உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / தேஜஸ்விக்கு ஆண் குழந்தை; மம்தா நேரில் வாழ்த்து

தேஜஸ்விக்கு ஆண் குழந்தை; மம்தா நேரில் வாழ்த்து

பாட்னா : பீஹார் முன்னாள் முதல்வரும், ராஷ்ட்ரீய ஜனதா தள தலைவருமான லாலு பிரசாத் யாதவ் - ரப்ரி தேவி தம்பதியின் இரண்டாவது மகன், தேஜஸ்வி யாதவ். இவருக்கு, ராஜ்ஸ்ரீ யாதவ் என்பவருடன், 2021ல் திருமணம் நடந்த நிலையில், 2023 மார்ச்சில் பெண் குழந்தை பிறந்தது. இந்நிலையில், இரண்டு ஆண்டுகள் கழித்து, தேஜஸ்வி யாதவ் - ராஜ்ஸ்ரீ தம்பதிக்கு நேற்று இரண்டாவதாக அழகான ஆண் குழந்தை பிறந்தது. மேற்கு வங்கத்தின் கொல்கட்டாவில் உள்ள தனியார் மருத்துவமனையில், பிரசவத்திற்காக அனுமதிக்கப்பட்ட ராஜ்ஸ்ரீ யாதவுக்கு ஆண் குழந்தை பிறந்தது. இது குறித்து, சமூக வலைதளத்தில் தேஜஸ்வி யாதவ் வெளியிட்ட பதிவில், 'காத்திருப்பு இறுதியாக முடிந்தது. எங்களுக்கு அழகான ஆண் குழந்தை பிறந்துள்ளதை அறிவிப்பதில் மகிழ்ச்சி. ஜெய் ஹனுமான்' என, குறிப்பிட்டார். பாட்னாவில் இருந்து கொல்கட்டாவுக்கு விமானத்தில் வந்த லாலு பிரசாத் யாதவ், ரப்ரி தேவி ஆகியோர், மருத்துவமனைக்கு நேரடியாக சென்று பேரனை பார்த்து குஷியடைந்தனர். மருத்துவமனைக்கு நேற்று நேரில் சென்ற மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, தேஜஸ்வி - ராஜ்ஸ்ரீ தம்பதிக்கு வாழ்த்து கூறி, குழந்தையை கொஞ்சினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 3 )

M S RAGHUNATHAN
மே 28, 2025 10:22

ஒரு மகன் வெளியே துரத்தப் பட்டான். மற்றொரு மகனின் மகன் புதிய வரவு. கடவுள் கணக்கை சரி செய்து விட்டார். இது க மல ஹாசன் உதாரணம்


Barakat Ali
மே 28, 2025 08:57

ஊழலில் திளைத்தவர்கள் ஒற்றுமையிலும் சாதனை படைப்பார்கள் ..... சாரதா சிட் ஃபண்ட் ஊழலை மன்னித்தருளிய பாஜக ஜிந்தாபாத் ....


வாய்மையே வெல்லும்
ஜூன் 08, 2025 15:19

பரக்கத் சார் சாரதா சிட்டு பான்டு ஊழலை பாஜக மன்னித்து என கூறியதற்கு எதுனாச்சும் சான்று உள்ளதா ? போகிறபோக்கில் எதாவது சிண்டுமுடியவேண்டியது உங்களோட துர்பாகிய நிலை அய்யகோ அந்தோ பரிதாபம்


சமீபத்திய செய்தி