம்லா: ஹிமாச்சலில், காசோலையில் எழுத்துப்பிழையுடன் எழுதிய அரசு பள்ளி ஆசிரியர் சஸ்பெண்ட் செய்யப்பட்டார். ஹிமாச்சல பிரதேசத்தின் சிர்மூர் மாவட்டத்தில் உள்ள ரோஹ்னாட் பகுதியில் அரசு உயர் நிலைப்பள்ளி உள்ளது. இங்கு, ஓவிய ஆசிரியராக பணியாற்றுபவர் அட்டர் சிங். இவர் கடந்த மாதம் 25ல், பள்ளி சார்பில் 7,616 ரூபாய்க்கு காசோலை ஒன்றை வழங்கினார். அதில், தொகையை ஆங்கிலத்தில் எழுதும்போது, 'ஸாவென் தர்ஸ்டே சிக்ஸ் ஹரேன்த்ரா சிக்ஸ்டி' என குறிப்பிட்டிருந்தார். அதாவது ஏழு என்பதை, 'ஸாவென்' என்றும், 1,000 என்பதை, 'தர்ஸ்டே' என்றும் 100 என்பதற்கு, 'ஹரேன்த்ரா' என்றும் 16 என்பதை, 'சிக்ஸ்டி' என்றும் தவறாக எழுதியிருந்தார். இதனால், இந்த காசோலையை வங்கி நிர்வாகம் நிராகரித்தது. இந்த காசோலை சமூக வலைதளத்தில் பரவி அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்நிலையில், தவறாக காசோலையை எழுதிய ஓவிய ஆசிரியர் அட்டர் சிங்கை சஸ்பெண்ட் செய்து, மாநில பள்ளி கல்வி இயக்குநர் உத்தரவிட்டுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 5 )

Venugopal S
அக் 06, 2025 11:25

இதனால் தான் மத்திய பாஜக அரசு ஆங்கிலத்தை கைவிட்டு ஹிந்தியை எல்லோரும் ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று சொல்கிறதோ?


ஈசன்
அக் 06, 2025 08:19

அந்த ஆசிரியர் நியமனத்தில் ஆங்கிலம் எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும் என்ற நிபந்தனை இருந்திருந்தால் மட்டுமே இந்த நடவடிக்கை ஏற்புடையது.


Barakat Ali
அக் 06, 2025 05:27

அவரிடம் படித்த மாணவர்களின் கதி ????


R K Raman
அக் 06, 2025 14:00

அவர் ஓவிய ஆசிரியர்... அதனால் ஆங்கிலம் தெரிய வேண்டும் என்று அவசியமில்லை. மேலும் காசோலை ஏன் அவர் எழுத‌ வேண்டும்? ஒருவரின் இயலாமையை இப்படி வெளிச்சம் போட்டுக் காட்டும் பழக்கம் மிகவும் தவறான செயல்


VAIGAI OnlineStore
அக் 06, 2025 01:02

ஆங்கிலத்தில் சொல்ல வேண்டிய விஷயத்தை ஆங்கிலத்தில் சொல்ல வேண்டும் தமிழ் கலந்து இருக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை அதனால் தமிழ் அழிந்துவிடாது என்ற நம்புவோம் இந்த செய்தியை படிக்கும் இளம் தலைமுறை புரிந்ததா தெரியவில்லை


முக்கிய வீடியோ