உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / சேட்டை ரொம்ப ஜாஸ்தி தான்; ஐ.நா.,வில் புலம்பிய பாகிஸ்தானுக்கு அதே இடத்தில் இந்தியா பதிலடி

சேட்டை ரொம்ப ஜாஸ்தி தான்; ஐ.நா.,வில் புலம்பிய பாகிஸ்தானுக்கு அதே இடத்தில் இந்தியா பதிலடி

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

நியூயார்க்: 'எல்லை தாண்டிய பங்கரவாத தாக்குதலில் தொடர்ந்து ஈடுபட்டு வந்தால், கடுமையான விளைவுகளை சந்திக்க நேரிடும்' என பாகிஸ்தானுக்கு இந்தியா எச்சரிக்கை விடுத்துள்ளது.ஐக்கிய நாடுகள் பொதுச்சபையில் பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் உரையாற்றினார். அப்போது அவர் பேசுகையில், 'இந்தியா தனது ராணுவத் திறனை பெருமளவில் விரிவுபடுத்தி வருகிறது. பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரைக் கைப்பற்றுவதற்காக நடவடிக்கைகளை துவங்கி விட்டது. காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கிய சட்டப்பிரிவு 370 ரத்து செய்யப்பட்டதை இந்தியா திரும்ப பெற வேண்டும்' என குறிப்பிட்டார். இதற்கு, பதிலளிப்பதற்கான உரிமையை பயன்படுத்தி ஐ.நா., சபையில் இந்திய தூதரக அதிகாரி பவிகா மங்களானந்தன் பேசியதாவது:

கேலிக்கூத்து

பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப்பின் காஷ்மீர் பிரச்னைகள் குறித்த கருத்து கேலிக்கூத்தானது. பாகிஸ்தான் இந்திய பகுதிகளை ஆக்கிரமிக்க விரும்புகிறது. இந்தியாவின் பிரிக்க முடியாத பகுதியான ஜம்மு காஷ்மீரில் தேர்தலை சீர்குலைக்க பயங்கரவாத செயல்களில் ஈடுபட்டு வருகிறது.

பாசாங்குத்தனம்

உலகம் அறிந்தது போல், பாகிஸ்தான் நீண்ட காலமாக எல்லை தாண்டிய பயங்கரவாதத்தை அதன் அண்டை நாடுகளுக்கு எதிரான ஆயுதமாக பயன்படுத்தியுள்ளது. அத்தகைய நாடு வன்முறையைப் பற்றி எங்கும் பேசுவது பாசாங்குத்தனம். இந்தியாவிற்கு எதிரான எல்லை தாண்டிய பயங்கரவாத செயல்களில் தொடர்ந்து ஈடுபட்டு வந்தால் கடுமையான விளைவுகளை சந்திக்க நேரிடும் என்பதை பாகிஸ்தான் உணர வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 12 )

Ganesh Subbarao
செப் 30, 2024 12:39

இஸ்ரேவேலியர்களுக்கு நாட்டு பற்று அதிகம். இங்கே இருப்பவர்கள் நாடு பற்று இல்லா சுயானலவாதிகள். இவர்களை வைத்துக்கொண்டு அவர்களை போல் செயல்படுவது இயலாத காரியம்


Ramasubbu.K
செப் 29, 2024 09:41

இந்தியாவின் பதிலடி இஸ்ரேலை போன்று இருக்க வேண்டும்...இந்தியாவில் ஒரு உயிர் தீவிரவாத செயலால் போனால் அங்கே குறைந்தது 100 பேர் மடிய வேண்டும். இந்திய உளவுத்துறை மொசாட் உடன் சேர்ந்து செயல் பட வேண்டும்


Sethuraman
செப் 28, 2024 21:06

பிச்சை எடுக்கும் நிலைக்கு வந்தும், நீங்கள் மாறவில்லை என்றால், உன் தலை விதியை யாராலும் தடுக்க முடியாது.வினைவிதைத்தவன், வினை அறுப்பான்.


Ravi Kulasekaran
செப் 28, 2024 20:36

தீபாவளி ஆக்ரமிப்பு கஷ்மீரா து புக்கள் பாவங்கள்


M Ramachandran
செப் 28, 2024 15:56

நாம் பாகிஸ்தான் நாட்டைய்ய பிடித்து மாகாணம் வாரியாகா குட்டி குட்டி நாடாகா பிரித்து கொடுத்து விட்டால் பிரியாணி தின்னுட்டு அவர்களுக்குள் புனிதப்போர் நடத்தி கொண்டிருப்பார்கள். நாம் நிம்மதியாக வேறு காரியத்தை பார்க்கலாம். இப்போ இஸ்ரேலால் செலவானாலும் பயன்தாங் கொல்லி களாக இல்லாமல் தக்கபடி பதில் அளித்து கொண்டிருக்கிறார்கள்.


Bahurudeen Ali Ahamed
செப் 28, 2024 15:50

மிகசரியான பதிலடி, எவ்வளவு வாங்கினாலும் பத்தாது அவர்களுக்கு


Hari
செப் 28, 2024 14:38

பாக்கிஸ்தாநுக்கு எதிராக பேசினால் நிங்கள் இந்துத்துவா சங்கி என்று முத்திரை உண்டு


Bala Rajen Bala Murugan
செப் 28, 2024 23:49

உங்கள் தமிழ் சூப் மாதிரியிருக்கு ? வெளிய சொல்லிடாதீங்க நீங்கள் தமிழன் என்று ???


Kumar Kumzi
செப் 28, 2024 11:24

வாலை ஒட்ட நறுக்கணும்


Mohan
செப் 28, 2024 11:13

நீங்க இப்படியே பேசிக் கொண்டிருங்க. பாக்கிஸ்தான் காதை மூடிக்கொண்டிருக்கிறது. அவங்க பாருங்க, பங்களாதேசி மாணவர்களை, இளைஞர்களை,கண்மூடித்தனமாக பல்கலைக்கழகத்தில் நாய்களை போல சுட்டுக் கொன்ற பாகிஸ்தான் ராணுவ அதிபரை பங்களாதேச யூனுஸ்மாணவர்கள் தயவால் அதிபர் ஆனவர் , வெட்கமில்லாமல் சந்தித்தது இந்தியாவுக்கு எச்சரிக்கை. அடிப்படைவாதிகள் என்றுமே ஒன்னாகிவிடுவர். உஷார் இந்தியா உஷார்


Raja
செப் 28, 2024 10:47

சரியான நெற்றியடி. சூப்பரோ சூப்பர்.


சமீபத்திய செய்தி