உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / பாக்., ரத்தத்தில் ஊறிய பயங்கரவாதம்... பஹல்காம் சதித்திட்டம்... பகல் போல் வெளிச்சம்!

பாக்., ரத்தத்தில் ஊறிய பயங்கரவாதம்... பஹல்காம் சதித்திட்டம்... பகல் போல் வெளிச்சம்!

காஷ்மீரை உரிமை கொணடாடும் பாகிஸ்தான் எப்போதுமே அப்பகுதியின் நலனை விரும்பியதில்லை. எல்லை தாண்டிய பயங்கரவாதத்தின் களமாக, காஷ்மீரை பயன்படுத்துவது மட்டுமின்றி, அப்பகுதியின் வளர்ச்சிக்கு முட்டுக்கட்டை போட்டு வருகிறது.கடந்த சில ஆண்டுகளாக, காஷ்மீரில் அமைதி நிலவி வருகிறது. இதை விரும்பாத பாகிஸ்தான் தற்போது மீண்டும் தாக்குதலை நடத்தியுள்ளது. ஜம்மு - காஷ்மீரில், பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலுக்குப் பின், பயங்கரவாதத்தை ஆதரிப்பது, அடைக்கலம் கொடுப்பது மற்றும் பயங்கரவாதிகளை அனுப்புவது போன்றவற்றில், பாகிஸ்தானின் கைங்கரியம் சர்வதேச ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டுள்ளது.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=ytfgqpvu&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0

காஷ்மீர் - காபூல் வரை

பாகிஸ்தான் மற்றும் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதிகள், எல்லை தாண்டிய பயங்கரவாதம், மற்றும் பயங்கரவாத சித்தாந்தத்தின் ஏவுதளமாக பயன்படுத்தப்படுகின்றன.* கடந்த 1999ம் ஆண்டு, பாகிஸ்தானில் ராணுவ புரட்சி நடத்தி ஆட்சியைப் பிடித்தார் ஜெனரல் பர்வேஸ் முஷாரப். முன்னதாக, அவர் ராணுவ தளபதியாக இருந்தபோது, கார்கில் ஊடுருவல் நடந்தது. பின், நடந்த போரில் பாகிஸ்தான் இந்தியாவிடம் தோற்று புறமுதுகிட்டு ஓடியது.* இந்தியாவுடன் போரிடுவதற்காக, பயங்கரவாத குழுக்களுக்கு, பாக்., ராணுவம் பயிற்சி அளித்தது என பர்வேஸ் முஷாரப் பின்னர் ஒப்புக்கொண்டார். 'காஷ்மீர் குறித்த பேச்சுவார்த்தையில் ஈடுபட, இந்தியாவை வற்புறுத்த இந்த திட்டத்தை தயாரித்தோம். சர்வதேச அளவில், இந்த பிரச்னையை பேசுபொருளாக மாற்றவும் விரும்பினோம். எங்கள் நடவடிக்கைக்கு, அப்போதைய நவாஸ் ஷெரீப் அரசு கண்ணை மூடிக்கொண்டது,'' என முஷாரப் தெரிவித்தார்.* கடந்த 2008ம் ஆண்டு, நவ., 26ல் லஷ்கர்-இ-தொய்பா பயங்கரவாதிகள் மும்பையில் தாக்குதல் நடத்தினர். 10 பயங்கரவாதிகள் ஊடுருவி நடத்திய தாக்குதலில், 166 பேர் கொல்லப்பட்டனர். 100க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இதில், பாகிஸ்தான் பங்களிப்பு இருக்கிறது என அப்போது இந்தியா குற்றம் சாட்டியது. இதை முதலில் மறுத்தது பாகிஸ்தான். கடந்த 2018ல் இந்தியாவின் குற்றச்சாட்டை சரி என உறுதி செய்தார், பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப். இந்த தாக்குதலில் லஷ்கர் பயங்கரவாதிகளுக்கு நிதியுதவி அளித்த தஹாவுர் ராணா, பாகிஸ்தானை பூர்வீகமாக கொண்ட அமெரிக்க தொழிலதிபர். தற்போது அமெரிக்காவில் இருந்து கொண்டு வரப்பட்டு, இந்திய சிறையில் உள்ளார்.* இதேபோல், புல்வாமா, பஹல்காம் தாக்குதல் சம்பவங்களிலும், பாகிஸ்தான் பங்கு உறுதியாக தெரியவந்துள்ளது. சில நாட்களுக்கு முன், பாகிஸ்தான் ராணுவ அமைச்சர் க்வாஜா முஹமது ஆசிப், வீடியோ உரையாடலில், 'பாகிஸ்தான் பயங்கரவாத குழுக்களுக்கு நிதியுதவி அளித்து ஆதரவளித்து வருகிறது' என, பகிரங்கமாக ஒப்புக்கொண்டார்.* காஷ்மீர் மட்டுமின்றி, 2008ல் ஆப்கன் காபூல் இந்திய துாதரகம், 2011ல் காபூல் அமெரிக்க துாதரகம் ஆகியவற்றிலும் தாக்குதல் நடத்தினர். ரஷ்யா, பிரிட்டன், ஈரான் என பல்வேறு நாடுகளிலும் பாக்., ஆதரவு பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தி உள்ளனர்.* பாகிஸ்தானின் ரத்தத்தில் ஊறியது பயங்கரவாதம். இதில் இருந்து பாகிஸ்தானை எந்த விதத்திலும் பிரிக்க முடியாது. உலகின் மிகவும் மோசமான நாடு பாகிஸ்தான் என்ற இந்தியாவின் குற்றச்சாட்டையும், யாராலும் மறுக்க முடியாது.

ஒசாமா ஒளிந்திருக்க உதவி

அமெரிக்காவில் இரட்டை கோபுர தாக்குதல் நடத்திய சர்வதேச பயங்கரவாதி ஒசாமா பின் லேடன் பாகிஸ்தானில் உள்ள அபோதாபாத்தில் இருந்தவாறே உலகளவில் பயங்கரவாத செயல்களில் ஈடுபட்டு வந்தார். அமெரிக்க படைகள் அபோதாபாத்தில் தாக்குதல் நடத்தி, ஒசாமா பின் லேடனை ஒழித்துக்கட்டிது. இந்த அபோதாபாத்தில் தான் பாகிஸ்தான் ராணுவத்தின் பயிற்சிக் கல்லுாரி உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 7 )

Muralidharan S
மே 01, 2025 13:06

பாகிஸ்தான் பிரிவினை சமயத்தில், பாக்கிஸ்தானில் முஸ்லிம்கள் வாளெடுத்துக்கொண்டு தெரு தெருவாக சென்று ஹிந்துக்களை கொன்று குவித்தனர். பாகிஸ்தானை போன்றே ஹிந்து வெறுப்பு / விரோதம் - கான்-கிராஸ் ரத்தத்திலும் மரபிலும் ஊறியது. பிரிவினையின் போது காஷ்மீர் என்றுமே நமது பாரத நாட்டிற்கு தீராத தலைவலியாக இருக்கும்படி பார்த்து கொண்டவர்கள்தான் கான்-கிராஸ். இப்பொழுது தாக்குதல்களில் கூட உள்ளூர் மக்கள் ஆதரவு இல்லாமல்/புகலிடம் கொடுக்காமல் செய்து இருக்க முடியாது என்றே பல செய்திகள் வருகின்றன. துப்பாக்கி சூடு ஆரம்பித்த உடனே அல்லது அதற்க்கு முன்போ ஒரு உள்ளூர் வாசி அல்லாஹு அக்பர் என்று மூன்று முறை சொல்லும் வீடியோ வெளியே வந்து உள்ளது.. சுற்றுலா பயணிகள் மட்டும் தான் சிதறி ஓடினர். உள்ளூர் மக்கள் மற்றும் கடை வியாபாரிகள் எந்தவித சலனமும் இல்லாமல் இருந்தார்கள் என்று ஒரு சேனல் தெரிவிக்கிறது. அந்த பகுதியை வாகனங்களில் கடக்க முடியாது. நடந்தோ அல்லது குதிரைகளிலோ சென்றுதான் கடக்க வேண்டும். பாகிஸ்தான் தீவிரவாதிகள் எப்படி வந்தார்கள், எவ்வளவு நாட்கள் அங்கே தங்கி இருந்து திட்டம் தீட்டினார்கள். எப்படி எந்த வழியில் மறைந்தார்கள் அல்லது அங்கேயே இன்னமும் உள்ளூர் மக்களின் பாதுகாப்பில் இருக்கிறார்களா என்பது எல்லாம், முழு உண்மையும் விசாரணை முடிவில் வெளிவரும். அப்பொழுது எது உண்மை என்று புரியும். ஆனால், இந்த சந்தர்ப்பத்தை வைத்து வாய்க்கு வந்தபடி நமது தேசத்திற்கு எதிராகவும், பாகிஸ்தானுக்கு ஆதரவாகவும் வாந்தி எடுத்து திரியு கான்-கிராஸ் உள்ளிட்ட பல பாகிஸ்தான் ஆதரவு கட்சிகளை தடை செய்ய இதுவே நல்ல நேரம்.


Dharmavaan
மே 01, 2025 12:19

இவ்வளவு நாட்களில் ஆகியும் இவங்களை கண்டுபிடித்து அழிக்க முடியவில்லை. கேவலம் மம்தா/விஜயன், ஸ்டாலின் முஸ்லீம் ஆதரவு கட்டுப்படுத்த முடியவில்லை பலஹீனமான மத்திய அரசு


RAMAKRISHNAN NATESAN
மே 01, 2025 09:00

தவறு மூர்க்க மார்க்கத்தில் .....


Marai Nayagan
மே 01, 2025 07:42

சிந்திக்காமல் அந்த ஒரு புத்தக கருத்துக்களை யாரோ ஒரு துதுவர் க்கு அரேபியா மொழியில் ஒரு தேவ துதன கூறியதாக அவரின் பொய் கதைகளை அள்ளி விட்டு பகுத்தறிவு இல்லாத மூர்க்க கோழை கூட்டத்தை உருவாக்கி உலகில் அமைதி இல்லாமல் ஆக்கி விட்டது. திராவிட டாஸ்மாக் கூட்டம் அலுமினிய அண்டா பிரியாணிக்கு அடிமை ஆகி விட்டது. மக்களுக்கு இந்த மூர்க்க கருத்துக்கள் புரிய வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்துவது அவசியம். பகவத் கீதா என்னும் அறிய கருத்தை அறிமுக படுத்துவது நம் கடமை


நிக்கோல்தாம்சன்
மே 01, 2025 07:28

அந்த பாகிஸ்தானுக்கு ஆதரவு அளிப்பதில் இருந்து இந்தியா முஸ்லிம்கள் எவ்வளவு மத வெறி பிடித்தவர்கள் என்பதனை நமக்கு படம் போட்டு காண்பிக்கின்றனர் ஆனாலும் நாம் இந்து சகோதர/சகோதரி களுடன் இனைந்து அவர்களை அடக்காமல் பிஜேபி யை எதிர்க்கிறோம் என்று முட்டாள்களை முதல்வராகி அழகு பார்க்கிறோம் கடைசியில் மத வெறி பிடித்தவர்கள் பங்களாதேஸ் போன்ற நாடுகளில் இருந்து போதையை அவர்களின் மக்களோடு இம்போர்ட் செய்து கொண்டுள்ளார்கள் நமது நிம்மதியான வாழ்க்கை நமது மகன் , மகள்களுக்கு இனி கிடையாது என்பதனை உணரும்போத அரக்கர்கள் கையில் எல்லாம்


Rajan A
மே 01, 2025 07:13

இதற்கு பொறுப்பேற்க வேண்டியவர்கள் கான் கட்சி. அவர்கள் இருக்கும் வரை இப்படி தான் இருக்கும்


Kasimani Baskaran
மே 01, 2025 06:51

தன் நாடே அழிந்து பிச்சை எடுத்தாலும் பரவாயில்லை ஆனால் இந்தியா நிம்மதியாக இருக்கக்கூடாது என்ற சித்தாந்தம்தான் பாகிஸ்தானின் அடிப்படை கோட்பாடு. அதற்க்கு வசதியாக பாகிஸ்தான் தேசிய காங்கிரஸ் இந்தியாவை ஆண்டு அவர்களுக்கு உதவியது. சிறப்பு உரிமை என்ற பெயரில் காஷ்மீர் கொள்ளை அடிக்க, வன்முறை செய்ய ஏதுவாக இருந்து வந்தது. 370ஐ தூக்கிவீசியவுடன் சிறிது முயற்சியிலேயே வளர்ச்சி வருகிறது. சுற்றுலா சுபிட்சத்தை காட்டுகிறது.


சமீபத்திய செய்தி