உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / ஹரியானாவில் அதிர்ச்சி: டென்னிஸ் வீராங்கனையை சுட்டுக் கொன்ற தந்தை கைது

ஹரியானாவில் அதிர்ச்சி: டென்னிஸ் வீராங்கனையை சுட்டுக் கொன்ற தந்தை கைது

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சண்டிகர்: ஹரியானாவில் டென்னிஸ் வீராங்கனையை சுட்டுக் கொன்ற தந்தையை போலீசார் கைது செய்தனர்.ஹரியானா மாநிலம் குருகிராம் பகுதியை சேர்ந்தவர் ராதிகா யாதவ், 25. டென்னிஸ் வீராங்கனை. மாநில அளவில் பல போட்டிகளில் கலந்து கொண்டு பல பதக்கங்களை பெற்றுள்ளார்.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=0cx2fx5x&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0இந்நிலையில் இன்று மதியம் ராதிகாவை அவரது தந்தை துப்பாக்கியால் சுட்டுக் கொன்றனர். துப்பாக்கியால் 5 முறை சுட்டதில் 3 தோட்டாக்கள் அவர் மீது பாய்ந்தது. தகவல் அறிந்த போலீசார் அவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். ராதிகா, 'இன்ஸ்டாகிராம் ' சமூக வலைதளத்தில் 'ரீல்ஸ்' போடுவதை முழு நேரமாக செய்து வந்தார். இதனால் கோபமடைந்து மகளுடன் தந்தை வாக்குவாதத்தில் ஈடுபட்டார். தொடர்ந்து துப்பாக்கியை எடுத்து சுட்டுக்கொன்றதாக போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 6 )

Ramesh Sargam
ஜூலை 10, 2025 20:42

பிரதமர் மோடிஜி அவர்கள், ஜனாதிபதி முர்மு அவர்கள், மற்றும் உச்சநீதிமன்ற நீதிபதிகள் எல்லோரும் இந்த துப்பாக்கி கலாச்சாரத்துக்கு ஒரு முற்றுப்புள்ளி வைக்கவேண்டும். நிலைமை கைமீறிப்போனால், அமெரிக்கா நிலைதான் நமக்கும்.


Priyan Vadanad
ஜூலை 10, 2025 21:28

உங்கள் ஆதங்கம் புரிகிறது.


Vel1954 Palani
ஜூலை 10, 2025 20:06

1. இந்த காலத்து பிள்ளைகள் பெற்றோர் சொல் கேட்பது கிடையாது. ௨. போலீஸ் கூறும் காரணம் நம்பும்படி இல்லை. உண்மையை மறைக்கிறது. உண்மை காரணம் வேறாக இருக்கலாம் . பெற்றவனே மகளை கொல்லும் அளவுக்கு என்ன காரணமோ ? ஒருவேளை ஆணவக்கொலையா ?இருந்தாலும் தந்தை செய்தது தவறுதான்.


Anantharaman Srinivasan
ஜூலை 10, 2025 20:56

உண்மை காரணம் வேறாக இருக்கலாம் . பெற்றவனே மகளை கொல்ல வேறு ஜாதி காதல்.


ஈசன்
ஜூலை 10, 2025 19:45

துப்பாக்கி வைத்துக்கொள்ளும் அளவுக்கு இந்த ஆள் என்ன பிரபல புள்ளியா. உடனடியாக தூக்கு தண்டனை கொடுக்கப்படவேண்டும்.


SANKAR
ஜூலை 10, 2025 19:55

thiruttu theeyamooka aatchiye kaaranam


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை