உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / சூடுபிடித்தது பீஹார் தேர்தல் களம்: இண்டி கூட்டணி முதல்வர் வேட்பாளராக தேஜஸ்வி தேர்வு

சூடுபிடித்தது பீஹார் தேர்தல் களம்: இண்டி கூட்டணி முதல்வர் வேட்பாளராக தேஜஸ்வி தேர்வு

பாட்னா: பீஹார் சட்டசபை தேர்தலில் இண்டி கூட்டணி முதல்வர் வேட்பாளராக தேஜஸ்வி யாதவ் தேர்வு செய்யப்பட்டுள்ளார். பீஹார் மாநில சட்டசபைக்கு நவ., 6 மற்றும் 11ம் தேதிகளில் இரு கட்டங்களாக தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. நவ., 14ம் தேதி முடிவுகள் வெளியாகின்றன. தனித்தனியாக சட்டசபை தேர்தலையொட்டி ஆளும் ஐக்கிய ஜனதா தளம் - பா.ஜ., கூட்டணி அடங்கிய தேசிய ஜனநாயகக் கூட்டணியில் தொகுதிப் பங்கீடு அண்மையில் சுமுகமாக முடிவடைந்தது.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=qhvacas7&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0எதிர்க்கட்சிகளின், இண்டி கூட்டணியில், தொகுதிப் பங்கீடு விவகாரத்தில் பயங்கர மோதல் வெடித்தாக பரபரப்பாக பேசப்பட்டது. தற்போது அந்த குழப்பம் நீங்கியது. இண்டி கூட்டணி முதல்வர் வேட்பாளராக தேஜஸ்வி யாதவ் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.துணை முதல்வர் வேட்பாளராக வி.ஐ.பி., கட்சியின் சஹானி இருப்பார் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. அதேநேரத்தில், ஆளும் தேஜ கூட்டணியில் முதல்வர் வேட்பாளர் இதுவரை அறிவிக்கப்படவில்லை. அனைத்து அரசியல் கட்சிகளும் தேர்தல் பிரசாரத்தில் மும்முரம் காட்டி வருகிறது. பீஹார் தேர்தல் களம் சூடுபிடித்தது.

யார் இந்த தேஜஸ்வி?

லாலுவின் இளைய மகனான தேஜஸ்வி, 35, ஏற்கனவே எதிர்க்கட்சி தலைவராக இருக்கிறார். நிதிஷ் குமாருடன் கூட்டணி ஆட்சி நடத்தியபோது, துணை முதல்வராகவும் பதவி வகித்தார். டில்லி டேர்டெவில்ஸ் மற்றும் ஜார்க்கண்ட் மாநில அணிக்காக கிரிக்கெட் விளையாடியவர் தேஜஸ்வி.இவர், 2015ல் முதல் முறையாக எம்எல்ஏ ஆனார். 2020ல் 2வது முறையாக எம்எல்ஏ., ஆக தேர்வு செய்யப்பட்டார். லாலு மீதான ஊழல் வழக்குகளில் தேஜஸ்வியும் குற்றவாளியாக சேர்க்கப்பட்டுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 8 )

VHK.HARIHARAN,DINDIGUL
அக் 24, 2025 18:56

ராகுல் நடத்திய வாக்காளர் அதிகார யாத்திரை பலனை தேஜஸ்வி யாதவ் அறுவடை செய்யப்போகிறார்


Ahamed
அக் 24, 2025 06:04

வருகிற பீகார் சட்டசபை தேர்தலில் இந்தியா கூட்டணிக்கு எனது வாழ்த்துக்கள்...


Iyer
அக் 23, 2025 16:09

பாரதமக்கள் - சரியாக வாக்க்களித்து லாலு, முலாயம், நேரு காந்தி, கருணாநிதி போன்ற ஊழல் மிகுந்த குடும்பக்கட்சிகளை வீட்டுக்கு அனுப்பப்போவது உறுதி, அடுத்து மோதியின் தலைமையில் பிஜேபி அரசு - ஊழல் ஊறிப்போன நீதித்துறையை சுத்தம் செய்யும் என நம்புகிறோம்


GMM
அக் 23, 2025 14:20

லாலு மீதான ஊழல் வழக்கு. தேசஜ்வி குற்ற பட்டியலில் இணைப்பு. ராகுல் காங்கிரஸ் நிலுவை குற்றவாளியை முதல்வர் வேட்பாளராக ஏற்பு. எந்த கட்சியாக இருந்தாலும் அரசியல் சாக்கடை சுத்திகரிப்பு தேவை. நீதிமன்றம் தானும் செயல்படுவது இல்லை. தேர்தல் ஆணையம் போன்ற அரசியல் சாசன அமைப்பையும் நிர்வகிக்க விடுவது இல்லை. நீதி, நிர்வாக தீவிரவாதம் வேகமாக வளர்கிறது. சில ஆயிரம் நீதிபதி நிழலில் பல லட்சம் வழக்கறிஞர்கள் சூழ்நிலை வாதம் செய்து பயன் பெற்று வருகின்றனர்.


Iyer
அக் 23, 2025 13:35

பிஹாரில் மீண்டும் நிதிஷ் தலைமையில் பிஜேபி ஆட்சிதான் வரப்போகிறது


தமிழ் மைந்தன்
அக் 23, 2025 13:16

ஆக குற்றவாளிகள் ஜாமின் கட்சியிடன் கூட்டணி


Anand
அக் 23, 2025 12:51

மக்கள் கானல் நீர் இலவசத்திற்காக மீண்டும் திருட்டு குடும்பத்திற்கு ஒட்டு போட்டு சிக்கி சீரழியப்போகிறார்கள்..


chandran
அக் 23, 2025 15:07

அப்படி அந்த கும்பலுக்கு மக்கள் ஒட்டு போட்டு நாசமா தான் போவார்கள்.. போகட்டும். யார் தடுக்க முடியும்? இந்த கட்சி போய் அந்த கட்சி வந்தால் மட்டும் காட்சி என்ன மாற போகிறதா என்ன?


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை