உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / அரசு ஊழியர்களுக்கு சம்பளம் வழங்குவதில் தாமதம்: கடும் நிதி நெருக்கடியில் தெலுங்கானா அரசு

அரசு ஊழியர்களுக்கு சம்பளம் வழங்குவதில் தாமதம்: கடும் நிதி நெருக்கடியில் தெலுங்கானா அரசு

ஐதராபாத்: அரசு கடும் நிதி நெருக்கடியில் உள்ளதால், இனி அரசு ஊழியர்களுக்கு சம்பளம் வழங்குவது தாமதமாகும் தெலுங்கானா காங்கிரஸ் முதல்வர் ரேவந்த் ரெட்டி தெரிவித்துள்ளார்.தெலுங்கானாவில் முதல்வர் ரேவந்த் ரெட்டி தலைமையில் காங்கிரஸ் ஆட்சி நடக்கிறது. கடந்த சில வாரங்களுக்கு முன் தெலுங்கானா சட்டசபை பட்ஜெட் கூட்டத்தொடர் கூடியது. வரும் 28-ல் கூட்டத்தொடரை முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது. தேர்தலில் போது காங்கிரஸ் அறிவித்த வருவாய் திட்டமிடல் இல்லாத இலவச திட்டங்களால் மாநில அரசு கடன் சுமையில் சிக்கியுள்ளது. இதனால் அரசு ஊழியர்களுக்கு சம்பளம் வழங்க முடியாமல் நிதிநிலை மோசமடைந்து வருவதாக எதிர்க்கட்சிகள் விமர்சித்து வந்தன. இதனை ஒப்புக்கொள்ளும் விதமாக முதல்வர் ரேவந்த் ரெட்டி சட்டமேலவையில் கூறியது, அரசு ரூ.7 லட்சம் கோடி கடன் சுமையால் தற்போது கடும் நிதி நெருக்கடியில் உள்ளது. ஒவ்வொரு மாதமும் அரசு ஊழியர்களுக்கும், ஒய்வூதியர்களும் சம்பளம் வழங்குவதில் மிகவும் சிரமம் ஏற்படுகிறது.இனி வரும் காலங்களில் அரசு ஊழியர்களுக்கு சம்பளம் வழங்குவதில் தாமதம் ஏற்படும், நிதி நெருக்கடியை கருத்தில் கொண்டு அகவிலைப்படி உள்ளிட்ட இதர சலுகைகள் நிறுத்தி வைக்கப்படும். பட்ஜெட்டில் தேவையற்ற செலவினங்களைக் குறைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.தெலுங்கானா நிதி அமைச்சர் கூறியது, நிதி நிலையை சீரமைக்க துறை வாரியாக மதிப்பீடு செய்து, செலவினங்கள் மற்றும் திட்ட செயல்படுத்தல் விவரங்களை முதல்வர் ரேவந்த் ரெட்டி சேகரித்து வருகிறார் என்றார்.இதற்கிடையே தனியார் டி.வி.சேனல் நிகழ்ச்சியில் பங்கேற்ற முதல்வர் ரேவந்த் ரெட்டி , அரசு நிதி நெருக்கடியால் திணறுவதையும், அரசு ஊழியர்களுக்கு சம்பளம் வழங்குவதில் தாமதம் ஏற்பட்டுள்ளதை ஒப்புக்கொளளும் விதமாக பேசினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 20 )

GMM
மார் 18, 2025 09:38

அரசு ஊழியர்கள் சம்பளம் தாமதம் ஆகும் போது அத்தியாவசிய பணியாளர்கள் நீங்கலாக, அதிகாரிகள், நீதிபதிகள், சட்ட மன்றம் உறுப்பினர்கள் இலவசம், மானியம்.. பெறுவோர் அனைத்தையும் தாமதம் படுத்த வேண்டும். நாட்டின் நிதி, பாதுகாப்பு விஷயத்தில் அரசியல் சாசன அமைப்புகள் கடமை தவறி வருகின்றன. மாநிலங்களுக்கு நிர்வாக அதிகாரம் மட்டும். நிதியை இஷ்டம் போல் செலவு செய்வதை தணிக்கை துறை, மத்திய வங்கி ஆளுநர் , நீதிமன்றம் தடுக்க முடியும். மாநிலம் முந்தய சமஸ்தானம் போல் கேட்க ஆள் இல்லாமல், இஷ்டம் போல் செயல்பட்டு வருகின்றன. ஆபத்தில் முடியும்.


