உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / "தெலுங்கானாவும், ஆந்திராவும் எனது இரு கண்கள்": என்கிறார் சந்திரபாபு நாயுடு

"தெலுங்கானாவும், ஆந்திராவும் எனது இரு கண்கள்": என்கிறார் சந்திரபாபு நாயுடு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

ஹைதராபாத்: 'தெலுங்கானாவும் ஆந்திராவும் எனது இரு கண்கள்' என ஆந்திர மாநில முதல்வரும், தெலுங்கு தேசம் கட்சியின் தலைவருமான சந்திரபாபு நாயுடு கூறினார்.தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் கட்சி தொண்டர்கள் மத்தியில் சந்திரபாபு நாயுடு பேசியதாவது: தெலுங்கானாவில் நாங்கள் தேர்தலில் போட்டியிடவில்லை. ஆனால் தெலுங்கானாவில் எங்களுக்கு ஏராளமான தொண்டர்கள் உள்ளனர். இது தான் தெலுங்கு தேசம் கட்சியின் பலம். ஆந்திரா தேர்தலில் எனக்கு நேரடியாகவோ மறைமுகமாகவோ உழைத்திருக்கிறீர்கள். நான் ஒன்று சொல்ல விரும்புகிறேன். தெலுங்கானாவும் ஆந்திராவும் எனது இரு கண்கள். தெலுங்கு தேசம் கட்சி இரு மாநிலங்களும் செழிக்க வாழ்த்துகிறேன். இப்போது தெலுங்கானாவில் ​காங்கிரஸ் ஆட்சியில் உள்ளது.

வெவ்வேறு சித்தாந்தங்கள்

ரேவந்த் ரெட்டி இப்போது வளர்ச்சியை முன்னெடுத்துச் செல்கிறார். இது தான் தெலுங்கு தேசம் கட்சியின் இலக்கு. இரு மாநிலங்களிலும் உள்ள தெலுங்கு மக்களின் வளர்ச்சியைக் காக்க நான் எப்போதும் தயாராக இருப்பேன். இங்கு காங்கிரஸ் ஆட்சியும், ஆந்திராவில் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சியும் உள்ளது. இருவருக்கும் வெவ்வேறு சித்தாந்தங்கள். ஆனால் தெலுங்கு மக்களின் நலன் என்று வரும்போது நாம் ஒன்றாக இணைந்து செயல்பட வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 6 )

skv srinivasankrishnaveni
ஜூலை 10, 2024 11:50

என்னாத்துக்கு இதுகள் ஐடியா கொடுத்து ரெண்டாக உடைச்சாங்க அதேபோல தமிழ்நாடடை ரெண்டாக்கணும்னு குதிக்குதுங்க சி எம் போஸ்ட் நா பெரிய வஹாராசா என்று எண்ணமோ? மெஜாரிட்டி போனால் அவ்ளோதான் அம்போ ன்னு ஆயுடுமே, அப்பா பிள்ளைப்பேரன் கொள்ளுப்பேரன் அவன் வாரிசுகளுக்கே சி எம் வரணும்னே சட்டமே போட்டுரூ வானுகளோ துட்டு எல்லாமே சி ம் குடும்பங்களுக்கே என்பது எழுதாத சட்டமாயிடுத்து தமிழ்நாட்டுலே கள்ளச்சாராயம் குடிச்சு செத்தால் 10லஷ்க்ஷமா மக்கள்வரிப்பணம் க்குகணக்கெல்லாம் காட்டுவீர்களோ


sankaranarayanan
ஜூலை 07, 2024 20:34

இது என்ன போகிறபோக்கையுப்பார்த்தால் யார் யாரை மாற்றி தன வசம் கொடுவாருவார்கள் என்ற சந்தேகம் மக்களிடையே எழுகிறது தேச நலம் கருதி தெலுங்கானா அப்படியே அரசியலில் ஆந்திராவுடன் சேர்ந்து மத்திய அரசுக்கு முழு ஆதரவு அளித்து மக்களுக்கு முன்னேற்றம் கொடுப்பார்களா அல்லது வெறும் பேச்சோடு சரியா என்பது போகபோகத்தான் தெரியும்


Iniyan
ஜூலை 07, 2024 19:18

எந்த காலத்திலேயும் நாயுடுவை நம்பக்கூடாது.


Anantharaman Srinivasan
ஜூலை 07, 2024 19:08

சட்டம் அனுமதித்தால் நாயுடுகாரு இரண்டு மாநிலத்துக்கும் முதல்வராக ஆசைப்படுவார்.


ஆரூர் ரங்
ஜூலை 07, 2024 17:51

ஒரே மொழி பேசும் மாநிலத்தை இரண்டாகப் பிளந்து நிரந்தர எதிரிகளாக ஆக்கியது காங்கிரஸ். என்னதான் முயன்றாலும் பிரிவினையால் ஏற்பட்ட காயம் லேசில் ஆறாது. இன்றும் ஹைதராபாத்தில் செய்யப்பட்டிருக்கும் முதலீட்டில் எண்பது சதவீதத்துக்கு மேல் ஆந்திர முதலீட்டாளர்களுடையதே.


வாய்மையே வெல்லும்
ஜூலை 07, 2024 17:45

எதிர்பார்க்காத ஒற்றுமை.. வாழ்க மணவாடு மக்கள்.. மாடல் அரசு படிப்பினை நிறைய இருக்கு. இப்போது கர்நாடகத்தில் தண்ணீர் கேட்க மாடல் அரசுக்கு வாயில் வடை..காங்கிரஸ் கர்நாடகத்திடம் தண்ணீர் உரிமை கேட்க தகிரியம் இல்ல ..ஒரே இலக்கு மோடி ஒழிக.. இது எங்கேயும் மாடலை எடுத்து செல்லாது ...


மேலும் செய்திகள்











முக்கிய வீடியோ