உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / விமான நிலையத்தில் 2வது முனையம் மூடல்

விமான நிலையத்தில் 2வது முனையம் மூடல்

புதுடில்லி:டில்லி சர்வதேச விமான நிலையத்தில் பராமரிப்புப் பணிகளுக்காக டி-2 எனப்படும் இரண்டாவது முனையம் மூடப்பட்டது. இதனால், டி -1 எனப்படும் முதலாவது முனையத்தில் இருந்தே விமானங்கள் இயக்கப்படுகின்றன.தலைநகர் டில்லியில், இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தை, 'டயல்' எனப்படும் டில்லி இன்டர்நேஷனல் ஏற்போர்ட் லிமிடெட் என்ற நிறுவனம் நடத்துகிறது.இங்கு, நான்கு ஓடுபாதைகள் உள்ளன. நாற்பது ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்ட டி - 2 முனையம் பராமரிப்பு பணிகளுக்காக நேற்று மூடப்பட்டது. இதையடுத்து, இங்கிருந்து இயக்கப்பட்ட விமானங்கள் டி-1 முனையத்துக்கு மாற்றப்பட்டுள்ளன.முனையம் மாற்றம் செய்யப்பட்டு இருப்பது குறித்து, பயணியருக்கு நேற்று முன் தினமே அறிவிக்கப்பட்டது. விரிவாக்கம் செய்யப்பட்டு மார்ச் 20ம் தேதி திறக்கப்பட்ட டி - 1 முனையத்தில் ஆண்டு தோறும் 40 மில்லியன் பயணியரை கையாள முடியும். அதேபோல, டி -3 முனையத்தில் ஆண்டு தோறும் 45 மில்லியன் பயணியர் கையாளப்படுகின்றனர். தற்போது, பராமரிப்பு பணி துவக்கப்பட்டுள்ள டி-2 முனையத்தில் ஆண்டுக்கு 15 மில்லியன் பயணியரை கையாள முடியும்.

முதல் நாளிலேயே சிக்கல்!

முதலாவது முனையத்தில் பயணியரிடம் சோதனை நடத்தும் பகுதியில் தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டது. பயணியரின் உடைமைகள் சோதனை செய்யப்பட்டு அனுப்ப ஒரு மணி நேரத்துக்கும் மேல் தாமதம் ஏற்பட்டது.இதுகுறித்து, விமான நிலையத்தை நடத்தும் 'டயல்' நிறுவனம் சமூக வலைதளத்தில் வெளியிட்ட பதிவில், 'காலை 11:51 மணிக்கு முதலாவது முனையத்தின் பொருட்களை பரிசோதித்து அனுப்பும் பெல்ட்டில் பழுது ஏற்பட்டது. இதனால் பயணியர் நீண்ட நேரம் காத்திருக்கும் நிலை ஏற்பட்டது' என கூறப்பட்டு இருந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