Amarjyothi Mari
மார் 18, 2025 07:43

நல்ல யோசனைக்கு அணுகவும்


Ganapathi Amir
மார் 18, 2025 07:22

தேவையற்ற இலவசங்களையும் சலுகைகளையும் நிறுத்தினால் போதும்...


Appa V
மார் 18, 2025 01:14

மாடல் அரசை கேட்டிருந்தால் பிரச்னை வராதே ..சம்பளத்துக்கு பதில் சரக்கு கொடுத்து மகிழ்விக்கலாமே


தாமரை மலர்கிறது
மார் 18, 2025 01:13

சீதாராமையா மற்றும் தெலுங்கானா முதல்வர் இருவரும் மோசமான பாதையில் மாநிலத்தை நடத்துகிறார்கள். கர்நாடகா மற்றும் தெலுங்கானா திவாலாக போகிறது. கர்நாடக, தெலுங்கானா, தமிழகம் மற்றும் மேற்குவங்கத்தை கலைக்க வேண்டிய நேரம் வந்துவிட்டது. கன்னட முதல்வர் இஸ்லாமிய ஓட்டுக்களை கவர நாலு சதவீதம் கோட்டா கொடுக்கிறார். தெலுங்கானா முதல்வர் சாதிரீதியாக மக்களை கூறுபோட பார்க்கிறார். இருவரும் இந்தியாவின் ஆபத்தான முதல்வர்கள். ஸ்டாலினை விட ஆபாத்தானவர்கள்.


Kannan Chandran
மார் 18, 2025 00:53

இங்கு புதிதாக ஒரு திட்டமும் இல்லாமல் பத்து லட்சம் கோடி கடனை எட்டிவிட்டார் விடியலார், 2026-க்குள் 12 லட்சம் கோடியை எட்டி விடுவார், ஏனெனில் அரசு ஊழியர்களின் ஓட்டுக்காக ஒரு சம்பளம் உயர்வு போடனுமே?..ஒருவேளை பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்தினால் தமிழிநாடு திவால் ஆகும்...


naranam
மார் 18, 2025 00:02

கண் மூடித் தனமாக இலவசங்களை வாரி வாரி அடிப்பதின் விளைவு தானோ? முதலில் கேரளா, தெலுங்கானா கர்நாடகா. அடுத்தது?


M S RAGHUNATHAN
மார் 18, 2025 07:47

இமாச்சல பிரதேசத்தை மறந்து விட்டீர்களே.


m.arunachalam
மார் 17, 2025 23:17

இவரின் வெளிப்படையான பேச்சு மிகவும் நல்ல செயல் . சொந்த ஆட்களை வைத்து நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடர்ந்தால் இலவசங்களின் சதவிகிதத்தை குறைக்கலாம் .


Rajakumar
மார் 17, 2025 23:10

காங்கிரஸ் மத்தியில் ஆட்சிக்கு வந்தால் நிதி நிலைமை மோசமடையும். மற்ற நாடுகளிடம் பிச்சை எடுக்கும் நிலைமை உருவாகும்.


தர்மராஜ் தங்கரத்தினம்
மார் 17, 2025 22:44

இன்னாபா இது.... பாஜகவை எதிர்த்து அரசியல் பண்ணுற அத்தினி மாநிலங்களும் ஒவ்வொத்தனா கண்ணை கசக்கினு அயுதுகிறாங்கோ ....


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை