உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / தே.ஜ., கூட்டணி அரசு நீடிக்காது: கார்கே ஆருடம்

தே.ஜ., கூட்டணி அரசு நீடிக்காது: கார்கே ஆருடம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

பெங்களூரு: தவறுதலாக அமைந்துள்ள மத்திய தே.ஜ., கூட்டணி அரசு நீடிக்காது என காங்கிரஸ் தலைவர் கார்கே கூறியுள்ளார்.இது தொடர்பாக நிருபர்களிடம் அவர் கூறியதாவது; தேஜ கூட்டணி அரசு தவறுதலாக அமைக்கப்பட்டு உள்ளது. ஆட்சி அமைப்பதற்கான உத்தரவை மோடி பெறவில்லை. இது மைனாரிட்டி அரசு, எந்த நேரத்தில் வேண்டுமானாலும் கவிழலாம்.ஆனால், இந்த அரசு நீடிக்க வேண்டும் என நாங்கள் விரும்புகிறோம். அது தான் நாட்டிற்கு நல்லது. நாட்டை பலப்படுத்த நாம் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும். இவ்வாறு கார்கே கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 32 )

shyamnats
ஜூன் 18, 2024 10:15

கட்சி தலைமையாக ஆருடம் சொல்வதைவிட, எங்காவது மரத்தடியில் ஆருடம் சொன்னால் பலன் இருக்கலாம். ரஜனி ஒரு படத்தில் சொன்னது போல, மாப்பிள்ளை இவருதான் ஆனா போட்டிருக்கும் சட்டை என்னுது போல ராவுல் வின்சியின் மைண்ட் வாய்ஸ் கான்கிரஸ் தலைவர் இவருதான், ஆனால் கண்ட்ரோல் பூராவும் எங்க குடும்பதோடது .


konanki
ஜூன் 18, 2024 02:19

இந்த அரசாங்கம் 2024 வரை நீடிக்கும். 2024 ல் தனி மெஜாரிட்டி பெற்று 2029 வரை நீடிக்கும். அப்புறம் தொடர்ந்து 2047 வரை நீடிக்கும். காங்கிரஸ் எதிர் கட்சி யாக நிரந்தரமாக நீடிக்கும்


K.R.sekaran
ஜூன் 16, 2024 14:25

இப்போது உள்ள சூழ்நிலையில் நாட்டை வழிநடத்த உங்களில் ஒருவர் கூட கிடையாது.


ayen
ஜூன் 15, 2024 20:48

ஆட்சி அமைப்பதற்கான உத்திரவு பாஜக காங்கிரஸ்ஸிடம் பெறவில்லையா அல்லது காங்கிரஸ் பாஜதாவுக்கு கொடுக்கவில்லையா? ஒன்றுமே புரியவில்லையே.


Tetra
ஜூன் 15, 2024 20:46

முதலில் இவர் சொல்லும் காலம் வரை இருப்பாரா? இவர் காலமே இவருக்கு தெரியாது. சொல்ல வந்துட்டாரு


RajK
ஜூன் 15, 2024 20:03

ராவுல் வெளிநாடு சென்று விட்டார் போல... இங்கிருக்கும் தலைவரை வைத்து பேட்டி கொடுக்க சொல்கிறார்கள்.


Maheesh
ஜூன் 15, 2024 20:02

பாஸ் மார்க் 35 என்றால் 34 மார்க் வாங்கிய மாணவன் ஆசிரியரிடம் சென்று ஒரு மார்க் போட்டு தர்ம பாஸ் செய்ய சொல்லுவார்கள். அதுபோல காங்கிரஸ் 99 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்று இரட்டை இலக்கத்தில் மட்டுமே இருந்தது. சில சுயேச்சை எம்பிக்களை வளைத்து மூன்று இலக்கத்திற்கு வந்து விட்டார்கள். சொந்தக் கதை இப்படி இருக்கும் பொழுது பிஜேபியை பற்றி காங்கிரஸ் பேச ஒன்றுமில்லை.


ayen
ஜூன் 15, 2024 20:42

தனியாக நின்ற மாநிலங்களில் சில மாநிலங்களில் ஒன்று அல்லது இரண்டு MP தான் கிடைத்தது மற்ற மாநிலங்களில் 0 அதுவும் கிடையாதுமீதி மாநிலங்களில் கூட்டணி கட்சிகளின் உதவியுடன் 99 இலக்கை அடைந்த காங்கிரஸ் கூறுகிறது பா.ஜ ஆட்சி அமைக்க தகுதி இல்லை என்று!!!!!. ராகுலுடன் சேர்ந்த கார்கேக்கும் புத்தி கலங்கிவிட்டதா?


Thiruvengadam Ponnurangam
ஜூன் 15, 2024 19:27

பகல் கனவு கண்டுக்கொண்டே இருங்கள். நாட்டுக்கு மக்களுக்கு உருப்படியா பண்ண ஏதாவது யோசிக்க போறீங்க. தப்பு. சொன்னது போல 40/40 வந்துடுச்சி.. எரிபொருள் வரியை குறைக்க சொன்னால்.. தமிழ் நாடு மக்களும் கொஞ்சம் சந்தோசப்படுவாங்க.. பாபா விமோசமும் கிடைக்கும்


Shekar Prakash
ஜூன் 15, 2024 19:25

2004 நாடாளுமன்ற தேர்தலில் 115 சீட் மட்டுமே பெற்று கிச்சடி கூட்டணி ஆட்சி அமைத்து எல்லா வித ஊழல்களை செய்த போது மக்கள் உங்களுக்கு உத்தரவு கொடுத்தார்களா?


ஆரூர் ரங்
ஜூன் 15, 2024 19:09

பிஜெபி வாங்கிய இடங்களை விட ஓட்டுமொத்த புள்ளிராஜா கூட்டணி வென்ற இடங்கள் குறைவு என்பது நினைவிலிருக்கட்டும். ஆட்டம் வேண்டாமே.


மேலும் செய்திகள்









சமீபத்திய செய்தி