வாசகர்கள் கருத்துகள் ( 2 )
எதுக்காக கைது பண்ணனும் அங்கேயே என்கவுண்டர் பண்ணி இருந்திருக்கனும்
நக்ஸலைட்டுக்களும் கம்மிகளும் வேறு வேறு கிடையாது. கம்முனிசம் என்பது சர்வாதிகாரத்தின் மறு பதிப்பு மட்டுமே.
ஹைதராபாத்: தெலுங்கானாவில் நக்சலைட்டுகள் 20 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடமிருந்து வெடி மருந்துகள், ஆயுதங்கள் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.சத்தீஸ்கர்-தெலுங்கானா எல்லையில், நக்சலைட்டுகள் பதுங்கி இருப்பதாக உளவுத்துறை அதிகாரிகளுக்கு தகவல் வந்தது. அதன்படி, தெலுங்கானா மாநிலம், முலுகு மாவட்டத்தில் வாகன சோதனைகள் மற்றும் ரோந்து பணிகளில் போலீசார் ஈடுபட்டனர்.அப்போது நக்சலைட்டுகள் 20 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடமிருந்து வெடி மருந்துகள் மற்றும் ஆயுதங்களை போலீசார் பறிமுதல் செய்தனர். இதனால் நக்சலைட்டுகளின் சதித்திட்டம் முறியடிக்கப்பட்டுள்ளது.சத்தீஸ்கர்-தெலுங்கானா எல்லையில் மாவோயிஸ்ட் கோட்டைகளை அகற்றுவதற்காக, 21 நாட்கள் ஒருங்கிணைந்த முயற்சியாக நடத்தப்பட்ட ''ஆபரேஷன் பிளாக் பாரஸ்ட்'' வெற்றிக்குப் பிறகு இந்தக் கைதுகள் நடந்துள்ளன.
எதுக்காக கைது பண்ணனும் அங்கேயே என்கவுண்டர் பண்ணி இருந்திருக்கனும்
நக்ஸலைட்டுக்களும் கம்மிகளும் வேறு வேறு கிடையாது. கம்முனிசம் என்பது சர்வாதிகாரத்தின் மறு பதிப்பு மட்டுமே.