உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / நவீன கால போர்களுக்கு தயாராக இருக்கணும்; பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் வலியுறுத்தல்

நவீன கால போர்களுக்கு தயாராக இருக்கணும்; பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் வலியுறுத்தல்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: 'பாரம்பரிய போர் முறைகளுக்கு பதிலாக, சைபர், விண்வெளி மற்றும் பொருளாதாரம் மற்றும் தகவல்கள் வாயிலாக தற்கால போர் நடக்கிறது. இப்படி புதிய களத்தில் நடக்கும் போர் பாரம்பரிய போர் முறைகளை விஞ்சிவிட்டது' என பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்தார்.தேசிய பாதுகாப்பு கல்லூரியின் பட்டமளிப்பு விழாவில், பாரம்பரிய போர் முறை மற்றும் தற்காலிக போர் முறை குறித்து, ராஜ்நாத் சிங் விளக்கம் அளித்தார். அவர் கூறியதாவது: சர்வதேச புவி அரசியல் சூழல்களில் ஏற்படும் மாற்றங்களால் எதிர்காலத்தில் ஏற்பட உள்ள சிக்கல்கள் குறித்து ராணுவ அதிகாரிகள் சிந்திக்க வேண்டும். சர்வதேச உறவுகளில் எடுக்கப்படும் முடிவுகளை அதிகாரிகள் கூர்ந்து கவனிக்க வேண்டும். போர்க்களத்தை தாண்டி அதன் தாக்கம் தூதரக, பொருளாதார உறவுகளில் எதிரொலிக்க வாய்ப்புள்ளது.ஏ.ஐ., மற்றும் ட்ரோன் உள்ளிட்ட தொழில்நுட்ப ரீதியான நவீனகால போர் முறைகளை எதிர்கொள்ள ராணுவ அதிகாரிகள் தயாராக இருக்க வேண்டும். பாரம்பரிய போர் முறைகளுக்கு பதிலாக, சைபர், விண்வெளி மற்றும் பொருளாதாரம் மற்றும் தகவல்கள் வாயிலாக தற்கால போர் நடக்கிறது. இத்தகைய போர், பாரம்பரிய போர் முறைகளை விஞ்சிவிட்டது. இது போன்ற பிரச்னைகளுக்கு தீர்வு காணும் வழிகளை அதிகாரிகள் கண்டறிந்து செயல்பட வேண்டும். இது தொடர்புடைய படிப்புகளை தேசிய பாதுகாப்பு கல்லூரி தங்கள் பாடத்திட்டத்தில் இணைத்து பயற்சி அளிப்பது அவசியமாகும். இந்த பயிற்சி பிராந்திய பாதுகாப்பு மற்றும் வளமையை மேம்படுத்த உதவும். இவ்வாறு அவர் பேசினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 5 )

அப்பாவி
அக் 20, 2024 17:35

இது போருக்கான நேரமில்லை. தளவாடங்கள் வாங்கணும். விக்கணும். அதுக்கான நேரம் சுவாமி. எதிரிகளை புத்தர் வழியில் சென்று திருத்தணும்.


Rasheel
அக் 20, 2024 12:22

பாகிஸ்தானிய, சீன எல்லையை காப்பதாக சொல்லி கொண்டு பங்களாதேஷ், நேபாளம், பர்மா பார்டெரை பாதுகாப்பதை நாம் கோட்டை விட்டு விட்டோம். நாட்டின் பாதுகாப்பு என்பது நவீன பாதுகாப்பு என்பது மட்டும் அல்ல. உள் நாட்டு தீவிரவாதிகளை அடக்குவதும், திருட்டு தேச சக்திகள் உள்ளே நுழைய விடாமல் தடுப்பதும் ஆகும். பங்களாதேஷ் மிக பெரிய பாதுகாப்பு தலைவலியை கொடுப்பதாக மாறிவிட்டது. இதில் வோட்டு வங்கி அரசியலும் சேர்ந்து உள்ளது.


Yasararafath
அக் 20, 2024 10:16

ஒரு பிஜேபி நபர் சொல்வது ஏற்றுக்கொள்ள முடியாது


Loganathan Kuttuva
அக் 20, 2024 09:21

படையெடுக்காமல் எதிரிகளை பணியவைக்கும் முறை தான் சிறந்தது .


நிக்கோல்தாம்சன்
அக் 20, 2024 09:03

வெளிநாட்டு மதத்தீவிரவாதிகள் இப்போ ஆட்சியமைப்பது வரை வந்துவிட்டார்கள் நீங்க என்னவோ மகாபாரத காலத்திலேயே இருப்பது போன்றே தோன்றுகிறது


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை