உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / துணை ஜனாதிபதி தேர்தல்; சி.பி.ராதாகிருஷ்ணனை ஆதரிக்க எதிர்க்கட்சிகளுக்கு மோடி வலியுறுத்தல்

துணை ஜனாதிபதி தேர்தல்; சி.பி.ராதாகிருஷ்ணனை ஆதரிக்க எதிர்க்கட்சிகளுக்கு மோடி வலியுறுத்தல்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: துணை ஜனாதிபதியாக சி.பி.ராதாகிருஷ்ணனை ஒருமனதாக தேர்வு செய்ய வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் உள்ளிட்ட அனைத்து கட்சிகளுக்கும் பிரதமர் மோடி வேண்டுகோள் விடுத்தார். டில்லி பார்லிமென்ட் வளாகத்தில் தேஜ கூட்டணி கட்சி எம்பிகளுடன் பிரதமர் மோடி ஆலோசனை நடத்தினார். துணை ஜனாதிபதி வேட்பாளர் சி.பி.ராதாகிருஷ்ணன் பங்கேற்றார். அவரை தேஜ கூட்டணி எம்பிக்கள் வரவேற்றனர். கூட்டத்தில் தேஜ கூட்டணி துணை ஜனாதிபதி வேட்பாளராக சி.பி. ராதாகிருஷ்ணனை மோடி அறிமுகம் செய்தார். https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=g970ylfl&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0அப்போது துணை ஜனாதிபதியாக சி.பி.ராதாகிருஷ்ணனை ஒருமனதாக தேர்வு செய்ய வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் உள்ளிட்ட அனைத்து கட்சிகளுக்கும் பிரதமர் மோடி வேண்டுகோள் விடுத்தார். இது குறித்து, கிரண் ரிஜிஜூ நிருபர்கள் சந்திப்பில் கூறியதாவது: சி.பி.ராதா கிருஷ்ணனை எதிர்க்கட்சிகள் உள்ளிட்ட அனைத்துக்கட்சிகளும் ஆதரிக்க வேண்டும்.துணை ஜனாதிபதி பதவிக்கு சி.பி. ராதாகிருஷ்ணன் மிகவும் நல்ல பெயர். இதை அனைவரும் ஏற்றுக்கொண்டுள்ளனர். சி.பி.ராதாகிருஷ்ணன் எந்த சர்ச்சையிலும் சிக்காத நபர். அவர் மீது எந்த ஊழல் குற்றச்சாட்டுகளும் இல்லை. அவர் மிகவும் எளிமையான வாழ்க்கை வாழ்ந்து சமூகத்திற்கும் நாட்டிற்காக உழைத்துள்ளார். அத்தகைய ஒருவர் நாட்டின் துணை ஜனாதிபதியானால், அது நாட்டிற்கு மிகுந்த மகிழ்ச்சியைத் தரும் விஷயமாக இருக்கும். ராஜ்நாத் சிங்கும் அனைத்து கட்சியினருடன் ஆதரவு கோரி பேசி வருகிறார். துணை ஜனாதிபதித் தேர்தலில் நாம் அனைவரும் ஒன்றாக ராதாகிருஷ்ணனை ஒருமனதாக ஆதரிக்க வேண்டும். அது நமது ஜனநாயகத்திற்கும், நமது நாட்டிற்கும், ராஜ்யசபாவை நடத்துவதற்கும் மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்றும் நாங்கள் விரும்புகிறோம். இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 20 )

ராஜா
ஆக 19, 2025 20:50

நல்ல அநுபவம் இருந்தால் தான் நல்லது,அரைகுறையா இருந்தா ஆவாள் சங்கடப்பட மாட்டா


ganesan
ஆக 19, 2025 20:38

65 வருடமா உங்க இஷ்டத்துக்கு தான செய்தீர்கள் . இப்போ நாங்க செய்த என்ன வலிக்கு.


vivek
ஆக 19, 2025 20:36

திமுக சொம்புகள் எல்லாரும் அசிங்கபட்டு முகத்தில் கரிய பூசியாச்சி... நல்ல காதருங்க


J.Isaac
ஆக 19, 2025 19:03

ஆர் எஸ் எஸ்.,வாதி. நடுநிலையாக செய்படுவாரா?


SUBRAMANIAN P
ஆக 19, 2025 17:50

திருச்சி சிவாவை நிறுத்தலாம் என்று இருந்தார்களாம்.. மம்தா பீவி தான் வனிடம் என்று சொல்லி ஒதுக்கிவிட்டார்களாம்.. பாவம் திருச்சி..


vivek
ஆக 19, 2025 15:41

இங்க அடிச்சா கனடாவில் வலிக்குது....பேதியாகுது.. ..திகழ்


Narayanan
ஆக 19, 2025 15:21

தவறான கருத்து . நாடாளுமன்றத்தையோ, பாராளுமன்றத்தையோ எப்போதாவது அமர்ந்து செவிசாய்த்து நடந்துகொண்டு இருக்கிறார்களா ? கூச்சல் , வெளிநடப்பு இப்படித்தான் எதிர்க்கட்சிகள் இருக்கிறார்கள் .


Abdul Rahim
ஆக 19, 2025 12:35

இதுபோன்ற தருணங்களில் மட்டும் எதிர்க்கட்சிகளுக்கு வேண்டுகோள் தூண்டுகோல் எல்லாம் விடுப்பீர்கள் ஆனால் உங்க ஆளு தேர்ந்தெடுக்கப்பட்டவுடன் அவரை வைத்து எதிர்கட்சிகளை பேசவிடாமல் செய்வீர்கள் ,விவாதமின்றி நீங்கள் நினைத்த அத்தனை சட்டங்களையும் இந்த தேர்ந்தெடுக்கப்பட்ட உங்காளுங்கள வைத்து நிறைவேற்றி கொள்வீர்கள் அனால் இப்போது எதிர்கட்சிகளிடம் நாட்டு நலன் ஒற்றுமை மற்றும் நாம் என்ற வார்த்தைகளை பேசி நாடகம் ஆடுகிறீர்கள்,மக்களவை மற்றும் மாநிலங்களவையில் எதிர்க்கட்சிகளின் குரலை ஒடுக்க நினைக்கும் உங்களுக்கு எதற்கு எதிர்க்கட்சிகள் ஆதரவு ???


Shivakumar
ஆக 19, 2025 12:49

உங்களுக்கு விருப்பம் இருந்தால் ஆதரவு கொடுங்க..இல்லையெனில் விட்டுவிட்டு போங்க ...யாரும் உங்க காலில் விழுந்து கேட்கல... நீங்க யாரு...எப்படி பட்டவர்கள் என்று நாட்டு மக்களுக்கு நன்றாகவே தெரியும்.


திகழ்ஓவியன்
ஆக 19, 2025 13:10

அப்படியா அப்படி எனில் ராஜ்நாத் சிங் இருமுறை ஸ்டாலினிக்கு , ரிஜ்ஜ்ஜ்ஜ்யு 3 முறை போன் இன்று நைனார் சந்திக்க நேரம் கேட்பு எதுக்கு ராஜா இது எல்லாம்


P. SRINIVASAN
ஆக 19, 2025 12:30

இப்போ ஏன் எதிர் காட்சித்தினர்.. தேர்தல் ஆணையத்தை நாடவேண்டியதுதானே.. ஒஹஹஹ... இந்து EVM இல்லை அதனால்தான்..


Abdul Rahim
ஆக 19, 2025 14:52

சிவகுமார் சார் ஓட்டு திருடர்களை பற்றியும் மக்களுக்கு தெரிய ஆரம்பித்துவிட்டது..


vivek
ஆக 19, 2025 15:40

திருட்டு திமுகவை சொல்றார் நம்ம.பாய்


P. SRINIVASAN
ஆக 19, 2025 12:28

உங்களுடைய கணிப்பு சரிதான்..


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை