| ADDED : ஆக 10, 2025 07:29 PM
புதுடில்லி: மும்பையைத் தொடர்ந்து, தலைநகர் டில்லியில் டெஸ்லா தமது புதிய விற்பனை நிலையத்தை நாளை (ஆக.10) தொடங்குகிறது.உலக பணக்காரர்களில் ஒருவரான எலான் மஸ்க், டெஸ்லா என்ற நிறுவனத்தை தொடங்கி உள்ளார். இந்த நிறுவனம் மின்சார கார்களை உற்பத்தி செய்து, விற்பனையிலும் ஈடுபடுகிறது.இந்தியாவில் இந்நிறுவனம் தமது முதல் கார் விற்பனை நிலையத்தை மும்பையின் பாந்தரா பகுதியில் தொடங்கியது. இந் நிலையில், அதன் 2வது விற்பனை நிலையம் டில்லியில் நாளை (ஆக.11) திறக்கப்படுகிறது. இதற்காக அங்குள்ள ஏரோசிட்டியில் கிட்டத்தட்ட 8,200 சதுர அடி இடத்தை மாதம்தோறும் ரு.17.50 லட்சத்துக்கு வாடகைக்கு எடுத்துள்ளது. இந்த அறிவிப்பை தமது எக்ஸ் வலைதள பக்கத்தில் டெஸ்லா நிறுவனம் வெளியிட்டுள்ளது.