உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / இந்தூர் - புவனேஸ்வர் இண்டிகோ விமானத்தில் தொழில்நுட்ப கோளாறு; பயணிகள் கடும் அவதி

இந்தூர் - புவனேஸ்வர் இண்டிகோ விமானத்தில் தொழில்நுட்ப கோளாறு; பயணிகள் கடும் அவதி

புதுடில்லி: இந்தூர் - புவனேஸ்வர் இண்டிகோ விமானத்தில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டதால், பயணிகள் கடும் அவதி அடைந்தனர்.மத்திய பிரதேச மாநிலம் இந்தூரில் இருந்து புவனேஸ்வருக்கு (ஒடிசா மாநிலம்) செல்லும், இண்டிகோ ஏர்லைன்ஸ் விமானம் (6E 6332) இன்று (ஜூன் 23) காலை 9.00 மணிக்கு 140 பயணிகளுடன் புறப்பட தயாரானது. விமானம் புறப்படுவதற்காக, ஓடுபாதையை நோக்கி சென்று கொண்டிருந்த போது தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டதை விமானி கண்டுபிடித்தார். இதையடுத்து விமானம் புறப்படாமல் நிறுத்தப்பட்டது. இயந்திரத்தில் பிரச்னை ஏற்பட்டதால், விமானம் தாமதமாக செல்லும் என்று, அறிவிக்கப்பட்டது. இதையடுத்து விமானம் பழுது பார்க்கப்பட்டு, காலை 10.16 மணிக்கு புறப்பட்டு சென்றது. விமானம் சரியான நேரத்தில் புறப்படாமல் தாமதம் ஏற்பட்டதால், பயணியர் விமான நிலைய அதிகாரிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். ஒரு மணி நேரம் தாமதம் ஏற்பட்டதால், பயணிகள் கடும் அவதிகள் அடைந்தனர். சமீப காலமாக, விமானத்தில் தொழில்நுட்ப கோளாறு அடிக்கடி நிகழ்ந்து வருவதால், பயணிகள் மத்தியில் கடும் அதிருப்தி ஏற்பட்டுள்ளது.

ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானத்தில் கோளாறு!

ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் இருந்து துபாய்க்கு புறப்பட்ட ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானத்தில் (IX-195) கடைசி நேரத்தில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டது. காலை 5.30 மணிக்கு புறப்பட திட்டமிடப்படிருந்த விமானம் ரத்து செய்யப்பட்டது. விமானி கடைசி நேரத்தில், தொழில்நுட்ப கோளாறை கண்டறிந்ததால், பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. துபாய் விமானம் திடீரென ரத்து செய்யப்பட்டதால் பயணிகள் சிரமம் அடைந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 8 )

பாமரன்
ஜூன் 23, 2025 16:37

ஒரு சிறிய சிங்கிள் அய்ல் விமானத்தில் மூன்று லட்சத்திற்கும் மேற்பட்ட பாகங்கள் கொண்டுள்ளது. அதில் பாதிக்கும் மேற்ப்பட்ட வகைகளை சென்சார் மூலம் கண்காணிக்க முடியும். விமானங்கள் தரையில் இருக்கும் ஒவ்வொரு நிமிடமும் வருமான இழப்புன்னு மிகவும் அதிகமாக பறக்க வைப்பதிலேயே கவனம் செலுத்துவார்கள். இது போன்ற மிஷின்களில் சிறிய மாற்றம் இருந்தாலும் அலாரம் ஒலிக்க ஆரம்பித்து விடும். சிறிய வகைகள் உதாசீனம் செய்து பறப்பார்கள்... சமீபத்தில் நடந்த விபத்து காரணமாக சில காலங்கள் அந்த பழக்கம் தள்ளி போகுது... அவ்ளோ தான்... இந்த மாதிரி ஊதிங்ல இருந்து மீள ஊடகங்களுக்கு வேறு பெரிய தீனி கிடைக்கனும்... இப்ப யாராவது சிந்தூர் பற்றி பேசுறாங்களா... அதேபோல் மாறிடுவாங்க


suresh guptha
ஜூன் 23, 2025 15:48

SWEET BOX,IF SOME THING HAPPENS INSURANCE


Ram
ஜூன் 23, 2025 15:30

தமிழ்நாட்டில் இப்போ அடிக்கடி பேருந்தின் சக்கரம் கலண்டு ஓடுவது சாதாரணமாகிவிட்டது , அதனையும் கொஞ்சம் கவனியுங்கள்


Barakat Ali
ஜூன் 23, 2025 14:31

சாதாரண மெஷினரீஸ், எக்க்விப்மென்ட் களுக்கே குறிப்பிட்ட RUNNING HOURS முடிந்த பிறகு பராமரிப்பு பணிகளை மேற்கொள்ள வேண்டும் ... இதை PREVENTIVE MAINTENANCE என்பார்கள் ...... இது குறைந்த பபட்ச பராமரிப்பாகும் .... இதுவோ பல உயிர்கள் நம்பிப்பயணம் செய்யும் விமானப்பயணம் .... குறிப்பிட்ட FLYING HOURS முடிந்த பிறகு பராமரிப்புப் பணிகளை செய்கிறார்களா, இல்லையா ???? விமானப்போக்குவரத்துத் துறை என்ன செய்கிறது ???? மனித உயிர்கள் மலிவாகிவிட்டனவா ????


ASIATIC RAMESH
ஜூன் 23, 2025 14:02

சமீப காலமாக, இந்திய விமானங்களில் அடிக்கடி தொழில்நுட்ப கோளாறு ஏற்பட வேறு ஏதும் காரணங்கள் இருக்கலாம் என்ற சந்தேகம் எழுகிறது.


Stalin TN
ஜூன் 23, 2025 13:47

ஏர் இந்தியா மேல தப்பு எதுவும் இல்ல ??? இண்டிகோ ம் அப்டி தான் சொல்ல வரீங்க ??


R S BALA
ஜூன் 23, 2025 13:44

இனி யார்தான் பாதுகாப்பான பயணத்துக்கு உத்தரவாதம் அளிப்பது இத்தனை ஆண்டுகள் இல்லாத இந்த பிரச்சனைகள் இப்போது ஏன் தலைதூக்குகின்றன? அறிவாளிகள் எல்லாம் ரிட்டையர்ட் ஆகிவிட்டார்களா? ஒன்னும் புரியல..


suresh guptha
ஜூன் 23, 2025 15:48

BRAIN DRAIN BECAUSE OF THE RESERVATIONS